பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகை கோணத்தில் வைத்து இச் சோதனை யைத் திரும்பவும் செய்திடுக. குழல் செங் கோணத்திலிருக்கும்பொழுது மீண்டும் இச் சோதனையைச் செய்திடுக. மூன்று இடங்களின் அளவுகளையும் ஒப்பிட்டு ஒவ்வொன்றின் பரப் பினேயும் தீர்மானித்திடுக. ஞாயிற்றினிடமிருந்து பெறும் வெப்ப, ஒளி அளவுகள் அதன் கதிர்கள் சாய்ந்த நிலையில் இருக்கும்பொழுது அதிகம் உள்ளதா ? அல்லது நேராக விழும் பொழுது அதிகம் உள்ளதா? 9. ஒரு நிழற் கழியினே அமைத்தல் : பள்ளியின் ஆடுகளத்தில் வெட்டவெளியில் 130 செ.மீ. நீளமுள்ள கழி ஒன்றன. நடுக ; பிள்ளைகள் ஆண்டின் வெவ்வேறு பருவங்களி லும் நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் நிழலின் நீளத்தை அளந்து அவை பற்றிய குறிப்புக்களடங்கிய பதிவேட்டினை வைத்துக்கொள்ளட்டும். D. பூமியுடன் தொடர்புள்ள சோதனைகள் 10. நாளுக்குநாள் ஒரு குறிப்பிட்ட மணியில் ஞாயிற்றுக் கதிர்களின் கோணம் எங்ங்னம் மாறுகின்றது என்பதற்குச் செயல் விளக்கம் தருதல்: ஒரு துண்டுத் தாளில் அல்லது அட்டைத் துண்டில் ஒரு 1 செ. மீ. அளவுள்ள வட்டமான துளையினை வெட்டுக. ஞாயிற்றின் கதிர்கள் குழலின் வழியாக ஒளிர்ந்து தரை அல்லது மேசையின்மீது அல்லது சாளரத்தின் அருகில் வைக்கப்பெற்றுள்ள ஒரு வெள்ளைத் தாளின் மீது விழும்படியான முறையில் வகுப்பறையில் தெற்குப் புறத்திலுள்ள ஒரு சாளரத்தில் இந்த அட்டைத் துண்டினை வைத்திடுக. ஞாயிற்றின் ஒளிக்கற்றை தாளின்மீது விழும் இடத்தின் எல்லைக் கோட்டினை வரைந்திடுக. எல்லைக்கோட்டின் உட்புறத்தில் நாளி னே யும் மணி நேரத்தினையும் எழுதுக. அடுத்துவரும் நாட்களில் சரியாக அதே மணி நேரத்தில் இச் சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்க. E. மதியுடன் தொடர்புள்ள சோதனைகள் 1. மதியின் மேற்பரப்பை உற்றுநோக்கல்: இந்த இயலின் தொடக்கத்தில் A-2இல் விவரிக்கப் பெற்ற சிறிய தொலைநோக்கி அல் லது ஓர் இணைப்புலக்கண்ணுடிகளைப் பயன் படுத்துக. மதியின் மேற்பரப்பினை ஆராய்க ; மலேகள் அதன் எரிமலை வாய்கள் (craters), இவற்றுள் ஏதாவது பார்க்க முடிகின்றதா என் பதைக் காண்க. 2. மதியின் பிறைகளே உற்றுநோக்கல் : ஒரு சந்திரமாதம் (நட்சத்திரமானம்) முழு வதிலும் மாளுக்கர்களை இரவுநேர உற்று நோக் கல்களை மேற்கொள்ளுமாறும் மதியின் ஓவியங் களை வரையுமாறும் செய்திடுக. ஒரு முழு மதியத் தன்று இதனைத் தொடங்கி நான்கு கலைக் கூறுகளிலும் (phases) தொடர்ந்து செய்திடுக. 3. மதியின் பிறைகட்குரிய காரணத்திற்குச் செயல் விளக்கம் தருதல்: இருட்டாகச் செய்யப்பெற்ற ஓர் அறையில் ஒரு மேசையின்மீது ஒர் ஏற்றிய மெழுகுவத்தி அல்லது மின் விளக்கினை வைத்திடுக. 8 செ.மீ. அளவுள்ள இரப்பர்ப் பந்தின்மீது வெண்ணிறப் பூச்சினைப் பூசுக. ஒளியின் பக்கம் உங்கள் முதுகு இருக்குமாறு இருந்துகொண்டு புய நீளத்திற்குக் கையை நீட்டி அதில் பந்தினைப் பிடித்துக்கொள்க. பந்தின்மீது ஒளிபடுவதற் காக உங்கள் தலைக்குமேல் தேவையான அளவு பந்தினை உயர்த்துக. மெழுகுவத்தியால் ஒளி பெறச் செய்யப்பெற்ற பந்தின் பகுதியைக் கவனித்திடுக. இது முழுமதியத்தை உணர்த்து கின்றது. பந்தினை உங்களுக்கு முன்னலும் தலைக்குமேலும் வைத்துக்கொண்டு இப்பொழுது மெதுவாகத் திரும்புக. நீங்கள் முற்றிலும் திரும் பிய பிறகு பந்தின் ஒளிபெற்ற பகுதியின் வடிவத்தில் மாற்றத்தினை உற்றுநோக்குக. மதியின் பல்வேறு பிறைகளை நீங்கள் காண் கின்றீர்களா ? இங்ங்ணம் திரும்புவதைத் திரும்பவும் செய்க ஆளுல் ஒவ்வொரு எட்டில் ஒரு பாகம் திரும்பும் பொழுதும் நிறுத்தி வேருெருவரைக் கொண்டு ஒளிபெறப் பெற்ற 'மதியின் (பந்து) வடிவத்தை வரையச் செய்யப் பெறல்வேண்டும். 87