பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. காற்றினின்றும் ஈரம் எப்படி வருகின்றது ? 11. ஆவியாதலின் வீதத்தை வெப்பநிலை பாதிக் கின்றது : ஒரு கரும்பலகை அல்லது கற்பலகையின் மீது ஓரிடத்தை வெதுவெதுப்பாக்குக ; மெழுகுவத்தியினைக்கொண்டோ அ ல் ல து பலகையினை வெயிலில் வைத்தோ இதனை நிறைவேற்றலாம். இந்த வெதுவெதுப்பான பரப்பின்மீதும் மற்ருெரு குளிர்ச்சியான பரப் பின்மீதும் சம அளவுள்ள நீர்ப் பொட்டுக்களை வைத்திடுக. பொட்டுக்களை உற்றுநோக்கி என்ன நேரிடுகின்றது என்பதைக் காண்க. 12. ஆவியாதலின் வீதத்தை அசையும் காற்று பாதிக்கின்றது : ஓர் ஈரமான கடற்பஞ்சு அல்லது துணியைக் கொண்டு ஒரு குளிர்ச்சியான கரும்பலகையின் மீது சற்று இடைவெளியிருக்குமாறு சம அளவுள்ள பொட்டுக்களை உண்டாக்குக. ஒரு சிறிய அட்டைத் துண்டினைக்கொண்டு ஒரு பொட்டினை விசிறுக; ஏனையவற்றை விசிருமல் விட்டுவிடுக. ஒரு ஆவியாதலில் உள்ள வேறுபாட்டிற்கு எது காரணமாகின்றது ? 13. ஆவியாதலின் வீதத்தைக் காற்றிலுள்ள ஈரம் பாதிக்கின்றது: சுமார் 30 செ. மீ. சதுரமும் சுமார் 3 செ. மீ. கனமும் உள்ள ஒரு மர வளையம் அல்லது சட்டத்தின்மீது ஏதாவது ஒரு துணியை இணைத்து அதனை நனைத்திடுக. அடுத்த படியாக ஒரு கடற்பஞ்சு அல்லது ஈரத்துணி யைக்கொண்டு ஒரு குளிர்ந்த கரும்பலகைப் பரப்பின்மீது இரண்டு ஈரப் பொட்டுக்களை உண்டாக்குக. ஈரத் துணியைக் கொண்டுள்ள சட்டத்தினுல் ஒரு பொட்டினை மூடுக ; மற் ருெரு பொட்டினைத் திறந்த நிலையிலேயே விட்டு விடுக. ஒரு சில விநாடிகள் கழித்து இரண்டு பொட்டுக்களையும் உற்றுநோக்குக. எந்தப் பொட்டு அதிக வேகமாக ஆவியாயிற்று ? எங்ங்னம் ஈரக் காற்று (சட்டத்தின் கீழுள் ளது) ஆவியாதலின் வீதத்தைப் பாதிக் கின்றது ? . D. காற்றினின்றும் ஈரம் எப்படி வருகின்றது ? 1. குளிர்ந்த மேற் பரப்புக்களின்மீது திரவமாகச் சுருங்குகின்றது : ੋ சிறிதளவு பனிக்கட்டியை ஒரு பளபளப் பான தகரக் குவளையில் வைத்திடுக. சிறிது நேரம் கழிந்ததும் குவளையின் வெளிப்புறத்தை உற்றுநோக்குக. நீங்கள் என்ன காண்கின் lர்கள் ? நீங்கள் காண்பது எங்கிருந்து வந்தது ? 2. நீர் வட்டம் : சிறிதளவு நீரை அது கொதிநிலையை அடை யும்வரை சூடாக்குக. அதை ஒரு நீர் பருகும் கண்ணுடிப் பாத்திரத்தில் வைத்து உச்சி வரையில் அதன் பக்கங்கள் ஈரம் ஆவதற் கேற்றவாறு அப்பாத்திரத்தைச் சுழற்றுக. ஒரு மின் குமிழினின்றும் செய்யப்பெற்ற குடுவை அல்லது ஃபிளாரென்ஸ் குடுவை போன்ற ஓர் உருண்டையான குடுவையில் சிறி தளவு மிகக் குளிர்ந்த நீரினை வைத்திடுக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு குடுவையைக் கண்ணுடிப் பாத்திரத்தின்மீது ஒரு கோணத்தில் வைத்திடுக. சூடான நீரி னின்றும் நீர் ஆவியாகி, குடுவையின் குளிர்ந்த மேற்பரப்பின்மீது திரவமாகச் சுருங்கி கண் ளுடிப் பாத்திரத்தினுள் திரும்பவும் சொட்டுச் சொட்டாக விழும். இங்கு நீங்கள் ஆவியாதல், திரவமாகச் சுருங்குதல், நீராக வீழ்தல் ஆகிய மூன்றையும் காண்கின்றீர்கள். இயற்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீர் வட்டத்தை நீங்கள் கண்டுவிட்டீர்கள். 124