பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகமான அளவு சரிப்படுத்துதல் தேவைப் படக்கூடியதாக இருக்கும். குமிழை நசுக்கு வதன்மூலம் குமிழினின்றும் ஒ வ் .ெ வ | ரு தடவையும் ஒவ்வொரு குமிழியாகக் காற்றினை அகற்றுக. நீங்கள் மூழ்கு குண்டினேச் சரிப் படுத்தியதும், புட்டியில் ஒரு திண்ணிய அடைப்பானைப் போடுக ; அல்லது சக்க ரத்தின் ஒரு பழைய உட்குழலினின்றும் வெட்டியெடுத்த இரப்பர்த் துண்டினை அதன் மீது கட்டுக. அடைப்பான அல்லது இரப் பரை அழுத்திய நிலையில் மூழ்கு குண்டு அமிழும். அமுக்கம் விடுவிக்கப்பெற்றதும் குண்டு மேற்பரப்பிற்கு எழும். ஒரு சிறிய சோதனைக் குழலினின்ருே அல்லது மருந்துப் Li li tq us ssf sir G G (Medicine vial) ?(5 மிதவையை அமைத்தால், மிதவை அமிழும் போது அதன் உட்புறத்திலுள்ள நீர் மட்டத் தையும் அது மிதக்கும்போது அந்நீர் மட்டத் தையும் உற்றுநோக்குவதால் நீங்கள் குண்டின் செயலே விளக்கலாம். - 8. வழிந்தோடும் குவளையையும் பிடி வாளியினை யும் எங்ங்னம் ஆக்குவது ? : - - மிதத்தலையும் ஆழ்தலையும் கட்டுப்படுத்தும் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தை ஆய்வதற்கு இவை பயன்படக்கூடியவை. ஒரு வழிந்தோடும் 656.1%rsou (Overflow can) ol,566,135 fié5 10 அல்லது 12 செ. மீ. உயரமும், 7 அல்லது 8 செ. மீ. குறுக்கு விட்டமுமுள்ள ஒரு தகரக் !. குவளையைக் கைவசப்படுத்துக. 2 செ. மீ. விலகிய நிலையிலும் மேல் விளிம்பினின்றும் 4 செ. மீ. கீழ் வரையிலுமாக இரண்டு செங் கோண வெட்டுக்களைச் செய்திடுக. இவ்வாறு உண்டான நாக்கினை ஒரு V-வடிவமுள்ள மூக்காக வளைத்திடுக. গুচে சிறிய தகரக் குவளையினின்றும் பிடிவாளி (Catch bucket) ஆக்கப்பெறுதல் கூடும். E. ஆழ்தலும் மீதத்தலும் குவளையின் உச்சியருகில் எதிர்ப்பக்கங்களில் இரண்டு துளைகளை இடுக. இந்தப் பிடி வாளிக்கு ஒரு கம்பிக்கட்டினை அமைத்திடுக. 9. ஆழும் பொருள்கள் : ஒரு வழிந்தோடும் குவளையில் அதன் மூக்கு மட்டம் வரையிலும் நீரினல் நிரப்புக. குவளை யின் உட்புறம் செல்லக்கூடிய ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்திடுக. கல்லுடன் ஒரு கயிற்றினை இணைத்து அதனை ஒரு வில் தராசினைக் கொண்டு நிறுத்து எடை காண்க. பிடிவாளி யின் எடையையும் நிறுத்துக் காண்க. மூக்கின் கீழ் பிடிவாளியினை வைத்திடுக. நீரில் கல்லை ஆழும்படிச் செய்து அதனுடைய எடையைப் பதிவு செய்க. அதன் எடை காற்றிலுள்ளதைப் போல் நீரிலும் உள்ளதா ? இடம் பெயர்ந் திட்ட (வழிந்தோடின) நீரினைச் சேகாஞ்செய்து அதன் எடையைக் காண்க : வாளியும் நீரும் சேர்ந்த எடையினின்றும் வாளியின் எடை யைக் கழித்து நீரின் எடையைமட்டிலும் கண் டறியலாம். காற்றில் நிறுத்தபோது இருந்த கல்லின் எடையிலிருந்து அதனை நீரில் நிறுத்தபோது குறைவதாகக் காணப்பட்ட எடையின் அளவு வழிந்தோடின நீரின் எடை யளவுடன் எங்கனம் ஒப்பாக உள்ளது? வேறு ஆழும் பொருள்களைக்கொண்டு இந்தச் சோத னையைச் செய்ய முயலுக. 10. மிதக்கும் பொருள்கள் : வழிந்தோடும் குவளையை நீரினல் நிரப்புக ; நீரின் மேற்பரப்பு குவளையின் மூக்கு மட்டம் வரையில் இருக்கும்வரையிலும் நீர் வழிந் தோடட்டும். வழிந்தோடும் குவளையில் பாதி 139