பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிடத்திற்கு எத்தனை ஊசலாட்டங்களைச் செய்கின்றது என்று கணக்கிட்டுப் பார்க்க அடுத்து, ஊசலியை ஒரு சிறிய வட்ட வில்லில் ஊசலாடுமாறு செய்து நிமிடத்திற்கு எத்தனை ஊசலாட்டங்கள் செய்கின்றன என்று கனக் கிடுக. இங்ங்ணம் ஊசலி ஆடும் நிலையைப் பல தடவைகள் மாற்றி, இச் சோதனையைப் பன் முறைகள் செய்து ஒவ்வொன்றிலும் சராசரியை எடுத்துக்கொள்க. வட்ட வில்லின் நீளம் ஊச லியின் காலமாற்றத்தினைப் பாதிக்கின்றதா ? ஊசலியின் நீளத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதன் எடையாகப் பயன்படும் பொருளை மட்டிலும் மாற்றுக. மேற்கூறிய வாறே ஊசலி செய்யும் வட்டவில்லின் நீளங் களை மாற்றி இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. இந்த ஊசலியின் நீளத்தில் பாதி இருக்கு மாறு ஊசலியை அமைத்துக்கொண்டு மேற் கூறிய ஒவ்வொரு சோதனையையும் திரும்பவும் செய்திடுக. ஊசலியின் நீளம் அதிர்வின் வீதத்தைப் (Rate) பாதிக்கின்றதா? நீளம் அதன் வீதத்தை எங்கனம் பாதிக்கச் செய் கின்றது ? 4. ஒரு விழும் பொருளின் குறித்தல் : ஒரு விழும் பொருளைச் சமமான கால இடை வெளிகளைக் குறிக்கும் அடையாளங்கள் செய் யப்பெற்ற ஒரு காகித நாடாவுடன் இணைத்துத் தானுக விழும் ஒரு பொருளின் இயக்கம் சோதிக்கப்பெறுதல் கூடும். காகித நாடா வினை ஒரு மின்சார மணியின் சுழல் சுருளுக்கும் (Armature) ஒரு கரித்தாள் அட்டைக்கும் இடையே செலுத்தி இது செய்யப்பெறலாம். இந்தச் செயலுக்காக ஒரு மின்சார மணியின் பொறி நுட்பத்தைச் சிறிது மாற்றியமைப்பு தற்கு மணி நாவினை அகற்றி சுமார் 5 செ. மீ. நீளமுள்ள ஓர் உலோகத் துண்டுடன் சுழல் சுருளைப் பற்ருசு வைத்து இனத்து அதனை (சுழல் சுருளை) நீட்டிடுக. இங்ங்ணம் நீட்டப் பெற்ற பகுதியின் முனையின் அருகில் ஒரு வட் டத் தலையுடனுள்ள ஒரு சிறிய மரையாணி பொருந்துவதற்கேற்ப ஒரு துளையினை இட்டு, அதில் மரையாணியின் தலைப்பகுதி கீழிருந்து காலத்தைக் XXI .ே ஈர்ப்பு ஆற்றல்க்கொண்ட சோதனைகள் ஓர் அடையாளமிடும் சுத்தியோல் செயற்படு மாறு அதனைப் பொருத்துக. கிட்டத்தட்ட 5 x 2.5 x 18 செ. மீ. அளவுள்ள அடிப்பகுதியாகப் பயன்படக்கூடிய ஒரு மரக் கட்டையின்மீது இந்தப் பொறி நுட்ப அமைப் பின இணைத்திடுக. 5x5x2.5 செ. மீ. அள வுள்ள மற்ருெரு கட்டையினைக் கரித்தாள் வட் டத் துண்டினத் தாங்குவதற்காக அடிக்கும் பகுதி (Striker)யின் கீழும், கடகடவென அடிக் கும் நாடாவின் (Ticker tape) பாதையை வழி காட்டுவதற்காக இருப்புக் கொக்கிகளையும் பொருத்துக. கரித்தாள் வட்டத் துண்டு சுமார் 3 செ. மீ. குறுக்கு விட்டமுள்ளதாக இருத்தல் வேண்டும்; இஃது ஓர் ஓவியத் தட்டுசியில் (Drawing pin) தளர்ச்சியாகப் பிடித்துக்கொள்ளப்பெற்றிருத்தல் வேண்டும் ; இந்த அமைப்பிளுல் நாடா தட்டுசியின்மீது கடந்து செல்லும்பொழுது கரித்தாள் வட்டத் துண்டு சுழன்று புதிய மேற்பரப்பினை வெளிப் படுத்திக்கொண்டிருக்கும். காகிதக் கம்பி @*sūrūlā āsifisfsår gjià (Wire paper fasteners) அவற்றைக் கட்டையினுள் அழுத்தி இரும்புக் கொக்கிகள் எளிதாகச் செய்யப்பெறுகின்றன. சுழல் சுருளின் நீட்டிய பகுதி தாளினே வேக மாகத் தாக்கித் துள்ளிக் குதிக்கக் காரணமாகாம லிருப்பதற் கேற்ப அது சிறிதளவு வளைக்கப் பெறுதல் வேண்டும்; இவ்வாறு நிகழ்ந்தால் சமமில்லாத காலக் குறிப்பினை (Uneven timing) விளைவித்திடும். இப்பொழுது காகிதத் 161