பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மொஹெஞ்சொ - தரோ


தாயித்துகள் மொஹெஞ்சொ-தரோவிலும், ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன.[1]

மர வணக்கம்

சிந்துவெளி மக்கள் மரங்களையும் அவற்றில் உறையும் தெய்வங்களையும் வழிபட்டு வந்தனர் என்பது மொஹெஞ்சொ. தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்த சில முத்திரைகளிலிருந்தும் வில்லைகளிலிருந்தும் தெரிகிறது. இப்பழக்கம் தமிழகத்தில் இன்றும் பெருவழக்கு உடையதாகும். அரச மரமே சிறப்புடைய வணக்கத்திற்கு உரியது. ஆனால், அஃது எருதுடன் இணைக்கப் பட்டே முத்திரைகளில் காணப்படுகிறது. சில முத்திரைகளில் வேப்பமரம் காணப்படுகிறது. தமிழ் மக்கள் அரச, வேப்ப மரங்களைச் சுற்றுதலையும் இரண்டு மரங்களையும் சிறப்புடை யனவாகக் கருதுதலையும் இன்றளவும் காணலாம். மரத்தடியில் மேடையிட்டிருத்தலும் அக்கால முறை என்பது சில தாயித்துகளிலிருந்து அறியக் கிடக்கிறது. மரத்தடியில் எருமை ஒன்று நிற்கிறது. அதன் கொம்புகளால் தாக்குண்ட ஒருவன் உட்புறம் வீழ்ந்து கிடக்கிறான். இங்ஙனம் எருமைகளோடு விளையாடல் பண்டை வழக்கம் இவ்வழக்கம் கிரீட் தீவிலும் இருந்ததாம்.

மர தேவதைகள்

சில முத்திரைகளில் உள்ள சித்திரங்கள் விநோதமாகக் காணப்படுகின்றன. ஒரு மரத்தின் இரண்டு கிளைகட்கு இடையில் ஆடையின்றிப் பெண் உருவம் ஒன்று நிற்கின்றது. அதன் கூந்தல் அவிழ்ந்து தொங்குகிறது. மரத்தடியில் ஆடையற்ற மற்றொரு பெண்ணுருவம் மண்டியிட்டுவண்ங்குகிறது. மரத்தின்மீது நிற்கும் பெண்ணுருவத்தின் தலையில் இரண்டு கொம்புகளும் அவற்றுக்கு


  1. இக்கருடவணக்கம் பிற்காலத்தில் திருமால் வணக்கத்தோடு இணைப்புண்டு விட்டது.எனினும், ஹிந்துக்கள் கருடனைக் காணும்பொழு தெல்லாம் வணங்குதலை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.