பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. ஆழ்தலும் மீதத்தலும் ஒரு பெரிய புட்டியைப் பயன்படுத்தி இச்சோத னையைத் திரும்பவும் செய்க. தேவையான விசையின் அளவில் ஏதாவது வேற்றுமை காணப்பெறுகின்றதா? ஒரு விளையாட்டுப் பலூனைக் காற்றில்ை உப் பச் செய்து அதனை ஒரு தொட்டி நீரின் அடிமட் டத்திற்கு அமிழ்த்துக. அதனைக் கீழே பிடித்துக் கொள்வதற்குத் தேவையான விசையின் அளவு, தக்கையையும் புட்டியினையும் பிடித்துக் கொள் வத்ற்குத் தேவையான விசையின் அளவு களுடன் எங்ங்ணம் ஒப்பீடாக உள்ளது? 5. நீரின் மிதக்குந் தன்மையை உற்றுநோக்கும் பிறிதொரு வழி: ஒரு சிறு சுருட்டுத் தகரக் கலம் அல்லது ஒரு காஃபிக் குவளை போன்ற இறுக்கமாகப் பொருந்தும் மூடியுடன் கூடிய ஒரு குவளையை அடைக. குவளையை நீரினுல் நிரப்பி மூடியைப் போடுக. குவளையின் பக்கத்தைச் சுற்றிலும் ஓர் இரட்டைக் கயிற்றுக் கண்ணியை அமைத்து அதன் பிறகு கயிற்றின் மற்ருெரு முனையில் ஒரு பெரிய இரப்பர்ப் பட்டையினை இணைத் திடுக. இரப்பர்ப் பட்டையினைப் பிடித்துக் கொண்டு குவளையை உயர்த்தி இரப்பர்ப் பட்டை எவ்வளவு நீளுகின்றது என்பதை உற்றுநோக்குக. இப்பொழுது குவளையை ஒரு நீருள்ள தொட்டியில் இறக்கி இரப்பர்ப் பட்டையின் நீட்சியை உற்றுநோக்குக. இந்த வேற்றுமைக்கு நீங்கள் என்ன காரணம் கூறு வீர்கள் ? 6. நீரில் ஒரு கல் எடையில் குறைவாக இருப் பதுபோல் காணப்படுகின்றது : ஒரு பெரிய கல்லை ஒரு சமையலறைத் தராசில் வைத்து நிறுத்திடுக. கல்லச் சுற்றிலும் ஒரு தடித்த கயிற்றுக் கண்ணியை அமைத்து அஃது ஒரு தொட்டி நீரில் அமிழ்ந்த நிலையில் அதனைத் திரும்பவும் நிறுத்திடுக. வேற்று மைக்கு நீங்கள் என்ன காரணங் கூறுவீர்கள்? 7. ஒரு சைத்தான் (Devil) மூழ்கு குண்டினை (கார்ட்டீஷியன் மூழ்கு குண்டு) எங்ங்னம் அமைப்பது ?: சற்று நன்கு அகன்ற வாயினையுடைய ஒரு நெட்டையான கண்ணுடிச் சாடியினைக் கண்டு பிடித்திடுக. மருந்து சொட்டும் கருவியின் இரப் பர்க் குமிழின் (Bulb) குறுகிய பகுதியினைச் சுற்றி லும் ஒரு தாமிரக் கம்பியினைக்கொண்டு சில சுற்றுக்களை அமைத்திடுக. சாடியினை விளிம்பு வரையிலும் நீரினல் நிரப்புக. குமிழில் ஒரு சிறிது நீரினை வைத்து அதனைச் சாடி நீரில் மிதக்க விடுக. கிட்டத்தட்ட் அமிழ்த்தும் நிலைக்குக் கொண்டுவரும்வரையில் குமிழ் போதுமான நீரினைக் கொண்டிருத்தல் வேண்டும். இந்த நிலையில் கிட்டத்தட்ட இரப்பர் முழுவதும் நீரின் அடியில் இருக்கும். 138