பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ஆழ்தலும் மிதத்தலும் அல்லது பாதிக்குமேல் ஆழ்ந்து மிதக்கக் கூடிய ஒரு மரக்கட்டைத் துண்டினைத் தேர்ந் தெடுத்திடுக. ஒரு வில் தராசில் அந்த மரக்கட் டைத் துண்டினை நிறுத்து எடை காண்க. பிடி வாளியினையும் நிறுத்திடுக. பிடிவாளியைக் குவளை மூக்கின்கீழ் வைத்திடுக. மரத்துண்டினை வழிந்தோடும் குவளையில் வைத்து அதன் எடையைக் குறித்துக் கொள்க. வழிந்தோடின நீரின் எடையைக் காண்க : நீரும் வாளியும் சேர்ந்த எடையினின்றும் வாளியின் எடை யைக் கழித்தால் நீரின் எடை கிடைக்கும். மிதக்கும் மரக்கட்டைத் துண்டின் எடை அது வழிந்தோடச் செய்த நீரின் எங்ங்னம் ஒப்பாக உள்ளது? வேறு மிதக்கும் பொருள்களைக்கொண்டு இச்சோதனையைத் திரும்பவும் செய்க. எடையுடன் 11. மிதக்கும் மெழுகுவத்தியினைக்கொண்டு ஒரு சோதனை : ஒரு மெழுகுவத்தியின் கீழ்முனையில் ஓர் ஆணியை அமைத்திடுக. மெழுகுவத்தியின் உச்சி ஒரு சிறிது நீரின் மேற்பரப்பிற்குமேல் இருக்குமாறு மிதக்கச்செய்வதற்கேற்றவாறு ஆணியின் எடை கிட்டத்தட்டச் சரியானதாக இருத்தல் வேண்டும். வத்தியையும் ஆணியை யும் ஒரு நெட்டையான சாடி நீரில் மிதக்க விடுக. மெழுகுவத்தியினைக் கொளுத்தி அது கிட்டத்தட்ட எரிந்து முடியும்வரையிலும் அதனைக் கவனமாகப் பார்த்துக்கொள்க. மெழுகுவத்தி எரியும்பொழுது அஃது இடை விடாமல் எடையினை இழந்து வருகின்றது. அது தொடர்ந்து ஏன் மிதக் கின்றது ? 12. வெவ்வேறுவகை மரக்கட்டைகளைக்கொண்ட ஒரு மிதக்கும் சோதனை : ஒரு தக்கை, பசுமரம் (Maple), செங்கருங் காலி (Mabogamy), கருங்காலி (Ebony) போன்ற மரக்கட்டைத் துண்டுகளைக் கைவசப்படுத்துக. செங்கருங் கருங் காலி கil லி מו ק מr J tמ 140 அவற்றை ஒரு தட்டு நீரில் வைத்து அவை ஒவ்வொன்றும் எங்ங்ணம் நடந்துகொள்கின் றது என்பதைக் கவனித்திடுக. இதை நீங்கள் விளக்கக் கூடுமா ? 13. மி த க்கு ம் முட்டையைக்கொண்டு ஒரு சோதனை : - புதிய நீரைக்கொண்ட ஒரு கண்ணுடிப் பாத் திரத்தில் ஒரு முட்டையை வைத்து அதனை உப்பு நீரில் முட்டிை புதிய நீரில் முட்டை உற்றுநோக்குக. அடுத்தாற்போல் நீரில் சோற்றுப்பினை சேர்த்து முட்டையை மிதக்கச் செய்யமுடிகின்றதா என்று பார்க்க. இதனை நீங்கள் விளக்கக் கூடுமா ? கப்பல்கள் சுத்த மான நீரில் மிதப்பதைவிட கடல் நீரில் சற்று உயர்ந்து மிதக்கின்றது என்ற மெய்ம்மை யுடன் இஃது எங்ங்னம் தொடர்புகொள்ளு கின்றது ? 14. ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தின்மீது சோதனை : ஒரு மிதிவண்டி வால்வினை ஒரு பாதி தாமிரப் பந்துக் குழல் மிதவையுடன் பற்ருசு வைத்துச் சேர்த்திடுக. அதன் மறு பாதியின் உட்புறம் காரீயக் குண்டுகளைப் (Lead Shot) பந்து முழுவதும் நீரில் மிதக்கும் வரையில் எடையாக ஏற்றுக. ஒரு சிறிய அளவு பிளாஸ்டிக் காரை (Plasticine) தற்காலிக இணைப்பிற்காகப் பயன்படுத்தப்பெறலாம். இந்த ஒழுங்கு முறைகள் நிறைவேறிய பிறகு பந்தின் இரு பாதிகளையும் பற்ருசு வைத் துச் சேர்த்து வால்வுப் பிடியின் கழுத்தைச் சுற்றிலும் தாமிரக் கம்பியினைச் சுற்றுவதால் இறுதி மாற்றங்களைச் செய்திடுக.