பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

9

என்னென்பது ஆராய்ச்சியிற் கிடைத்த மட்பாண்டங்கள் மீது ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன; பல நிறங்கள் பூசப்பட்டுள்ளன; பானைகளும் பிறவும் பெரும்பாலும் தட்டையான அடியுடையனவாகவே காணப்படுகின்றன; பிரமிட் கோபுரங்களிலும் பிற இடங்களிலும், அப் பண்டை மக்கள் பயன்படுத்திய சித்திர எழுத்துக்களும் விலங்கு பறவைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர் அவற்றைப் பல ஆண்டுகள் முயன்று படித்து முடித்தனர்; அதன் பின்னரே எகிப்தின் வரலாற்றை ஒழுங்காக எழுதலாயினர்.

பாலஸ்தீனம்

இப்பகுதி, உலகத்திலுள்ள கிறிஸ்தவ சமயத்தினர் அனைவரும் போற்றத்தக்கதாகும். ஆதலின், இப்பகுதியில் உள்ள ஆராய்ச்சிக்குரிய மண்மேடுகளைத் தோண்டி உண்மைச் செய்திகள் பலவற்றை அறிய அவாக்கொண்ட அறிஞர் குழு ஆராய்ச்சி வேலையைத் தொடங்கியது. அக்குழு பிரிட்டிஷ் அறிஞர் சிலரையும் அமெரிக்க அறிஞர் சிலரையும் கொண்டதாகும். பைபிளிற் காணப்பட்ட நகரங்களைக் கண்டுபிடித்தலே இவ்வறிஞர்களின் முக்கிய நோக்கமாகும். இவர்கள் ஆராய்ச்சி நடத்தியதின் பயனாய்ப் பல நகரங்கள் வெளிப்பட்டன. அவற்றுள் சொதம் (Sodum), கொமொராஹ் (Gomorrah), ஜெரிகோ (Jericho), மம்ரி (Mamre), கிர்ஜாத் செபர் (Kiriath - Sepher) முதலியன குறிப்பிடத்தக்கன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் இந்நகரங்களில் இருத்தலைக் கண்டு அறிஞர்கள் வியப்பும் மகிழ்ச்சியும் எய்தினர். சில நகரங்களில் இருந்த சவப்பெட்டிகளுள் சிப்பி ஓடுகள், மணிகள், பல நிறங்கொண்ட கண்ணாடிகள், விலை உயர்ந்த கற்கள் முதலியவற்றால் ஆன மாலைகள் முதலியன காணப்பட்டன. அவற்றோடு மாலைகளில் இணைக்கப்படும் பதக்கங்களும் காணப்பட்டன. அவை முத்துச் சிப்பி, எலும்பு, முத்துக்கள் பன்னிறக் கண்ணாடித் துண்டுகள் இவற்றைக் கொண்டு செய்யப் பட்டவை ஆகும் பலவகை மட்பாண்டங்களும் கண்டெடுக்கப்