பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கள் என்ன காரணங் கூறுவீர்கள் ? நீர் எங்குச் சென்றடைந்தது ? 3. ஈரத்தைத் திரும்பவும் எடை காணல் : இதே சோதனை நீராட்டுத் துண்டினைக் கொண்டும் செய்யப்பெறலாம். துண்டினை நனைத்து அதனைப் பிழிக. அதனை ஒரு மேலங் கியைத் தொங்கவிடும் சாதனத்தில் தொங்க விடுக. மேலங்கியைத் தொங்கவிடும் சாத னத்தை ஒரு மேசையின் மூலையில் ஒரு முக் கோண அரத்தின்மீது சமநிலையாக்கப்பெற் றுள்ள ஒரு நீண்ட கழியின் ஒரு முனையில் தொங்கவிடுக. 4. மண்ணினின்றும் ஈரம் ஆவியாகின்றது : ஒரு மலர்ச் சட்டியை ஈர மண்ணினல் நிரப்பி அதனை ஒரு தராசின்மீது வைத்திடுக. மண்ணைக்கொண்ட மலர்ச்சட்டியை எடைகளைக் கொண்டு சமநிலையாக்குக ; அல்லது அதன் எடையை உற்றுநோக்குக. 24 மணி நேரம் கழித்து மீண்டும் அதன் எடையை உற்று நோக்குக. 5. வீ ட் டு த் தாவரங்களினின்றும் ஈரம் வரு கின்றது : ஏதாவது ஒரு வீட்டுத் தாவரம் அல்லது தோட்டத் தாவரத்தின் ஓர் இலையின்மீது ஒரு செல்லோஃபேன் பையினை வைத்துத் தண்டி னருகிலுள்ள அதன் முனையை ஓர் இரப்பர்ப் பட்டையினல் மூடிவிடுக. ஒரு மணி நேரங் கழித்து அதனை உற்றுநோக்குக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? நீங்கள் காண்பது எங்கிருந்து வந்தது ? 6. வேறு தாவரங்களின்றும் ஈரம் வருகின்றது : 10 அல்லது 15 செ.மீ. உயரமுள்ள ஏதாவது மொச்சை அல்லது பட்டாணி நாற்றுக்களைக் கொண்ட ஒரு மலர்ச் சட்டியினைக் கைவசப் படுத்துக. சட்டியின் உச்சியை செல்லோ ஃபேன் அல்லது இரப்பர்த் தகட்டினைக் கொண்டு மூடிவிடுக ; சிறிதுகூட மண் திறந்த நிலையில் இல்லாது இருப்பதற்கேற்ப அத் தகட்டினைத் தாவரங்களின் தண்டுகளைச் சுற்றி லும் நெருக்கமாகக் குண்டு சிகளைக் குத்திவிடுக. C. காற்றினுள் எங்ஙனம் ஈரம் சென்றடைகின்றது ? தாவரங்களின்மீது ஒரு தூய்மையான, உலர்ந்த கண்ணுடிச் சாடியினைக் கவிழ்த்து, ஒரு மணி நேரம் கழிந்த பிறகு உற்றுநோக்குக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? அப்படிக் காண்பது எங்கிருந்து வந்தது ? 7. மூச்சுவிடலினின்றும் ஈரம் : ஒரு குளிர்ந்த ஆடியின் (Mirror) மீதோ அல்லது குளிர்ந்த கண்ணுடியின்மீதோ அல் லது புட்டியின்மீதோ ஊதி மூச்சுவிடலினின்றும் வரும் ஈரம் காட்டப்பெறலாம். 8. வாயு சுவாலேயினின்றும் ஈரம் : குளிர்ந்த நீரினைக்கொண்ட தட்டொன்றினே ஒரு சில விநாடிகள் நேரம் ஒரு வாயு அடுப்பின் மீது வைத்து, சுவாலையினின்றும் வரும் ஈரம் காட்டப்பெறலாம். நெருப்பினின்றும் தட்டினே அகற்றி அதன் அடிமட்டத்தினை உற்று நோக்குக. 9. மற்ற சுவாலேகனினின்றும் ஈரம் : ஒரு மெழுகுவத்தியின் சுவாலையை ஒரு குளிர்ந்த கரும்பலகையின் அருகில் கொண்டு வருக. ஒரு வாயு அடுப்பின் சுவாலே, சாராய விளக்கினின்றும் வரும் சுவாலே, ஒரு துண்டுத் தாள் எரிவதால் உண்டாகும் சுவாலை, எரியும் துண்டுக் கட்டையினின்றும் எழும் சுவாலை ஆகியவற்றைப் பயன்படுத்தி இச் சோதனை யைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? நீங்கள் காண்பது எங்கிருந்து வந்தது ? 10. ஆவியாதலின் வீதத்தை (Rate) பரப்பு பாதிக்கின்றது : 50 மி. மீ. நீரை அளந்து அதனை அளக்கும் பாத்திரத்தைவிட அதிகமான குறுக்கு விட்டத் தைக்கொண்ட கொள்கலம் ஒன்றில் ஊற்றுக. திரும்பவும் அளக்கும் பாத்திரத்தில் 50 மி. மீ. நீரினை அளந்திடுக. வெப்பநிலையும் காற்றின் இயக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கக்கூடிய இடத்தில் அவற்றை ஒன்றற்கொன்று அருகி லிருக்குமாறு வைத்திடுக. மறுநாள் ஒவ்வொரு கொள்கலனிலுமுள்ள நீரினே அளந்து காண்க. ஆவியாதலின் வேறுபாட்டிற்கு எது காரண மாகின்றது ? 123