பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கத்திற் கொன்ருக இருக்குமாறு வைத் திடுக. கவனமாக நூலே எரித்துப் பென்சில்களே உற்றுநோக்குக. அவற்றிற்கு வே க ங் க ள் எதிர்த் திசைகளில் தரப்பெறுகின்றன. கிட்டத்தட்டச் சம அளவும் எடையும் உள்ள இரண்டு பெரிய பென்சில்களைப் பயன்படுத்தி இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள் ? இவற்றை முதல் விளைவுகளுடன் ஒப்பிடுக. பெரியதும் பளுவானதுமான ஒரு பென்சிலே ஒரு பக்கத்திலும் சிறியதும் இலேசானது மான ஒரு பென்சிலை மற்ருெரு பக்கத்திலுமாக } i i வைத்து இச் சோதனையைத் திரும்பவும் செய் திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? சில உலோகக் குண்டுகளையும் கோலிகளை யும் நீங்கள் கைவசப்படுத்தக் கூடுமாயின், உலோகக் குண்டுகளையும் வெவ்வேறு சேர்க்கைகளில் பயன்படுத்திச் சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்க. இந்தச் சோதனையினின்றும் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடிகின்றதா ? 3. தள்ளு விசைகளில் இயக்கமும் எதிரியக்கமும்: விசைகள் இணையாகச் செயற்படுகின்றன. நீங்கள் ஒரு சுவரை எதிர்த்துத் தள்ளுவீர் களாயின், சுவரும் தசம அளவு விசையுடன் உங்களை எதிர்த்துத் தள்ளுகின்றது. சதுரத் தட்டுகளுடைய இரண்டு சமையலறை வில் த ரா சு க ளே க் கைவசப்படுத்துக. அளவை முகப்புகள் (Dial faces) மேல் நோக்கியிருக்கு மாறு இரண்டு தட்டுகளையும் சேர்த்து வைத் திடுக. நீங்கள் ஒரு தராசினை அமுக்கும் பொழுது மற்ருென்றினை யாராவது ஒரு மாளுக் கனைக் கொண்டு அமுக்கச் செய்க. நீங்கள் இருவரும் தட்டுகளை அமுக்கும்பொழுது இரண்டு தராசுகளும் ஒரே அளவினைக் காட்டு வதை உற்றுநோக்குக. கோலிகளையும் E, வீசையும் இயக்கமும் 4. இழுப்பு விசைகளில் இயக்கமும் எதிரியக் கமும் : இரண்டு வில் தராசுகளைக் கைவசப் படுத் துக. ஒரு வலுவான குட்டைக் கயிற்றின் ஒவ்வொரு முனையிலும் ஒரு கண்ணியை அமைத்திடுக. ஒவ்வொரு முனையிலும் ஒரு வில் தராசினை இணைத்து இரண்டு மாளுக்கர்களைக் கொண்டு எதிர்த் திசைகளில் இழுக்குமாறு செய்க. ஒவ்வொரு தராசிலும் அளவைக் குறித்து அந்த அளவுகளை ஒப்பிடுக. 5. சறுக்குக் கட்டை உருளையுடன் (Roller skates) இயக்கமும் எதிரியக்கமும் : ஒரு சறுக்குக் கட்டை உருளையை ஒரு மழ மழப்பான தரையின்மீது வைத்திடுக. ஒரு காலடியைச் சறுக்குக் கட்டை உருளையின் மீது வைத்துக்கொண்டு மற்ருெரு காலடியை ஒரு தப்படி முன்னுேக்கி வைத்திடுக. சறுக்குக் கட்டை எதிர்த்திசையில் பின்ளுேக்கி நகர் வதை உற்றுநோக்குக. 6. ஒரு படகில் இயக்கமும் எதிரியக்கமும் : கட்டப்பெருத ஒரு துடுப்புத் தள்ளும் பட கி னி ன் று ம் நிலப் பகுதிக்குத் தாண்டும் பொழுது படகு எதிர்த்திசையில் நகர்வதை உற்றுநோக்குக. 7. இயக்கத்தாலும் எதிரியக்கத்தாலும் பீச்சு குழல் முறை முன்தள்ளும் இயக்கம் நிகழக் கூடியதாகச் செய்யப்பெறுகின்றது : சிறிய அட்டையாலான நிலைக்கச் செய்யும் சாதனம் (Stabilizer) ஒன்றை ஒட்டும் நாடா 171