பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. ஒலி எவ்வாறு உண்டிாக்கப்பெற்றுச் செலுத்தப்பெறுகின்றது ? 9. ஒத்துணர்வுப் புட்டிகள் : காதை முடிவிடாதபடி அதன் மிக அருகில் ஒரு புட்டியின் வாயினே வைத்துக்கொள்ளுமாறு ஒரு மாளுக்கனை ஏவுக. இப்பொழுது இதனைப் போன்ற மற்ருெரு புட்டியின் வாயின் வழியாக, நீங்கள் ஓர் உறைப்பான, தெளிவான சுரத்தை (Note) உண்டாக்கும்வரையில், மிகப் பலமாக ஊதுக. ஒவ்வொரு தடவையும் நீ ங் க ள் இதனைச் செய்யும்பொழுது இரண்டாவது புட்டி யில் எதிரொலிக்கும் அதிர்வுகள் உண்டாக்கப் பெறுகின்றன. இவைகள் ஒரு வலுவற்ற, அதனைப் போன்ற சுரத்தையே உண்டாக்கு கின்றன ; இதனை உங்கள் மாளுக்கன் தெளி வாகக் கேட்டல்கூடும். 10. ஒர் இசைக் கவை (Tuning fork), பயன் படுத்திய பெட்ரோலியத் தகரக் குவளை, நரம்பு இசைக்கருவி (Violin) அல்லது ஒலிப் பெட்டி யாகப் பயன்படக்கூடிய ஏதாவது ஒரு மரப் பெட்டி இவற்றைக் கைவசப்படுத்துக. ஒரு மரக்கட்டையின்மீது இசைக் கவையைத் தாக்கி அதனை அதிர்வு அடையுமாறு செய் திடுக. அதன்பிறகு அதன் கைப்பிடியை ஒலிப் பெட்டியின்மீது வைத்து அழுத்துக. பெட்டியி னின்றும் நீங்கள் ஓர் உரத்த முரலும் (Humming) ஒலியைக் கேட்பீர்கள். உணவுண் னப் பயன்படுத்தும் ஓர் கவர் முள்ளைக்கொண்டு இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. 11. காற்று ஒலியைச் சுமந்து செல்கின்றது: ஒருவர் சீழ்க்கையடிக்கட்டும் ; அதே அறையி லுள்ள மற்றவர்கள் அவ்வொலியைத் தெளிவா கக் கேட்பர். முதலாமவரை இப்பொழுது மற் ருேர் அறைக்கு அனுப்புக ; அவர் மீண்டும் சீழ்க் கையடிக்கட்டும் ; அவர் ஒலியைத் தெளி வாகக் கேட்பது இயலாததாகின்றது. 12. ஒலி வெற்றிடத்தில் கடந்து செல்லாது : ஒரு வெற்றிடப் பம்பினையும் ஒரு கொள் கலனையும் இயற்றுக. (இயல் 7, சோதனை 1, 3 காண்க.) ஒரு வெற்றிடக்கொள்கலனின் உட்புறத்தில் இரண்டு சிறிய மணிகளைக் கட்டுக. காற்றுடன் கொள்கலனைக் குலுக்கிச் சோதனையைத் த்ொடங்குக: மணிகள் அடிப்பதை நீங்கள் கேட்பீர்கள். அதன்பிறகு மூடியை இறுக் கமாகத் திருகி, ஒரு பம்பினைக்கொண்டு கொள் கலனினின்றும் காற்றினை உறிஞ்சி அகற்றுக. மீண்டும் கொள்கலனைக் குலுக்குக முன் போலத் தெளிவாக மணியடிப்பதை நீங்கள் கேட்கமுடியாது. இதற்கு என்ன பொருள் ? இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக; ஆளுல் கொள்கலனில் துண்டுத் தாள்களை எரித்து வெற்றிடத்தை உண்டாக்குக. 13. இரண்டு பக்கமும் திறந்துள்ள, தோட் டத்திற்கு நீர் பாய்ச்சும் ஒரு நெளியக்கூடிய நீண்ட குழலே (Hose) எடுத்துக்கொள்க. மற் ருெருவரிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் அதனை ஒரு தொலைபேசிப் பாதையாகப் பயன் படுத்துக. உட்புறமுள்ள காற்று ஒலியின் ஊர்தியாகின்றது. ஒரு கப்பலினுள் ஓரிடத்தி னின்றும் பிறிதோர் இடத்திற்குப் பேசுவதற்கு இதே தத்துவம் இன்றும் பயன்படுத்தப்பெறு கின்றது. 14. திண்பொருள்கள் (Solids) ஒலியைச் சுமந்து செல்லுகின்றன : மூடிகள் ஒழுங்காக வெட்டப்பெற்ற இரண்டு பயன்படுத்திய தகரக் குவளைகளைக் கைவசப் படுத்துக. ஒவ்வொரு தகரக் குவளையின் அடி மட்டத்தின் மையத்திலும் இப்பொழுது ஒரு சிறிய துளையினை இடுக. துளைகளினூடே பல மீட்டர் நீளமுள்ள மெல்லிய நூலை விடுக. கயிற்றின் ஒவ்வொரு கோடியிலும் நெருப்புக் குச்சிகளை இணைத்து அவை துளைகளின் வழி யாகச் செல்லாதிருக்குமாறு அமைத்திடுக. இப் பொழுது குவளைகளைத் தொலைபேசிகளாகப் பயன்படுத்துக கயிற்றினை இழுத்த நிலையில் வைத்துக்கொண்டு உங்கள் மாளுக்கனுடன் பேசுக ; அவன் பேசுவதைக் கேட்க, கயிற்றின் வழியாகவும் தகரக் குவளையிலுள்ள காற்றின் வழியாகவும் காற்று பிரயாணம் செய்கின்றது. தகரக் குவளையின் அடிமட்டப் பகுதி ஓர் இடைத் திரையாகச் (Diaphragm) செயற்படுகின்றது. இச்சோதனை இரண்டு வெறுமையான தீப் பெட்டிகளைக்கொண்டும் செய் ய ப் பெறு த ல் கூடும் : இப்பொழுது தீப்பெட்டிகளின் ஒரு புறம் ஒரு மெல்லிய ஒளி புகும் சிறு சுருட்டுக் களைப் போர்த்தும் தாளிகுல் இறுக்கமாக மூடப்பெறுதல் வேண்டும். 175