பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. ఇత எவ்வாறு உண்டாக்கப்பெற்றுச் செலுத்தப்பெறுகின்றது: துக் கொள்க. மற்ற முனையை வளைத்து விரைவாக விட்டுவிடுக. வரைகோல் மேலும் கீழுமாக அதிர்வடைகின்றது. நீங்கள் என்ன ஒலியைக் கேட்கின்றீர்கள் என்பதைக் கவனித் திடுக. மீண்டும் வரைகோலின் பாதி மேசை யின் ஒரத்திற்கு வெளியே துருத்திக்கொண் டிருக்குமாறு வைத்திடுக. சோதனையைத் திரும்பச் செய்திடுக. மீண்டும் நீங்கள் கேட் கும் ஒலியைக் கவனித்திடுக. முன்னர்க் கேட் கப்பெற்றதினின்றும் இது வேருக உள்ளதா ? அளவுகோலின் வெவ்வேறு நீளங்கள் மேசை யின் ஓரத்திற்கு வெளியே துருத்திக்கொண் டிருக்குமாறு வைத்து இச்சோதனையைத் திரும் பத் திரும்பச் செய்திடுக. இந்த அனுபவங்களினின்றும் ஒருவர் ஒலி அதிர்வுகளால் உண்டாகின்றது என்ற முடி விற்கு வரலாம். அதிர்வடையும் பொருள்கள் காற்றில் அதிர்வுகளை உண்டாக்குகின்றன ; அவை உங்கள் காதைத் தாக்குகின்றன ; நீங் கள் ஓர் ஒலியைக் கேட்கின்றீர்கள். 5. அதிர்வடையும் பொருளின் உட்கோள் : ஒரு காரீயத்துண்டு அல்லது இரும்புத் துண்டு அல்லது ஒரு சிறிய மைப் புட்டி போன்ற ஒரு சிறிய பளுவான பொரு ளேக் கைவசப்படுத்துக. சுமார் 1 மீட்டர் நீள முள்ள கயிற்றின் ஒரு முனையில் அப்பொருளைக் கட்டுக. இப்பொழுது கயிற்றின் மற்ருெரு முனையை வாயிற்படி வழியின் உச்சியில் கட்டி அப்பொருளைத் தொங்கவிட்டு, ஒர் ஊசலியினை அமைத்திடுக. ஓர் ஊசலியைப்போல் அப் பொருள் ஊசலாடிக்கொண்டிருக்கட்டும். ஒரு நிமிட நேரத்தில் அஃது எத்தனை ஊசலாட்டங் களைச் செய்திடும்? குறைவான நீளங்களுள்ள கயிற்றினைக்கொண்டு பல எண்ணிக்கைகளை எடுத்திடுக. கயிற்றின் நீளத்தைக் குறைத்தல் பொருளை வேகமாக ஊசலாடச் செய்கின்றது என்பதை நீங்கள் கவனித்து அறிவீர்கள். மேலும், குழந்தைகளின் ஊஞ்சலின் அதிர்வு களே உற்றுநோக்குக. ஊசலியையுடைய ஒரு கடிகாரம், இசைக்கலை ஞரின் ஊசலி, அல்லது ஓர் இசைக் கலைஞரின் மேசை-மணிப்பொறி (Time-piece) இவற்றைக் கைவசப்படுத்துக. இந்தக் கரு வி. க ளே க் கொண்டு அதிர்வுகளின் வீதங்களை ஆராய்க. ஒரு பொருள் மேலும் மேலும் வேகமாக அதிர் வடைந்துகொண்டே போகின்றது என்பதாகக் கற்பனை செய்துகொள்க : விளுடிக்கு 16 தடவைகட்குமேல் சுற்றியுள்ள காற்று அதிர்வு நிலையில் வைக்கப்பெற்று ஒரு மிகத் தாழ்ந்த சுரம் (Low mote) கேட்கப்பெறும். வினுடிக்குக் கிட்டத்தட்ட 20,000 தடவைகள் வரை விரை வான அதிர்வுகளினின்றும் மிக உயர்ந்த சுரங் கள் (Higher notes) உண்டாக்கப்பெறுகின்றன; இதுதான் மனிதன் கேட்கக்கூடிய மிக உயர்ந்த சுரமாகும். மேலும் இயல் 11, சோதனைகள் B 3-5 இவற் றையும் காண்க. 6. எச்சரிக்கைச் சங்கோடு (Siren) கூடிய ஒரு பொம்மைக் காரை ஓடவிடுக. அஃது எவ் வளவுக் கெவ்வளவு விரைவாக ஒடுகின்றதோ அவ்வளவுக் கவ்வளவு மிக உயர்ந்த சுரங்களை உண்டாக்குகின்றது. 7. வெறுமையாகவுள்ள ஒரு பு ட் டி யி ன் வாயின்வழியாக ஊதுக. வெவ்வேறு அள வுள்ள புட்டிகளைக்கொண்டு இதே சோதனை யைச் செய்திடுக. 8. இப்பொழுது மேற்கூறிய இறுதிச் சோத னையில் அதிர்வடையும் மானிட உதடுகட்குப் பதிலாக விளக்கின் பர்னரின் காற்றுபுகும் மேல் மூடியை (Wing top) அமைத்திடுக. இந்த மூடியின் வழியாக ஊதப்பெறும் காற்று மிக உயர்ந்த வேகத்தில் திறப்பினைக் கடந்து ஓர் அகன்ற சுவாலையைப்போன்று உயர்வு தாழ் வற்ற நிலையில் பரவும். இங்கு உண்டாக்கப் பெறும் எதிரொலிக்கும் ஒலிகள் புட்டிகளில் அல்லது குழல்களில் அதிர்வு அடையும் காற் றுப் பிழம்புகளைப் (Air columns) பொறுத்து அமைகின்றன. காற்றுத் தாரை மிகவும் உரத்த ஒலியை உண்டாக்குவதற்கேற்றவாறு காற்று செலுத்தப்பெறும் மூடியின் நிலையை ஒழுங்குபடுத்துக. சாதாரணமாக ஒரு பெரிய புட்டி அல்லது காகித அஞ்சல் குழலினின்றும் மிகச் சிறிய சுரத்தையும், ஒரு மிகச்சிறிய சாவி யின் நுனித்துளையினின்றும் மிக உயர்ந்த காதுக்குக் கேட்கக்கூடிய சுரம் வரையிலும் நீங் கள் கேட்டிர்கள், 174