பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

11


மெசொப்பொட்டேமியா

இந்நிலப்பகுதி ஸ்காட்லண்ட் அளவுடையது; டைக்ரிஸ் யாற்றுக்கு மேற்கே அமைந்திருப்பது இதன் பெரும் பகுதி சிறு மலைத் தொடர்களைக் கொண்ட பாலை நிலமாகும். ‘கப்பூர், பலீக்’ என்னும் யாறுகள் இந்நாட்டிற் பாய்ந்து யூப்ரேடிஸ் யாற்றில் கலக்கின்றன. அவற்றின் கரையோரங்களில் மட்டுமே பயிர் செய்ய வசதி உண்டு. இதற்கு வடகிழக்கே கொள்ளையடிக்கும் மலை நாட்டார் வசித்து வந்தனர். சுருங்கக் கூறின், மெசொப் பொட்டேமியா சிறிது வளமுடையது - பெரிதும் வளமில்லாதது; சிறிதளவு பயிர் உடையது - பெரிதளவு பாறை உடையது; சில இடங்களில் நீர் வசதி உடையது பல இடங்களில் நீர் வசதி அற்றது.

ஏலம்

ஏலம் என்பது பாபிலோனியாவுக்குக் கிழக்கே உள்ள சிறிய நிலப்பரப்பாகும்; சிறிதளவு மலைப்பகுதி உடையது. இதன் தலைநகரம் சுசா. மற்றொரு சிறந்த நகரம் ‘அன்சன்’ என்பது. இப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அடிக்கடி வடக்கே இருந்த அசிரியரோடு போரிட்டு வந்தனர். அசிரியர் கி.மு.650-இல் இப்பகுதியில் இருந்த மக்களை வென்று அடிப்படுத்தினர். அசிரியரது பேரரசு வீழ்ந்த பிறகு ஏலம், பாரசீகப் பேரரசில் கலந்து மறைந்தது.

இந்நான்கு இடங்களிலும் நடந்த ஆராய்ச்சி

இந் நான்கு நிலப் பகுதிகளிலும் பற்பல இட்ங்களில் மண்மேடுகள் இருந்து வருகின்றன. மேனாட்டு அறிஞர்கள் முதன் முதலாக அசிரியாவில் உள்ள மோசுல் என்னும் இடத்திற்கு அருகில் இருந்த ‘நினவெஹ்’ என்ற பழைய நகரத்தையும் பாபிலோனியாவில் ‘ஹில்லஹ்’ என்னும் இடத்திற்கு அருகில் இருந்த மண்மேட்டையும் வெட்டி ஆராய்ச்சி நடத்தினர். இவ் வாராய்ச்சியினால் அசிரியரைப் பற்றியும் பாபிலோனியரைப் பற்றியும் இவ்விருவர்க்கும் முற்பட்ட சுமேரியரைப் பற்றியும்