பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஈர்ப்பு ஆற்றலைக்கொண்டி சோதனைகள் கத்தைக்கொண்ட எந்தக் கூரான முனையினை யுடைய பொருளும் பயன்படுத்தப்பெறலாம். துடைப்பங்கள், பந்தடி மட்டைகள், தூரிகை கள் முதலியவை போன்ற பல்வேறு குச்சிகள், கோல்கள், பொறியமைப்புக்கள் ஆகியவற்றை கத்திமுனையின்மீது சமனிலைப்படுத்தி அவை சமனிலையாக நிற்கும் இடத்தை ஒரு சுண்ணக் காம்பிளுல் குறித்திடுக. நீங்கள் சோதித்த ஒவ்வொரு பொறி அமைப்பின் மையமும் அப் பொருளின் சரியான மையத்திலுள்ளதா ? எந் தப் பொருள்கள் புவிஈர்ப்பு மையத்தை மையத் தில் கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றன ? வழக்கமாக மற்றவைகளின் புவிஈர்ப்பு மையம் எங்குக் காணப்படுகின்றது ? B. ஈர்ப்பு ஆற்றலைக்கொண்ட சோதனைகள் 1. விழும் பொருள்கள் : உங்களுடைய ஊர்ப் புறத்தில் கிட்டத்தட்ட 20 மீட்டர் உயரமுள்ள கட்டடம் இருந்தால், எங்ங்னம் எவ்வளவுக் கெவ்வளவு அதிக நீள மாக ஈர்ப்பு ஆற்றல் பொருள்களின்மீது செயற் படுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு அது பொருள்களை வேகமாக விழச் செய்கின்றது என்பதை நீங்கள் ஆராய்தல் கூடும். குறைந் தது 20 மீட்டர் உயரத்திலிருந்து பூமியைத் தொடக்கூடியதாகவுள்ள ஒரு கயிற்றினைக் கை வசப்படுத்துக. அஃது ஒரு நேரான நிலைக் குத்துக்கோடாக அமைவதற்கேற்ப அதனை உறுதியாகப் பிணைத்திடுக. பூமியினின்றும் 20 மீட்டர் உயரத்தில் சாளரத்திற்கு எதிர்ப்புறத் தில் ஒரு வண்ணத்துணி அல்லது வண்ண நூலினைக் கயிற்றுடன் கட்டுக. இந்த இடத் திற்குச் சுமார் 5 மீட்டருக்குக் கீழ் மற்ருெரு வண்ண நூலினக் கட்டுக. யாரையாவது ஒரு வரை ஒரு கைக் கடிகாரத்துடன் பூமியின்மீது நிற்கும்ாறு செய்து விநாடிகளை உரத்துக் கூவுக. ஒராயிரத்து ஒன்று ’- ஓராயிரத்து இரண்டு - ஓராயிரத்து மூன்று' எ ன் று கூவிக்கொண்டு புயத்தினுல் விநாடிகளை அடிப் பது ஒரு நல்ல வழியாகும். இது விநாடிகளைக் கிட்டத்தட்டச் சரியாக அடிக்கக்கூடிய வழி யாகும். இப்பொழுது தொடங்கும் இடத்திற்கு 5 மீட் டருக்குக்கீழ் உள்ள இடத்தில் யாரையாவது ஒருவரையும், பூமியில் அங்கனமே யாரையா வது மற்ருெருவரையும் இருக்குமாறு செய்க. பளுவான கற்களையும் இலேசான கற்களையும் மேலிருந்து விழவிடுக. சிறிய பொருள்களையும் பெரிய பொருள்களையும் விழவிட்டு அவை ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் விழுந்துள்ளன என்றும், இரண்டு விநாடிகளில் எவ்வளவு தூரம் விழுந்துள்ளன என்றும் காண்க. 2. நாணயங்கள் சேர்ந்தே விழுகின்றன: ஒரு வரைகோலை (Ruler) அதன் ஒரு நுனி மேசையின் ஓரத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டும், மற்ருெரு துனி சுமார் 3 செ. மீ. ஒரத்தினின்று இருக்கும்படியாகவும் சாய்ந்த நிலையில் (Obliquely) ஒரு மேசையின்மீது வைத்திடுக. இப்பொழுது ஒரு நாணயத்தை நீட்டிக்கொண்டிருக்கும் முனையின்மீதும் மற் ருெரு நாணயத்தை வரை கோலின் மற்ருெரு முனைக்கும் மேசையின் ஓரத்திற்கும் இடையில் மேசையின்மீதும் வைத்திடுக. மற்ருெரு வரை கோலைக்கொண்டு நீட்டிக்கொண்டிருக்கும் முனையில் கிடைமட்டத்தில் வேகமாகத் தாக் குக. ஒரு நாணயம் நேராகத் தரையில் விழு கின்றது; மற்ருெரு நாணியம் ஒரு நீண்ட வழியில் பிரயாணம் செய்கின்றது. ஒவ்வொரு நாணயமும் எப்பொழுது தரையை அடை கின்றது என்பதை உற்றுநோக்குக. நீங்கள் இச் சோதனையைப் பன்முறை திரும்பத் திரும் பச் செய்யவேண்டியதாக இருக்கும். நீங்கள் என்ன முடிவுகளை அடைகின்றீர்கள் ? 3. srsr^u ssææsól (Pendulum) : ஒரு கல் அல்லது ஒரு சிறிய உலோகப் பந்து போன்ற ஏ. த | வ து ஒரு பொருளுடன் குறைந்தது 2 மீட்டர் நீளமுள்ள ஒரு கயிற்றி னைக் கட்டுக. இதனை வாயிற்படியில் அல்லது மச்சின் அடிப்புறத்தினின்றும் தொங்கவிட்டு அதனை ஒரு பெரிய வட்டவில்லில் ஊசலாடு மாறு தொடங்கிவிடுக. 10 விளுடிகளில் அது செய்யும் ஊசலாட்டங்களைக் கணக்கிடுக; அதன்பிறகு அதனை 6ஆல் பெருக்கி ஒரு 160