பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. காற்றின் அமுக்கத்தைக் குறைத்திடுவதால் சில விளைவுகளைக் காட்டுதல் 2. அமுக்கப்பெற்ற காற்றினைக்கொண்டு ஒரு "பீறிடும் சாதனத்தை ('Gusher) அமைத்தல்: சோடா நீருக்குப் பயன் படுத்தப்பெறுவதைப் போன்ற குறுகிய கழுத்தினைக் கொண்ட ஒரு பெரிய புட்டியைக் கைவசப்படுத்துக. அந்தப் புட்டியில் ஒரு - துளை யை க் கொண்ட ஓர் அடைப்பானைப் போடுக. இந்த அடைப்பானின் வழியாக ஒரு 10 செ. மீ. நீளமுள்ள கண்ணுடிக் குழலை அமைத்திடுக ; இந்தக் குழலின் வெளிப் புற நுனி ஒரு கூர் நுனியாக அமைக்கப்பெற் நிருப்பதைக் காண்க. ஒரு சிறு இரப்பர்க் குழலினக்கொண்டு இக் குழலின் மற்ருெரு நுனியுடன் புட்டி யின் அடிமட்டம்வரை நீண்டிருக் கக்கூடிய ஒரு கண்ணுடிக் குழலை இணைத்திடுக. புட்டியைக் கிட்டத் தட்டப் பாதியளவு நீரால் நிரப்புக. அடைப்பான உறுதியாகச் செருகி அதனை உங்கள் விரல்காளால் பிடித்துக் கொள்க. அடுத்து, புட்டி யினுள் பலமாக ஊதுக ; அமுக் கத்தை விடுவிக்கும்பொழுது உங் களுக்கு அப்பாலிருக்குமாறு புட்டியைத் திருப் புக என்ன நிகழ்கின்றது? 3. அமுக்கப்பெற்ற கா ற் று விளையாட்டுத் துப் பாக்கி : 1 அல்லது 2 செ. மீ. குறுக்களவும் 15 அல் லது 25 செ. மீ. நீளமும் உள்ள நேரான ஒரு நீண்ட கண்ணுடி அல்லது பி ள ஸ் டி க் குழலைப் பயன்படுத்துக. குழலில் ஒரு பென் சில் இறுக்கமாகப் பொருந்தும்படி சிறிதளவு ஏதாவது கயிற்றினைச் சுற்றி அதனை ஒர் உந்து தண்டாக்குக. கு ழ லி ன் துனியில் ஒரு சிறு தக்கையை வைத்து உந்து தண்டினை விரைவாக உள்ளே தள்ளுக. என்ன நேரிடுகின்றது ? 4. அமுக்கப்பெற்ற காற்றினைக்கொண்டு பொருள் களை உயர்த்துதல் : ஒரு கால் பந்து அல்லது கூடைப் பந்தின் உள் இரப்பர்ப் பையை (Bladder) அகற்றி அதனை ஒரு மேசையின்மீது வைத்திடுக. அந்த இரப்பர்ப் பையின்மீது சில புத்தகங்களை அடுக்கி அதனுள் காற்றினை ஊதுக. 5. கிளுகிளு' ஒலிம் புட்டியை அமைத்தல் : ஒரு புனலைத் தாங்கியுள்ள ஓர் ஒரு-துளை அடைப்பான ஒரு புட்டி அல்லது குடுவையுடன் பொருத்துக. புட்டியில் உறுதியாக ஒர் அடைப் பானை வைத்திடுக; அதன்பிறகு புனலில் நீரினை ஊற்றுக. ஒழுங்கான இடைவேளைகளில் புட்டி "கிளுகிளு' என்ற ஒலியினை உண்டாக்கும். 1. காற்றின் அமுக்கத்தைக் குறைத்திடுவதால் சில விளைவுகளைக் காட்டுதல் 1. காற்றின் அமுக்கத்தால் நீரை உயர்த்துதல் : ஒரு சோதனைக் குழலே ஓர் ஒரு-துளை தக்கை யுடனும் கண்ணுடிக் குழலுடனும் பொருத்துக. அதில் சி றி த ள வு நீரைக் கொதிக்கவைத்து காற்றினை அகற்றுக. கண்ணுடிக் குழலின் திறந் துள்ள முனை ஒரு சாடியிலுள்ள நீரின் மேற்பரப் மீன்கீழ் இருக்குமாறு இந்த அமைப்பினைக் கவிழ்த்திடுக. சோதனைக் குழல் கிட்டத்தட்ட முற்றிலும் நிரம்பும்வரையிலும் வளிமண்டல அமுக்கம் நீரினை மேல்நோக்கிச் செலுத்தும். 102