பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 12 ஒலிபற்றிய படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் இந்த இயலில் ஒலியைப்பற்றிய கவர்ச்சிகரமானவையும் அன்ருட அனுபவங்களுடன் தொடர் புள்ளவையுமான அடிப்படை விதிகளையும் தொடக்க நிலையிலுள்ள சோதனைகளையும் பிள்ளைகள் காண்பர். A. ஒலி எவ்வாறு உண்டாக்கப்பெற்றுச் செலுத்தப்பெறுகின்றது? 1. பல்வேறு ஒலிகள் : இயன்ருல் சோதனைகளின் மூலம் பல்வேறு ஒலிகளின் பெயர்களைக் கூறுமாறு மாளுக்கர் கட்குப் பயிற்சி தருக. (எ. டு.) உடைந்து சிதறுதல் (கண்ணுடித் தட்டு விழுந்து உடை தல்); மெத்தென விழும் ஒலி (எடை விழுதல்); உலோகம் அடிபடுவது போன்ற ஒலி (சுத்தி யால் இரும்புத் தகட்டினை அடிக்கும்போது உண்டாகும் ஒலி), சட சட வொலி (தகரக் குவளைகள் விழுங்கால் ஏற்படுவது), பட பட வென்று வெடித்தல் ஒலி (ஈரமான மரம் நெருப்பில் எரியும்பொழுது உண்டாக்குவது); ‘டிக் டிக் ஒலி (கடிகாரம்); கடித்து அரைப்பது போன்ற ஒலி (சரளைக் கற்களின்மீது நடக் கும்போது உண்டாவது); நீர் சிதறும் ஒலி (கல் நீரினுள் விழுங்கால் உண்டாவது), பாப்' ஒலி (விளையாட்டுத் துப்பாக்கி இயங்கும்போது உண்டாவது) ; பறையொலி (பறையொலிக்கும் போது உண்டாவது); தடாலென மூடும் ஒலி (கதவு) ; சடசட ஒலி (தள வரிசையின்மீது மழைத்துளிகள் விழுவதால் ஏற்படுவது); நடந்து செல்லும் ஒலி (காலடிகள்); சலசல ஒலி (இலைகளால் ஏற்படுவது); கலகலவென்ற ஒலி (இடியினல் ஏற்படுவது, பாம்பினுல் ஏற்படு வது); கட கட வென முழங்கும் ஒலி (தொலைவி லுள்ள இடி முழங்குவதால் உண்டாவது); முரலுதல் (தேனிக்களின் ஒலி); மணி யொலி (கண்ணுடிப் பாத்திரத்தில் காண்டியை அடித் தலால் உண்டாவது), கனைத்தல் (குதிரை உண் டாக்கும் ஒலி) , ஆட்டின் கத்தல் ஒலி (ஆடு) ; கொக்கரிப்பு (பெட்டைக் கோழியின் ஒலி) ; பசுவின் கதறல் (கால் நடைகள்) ; கீச்சிடுதல் (பறவைகளின் அரவம்) ; சீறுதல் (வான ஊர்தி செய்யும் ஒலி) ; சீழ்க்கையொலி, புலம் பல் ஒலி முதலியவை. இந்த ஒலிகளேத் தாங்களும் அப்படியே உண்டாக்குவதால் பிள்ளைகள் வேடிக்கை பெறுகின்றனர். இவ்வொலிகளை விளக்கும் சரியான சொற்களே அகராதி (நிகண்டுகள், பேரகராதி) முதலியவற்றில் காண்பதற்கு மாளுக்கர்கட்குத் துணைபுரிக. 2. அதிர்வடையும் பொருள்கள் டாக்குகின்றன: ஒலியை உண் ஒரு வரைகோலின் ஒரு கோடியின் அருகி லுள்ள துளையில் ஒரு தடித்த கயிற்றின் கண் ளிையைக் கட்டுக. கண்ணியை விரல்களால் பிடித்துக் கொள்க. ஒரு நிலைக்குத்தான வட் டத்தில் வரைகோலை ஊசலாட்டுக. அதனை விரைவாகச் சுழற்றுக, என்ன ஒலி உண்டாக் கப்பெறுகின்றது ? வெவ்வேறு அளவுள்ள (பருமனுள்ள) வரை கோல்களையும் கண்ணிகளை யும் பயன்படுத்தி இச் சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்திடுக. இதனை எளிதாக்கும் பொருட்டு உங்கள் விரல்கட்குப் பதிலாக வேருெரு வரைகோல் அல்லது ஒரு மரக்கோலி னைப் பயன்படுத்துக. 3. ஆ என்று வியப்புடன் கூறுக. அத னைத் தொடர்ந்து சொல்வி நீட்டிக்கொண்டே உங்கள் காற்றுக் குழலைத் தொட்டு உணர்க. எஃது அதிர்வுகளை உண்டாக்குகின்றது ? நீங் கள் பேசும்பொழுதும், பாடும்பொழுதும், சீழ்க்கையடிக்கும்பொழுதும் அ க் கு ழ லை த் தொட்டுணர்க. - . 4. கிட்டத்தட்ட ஒரு வரைகோலின் முக் கால் பகுதி மேசையின் ஓரத்திற்கு வெளியே துருத்திக்கொண்டிருக்குமாறு அதனை ஒரு மேசையின்மீது வைத்திடுக. இப்பொழுது மேசையின்மீதுள்ள அதன் முனையைப் பிடித் 173