பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 10 பொறிகளைப்பற்றிய படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A நெம்புகோல், உருளையும் அச்சும், கப்பி 1. எளிய நெம்புகோல் : 15 செ. மீ. சதுரமும் 2 செ. மீ. கனமும் உள்ள ஒரு மரத்தாலான அடிப்பகுதியை அமைத்திடுக. இந்த அடிப்பகுதியின் நடுவில் 4 செ. மீ. சதுரமும் 3 செ. மீ. கனமும் உள்ள மற்ருெரு மரக்கட்டையை இணைத்திடுக. இந்த மரக்கட்டையின் இ ர ண் டு பக்கங்களில் 15 செ. மீ. நீளமும் 3.5 செ. மீ. அகலமும் 1 செ.மீ. கனமும் உள்ள இரண்டு நேர்க்குத்துச் சட்டங்களை இணைத்திடுக. சிறிய மரையாணி களைக்கொண்டு இவை சிறிய மரக்கட்டையுடன் இணைக்கப்பெறலாம். ஒரு மெல்லிய அலகு வாளினைக் (Blade saw)கொண்டு இந்த ஒவ் வொரு நேர்குத்துச் சட்டத்திலும் ஒரு குறு கிய பிளவினை வெட்டுக. இந்தப் பிளவு 2 செ. மீ.க்குக் குறைந்த ஆழத்தையுடைய தாகவோ அல்லது ஒரு பயன்படுத்தப்பெற்ற சவர வாள் அலகினைக் குத்துச் சட்டத்தின் உச் கிக்குமேல் 2 அல்லது 3 மி. மீ. நீட்டிக்கொண் டிருக்குமாறு பிடித்துக் கொள்வதற்கேற்பவோ அமைதல் வேண்டும். 1 மீட்டர் நீளம், 4 செ. மீ. அகலம், கிட்டத் தட்ட 5 மி. மீ. கனம் உள்ள ஒரே மாதிரியாக வுள்ள ஒரு சட்டத்தை நெம்புகோலின் புய மாகப் பயன்படுத்துக. இச் சட்டத்தை ஒரு கத்திமுனையின்மீது நிறுத்தி சேமனிலையாக்கி, அதன் சரியான சமனிலைப் புள்ளியைக் கண்டு பிடித்திடுக. சமனிலையாகவுள்ள சட்டத்தின் மையத்தின்வழியாக ஒரு மெல்லிய ஆணியை வைத்திடுக. இந்த ஆணி இரண்டு குத்துச் சட்டத்தின் முனையிலுள்ள இரண்டு சவர வாள் அலகுகளின் மீது நிற்கக்கூடியதாகவும் அவற் றின் இடையே சட்டம் தாராளமாக ஊசலாடக் கூடியதாகவுமான நீளத்தைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். சவர வாள் அலகுகளின்மீது சட்டத்தைச் சமனிலையாக்குக; அது சமனிலையாக இரா விடில் கனமாகவுள்ள முனையில் ஒரு சிறு பகுதியை ஒரு கத்தியைக்கொண்டோ அல்லது வாளிகுலோ வெட்டியெறிக. ஆணியில் தொடங்கி (நெம்புகோலின் ஆதா ரத் தானம்) இரண்டு திசைகளிலும் 1 லிருந்து எண்களைச் சட்டத்தின் இறுதி முனைவரையி லும் சென்டிமீட்டர்களில் குறித்திடுக. சமனிலைச் சட்டத்தினின்றும் கயிற்றுக் கண்ணிகளால் எடைகளைத் தொங்கவிடுக. 1. ஆதாரத் தானத்திலிருந்து 20 செ. மீ. தூரத்தில் ஒரு 10 கிராம் எடையைத் தொங்க விட்டு அதன்பிறகு மற்ருெரு 10 கிராம் எடை யைக்கொண்டு அதன் மறுபுறத்தால் சமனி லைப் படுத்துக. நெம்புகோல் சமனிலையிலிருக் கும்பொழுது நெம்புகோலின் ஆதாரத் தானத் திலிருந்து இந்த எடை உள்ள தூரத்தை உ ற் று நோ க் கு க. ஆதாரத் தானத்திற்கு அண்மையிலும், அதற்குச் சேய்மையிலும் எடைகளை வைத்து இச் சோதனையைத் திரும் பத் திரும்பச் செய்க. 2. மேற்குறிப்பிட்ட 1 ஐ 100 கிராம் எடை களைக்கொண்டு திரும்பவும் செய்க. 3. இரண்டு எடைகளை ஒரு புறத்தில் வைத்து மற்ருெரு புறத்தில் ஒர் எடையைக் கொண்டு சட்டத்தைச் சமனிலையாக்குக. இங்கு சமனிலையாக இருப்பதற்குரிய கட்டுப்பாட்டினை நீங்கள் கண்டறியக் கூடுமா ? கருத்தேற்றம் : ஆதாரத் தானத்தின் ஒரு புறத்திலுள்ள ஒவ் வோர் எ ைட ைய யு ம் ஆதாரத்தானத்தி லிருந்து அதன் தூரத்தையும் பெருக்கிப் பெருக்கற்பலன்களைக் கூட்டுக. இதனை மற். ருெரு புறத்திலுள்ள எடையையும் தூரத்தை யும் பெருக்கிவந்த பெருக்கற்பலளுேடு ஒப்பிடுக. 2. எளிய தராசு : விளக்கப்படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு மேசையின் மேல்மட்டத்தில் சிறிதளவு 148