பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

183


சுமேரியாவிலும் கையாளப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட எருமை, குரங்கு, வெள்ளாடு என்பன பார்க்கத் தக்கவை; சிறந்த முறையில் அமைந்துள்ளவை.

ஓவியக் கலை

சிந்து வெளி மக்களின் ஒவியத் திறமை அவர் தம் மட்பாண்டங்களிலிருந்தே அறியப்படுகின்றது. அங்குக் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் மீது தீட்டப்பட்டுள்ள ஒவியங்கள் மிகத் தெளிவாக அக்கால நிலையையும் நாகரிகத்தையும் உணர்த்த வல்லவையாக இருக்கின்றன. அவை வரலாற்றுக் காலத்து ஒவியங்கட்கு முற்பட்ட ஓவியக் கலையை அளவிட்டு அறியப் பேருதவி புரிகின்றன. ஒரு வட்டத்திற்குள் பல வட்டங்கள் இட்டுள்ள முறை போற்றுதற்குரியது. பல பாண்டங்கள் மீது மரங்கள், இலைகள், இலைக்கொத்துகள், சதூக்கட்டங்கள், குறுக்கும் நெடுக்குமாக உள்ள முக்கோணங்கள், பறவைகள், பாம்புகள், மீன்கள், காட்டு எருமைகள், மலை ஆடுகள்,மயில்கள், மான்கள், கப்பல்கள் ஆகியவற்றின் உருவங்கள் ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து வரும்தொன்மை நாகரிகம்

இவையன்றி, மிக்க வேலைப்பாடுகள் அற்ற சிலைகளும் ஒவியங்களும் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சிந்து கங்கை வெளிகளிலும் பரவி இருக்கின்றன. ஆதலின், சிந்து வெளிப் பண்டை நாகரிகம் கங்கை வெளியிலும் பரவி இருந்தமை நன்கு புலனாகின்றது. மேலும் அப்பண்டைக் காலச் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் வரலாற்றுக்காலம் வரை தொடர்ந்து கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தமை வெளியாகின்றது. பாடலிபுரத்தில் அகப்பட்ட மோரியர் காலத்து மட்பாண்டங்களும் சிந்து வெளியின் மட்பாண்டத் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றன. சிந்து வெளி நாகரிக காலத்திற்கும் வரலாற்றுக் காலத்திற்கும் - இடையில் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருந்த போதிலும் வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாகி இருப்பினும் -