பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. ஒலியும் இசையும் தட்டையாக்கி, இங்ங்னம் தட்டையாக்கப்பெற்ற முனேயின் இரண்டு மூலைகளையும் வெட்டுக. இப்பொழுது இத் தட்டையான முனே ஒரு காற்றுக் கருவியின் ஊதுகுழலாகச் செயற்படுகின்றது. அதனுள் நன்ருக ஊதி, நீங்கள் மிக நல்ல அதிர்வுகளைப் பெறும் வரையில் ஊது குழலே நன்கு ஒழுங்கு படுத்துக. அடுத்து, ஏனைய பருக உதவும் குழல்களி னின்றும் இத்தகைய ஊதுகுழல்களே இயற்றி ஓர் இசைக் குழுவினே (Orchestra) அமைத் திடுக. வேறு குழல்களின் மற்ற முனைகளிலும் நீங்கள் ஒரு முற்றுப்பெற்ற சுரவரிசையைப் பெறும்வரையில் வெவ்வேறு இசைச் சுரங்க ளுடன் இசைப் பொருத்தம் பெறுவதற்கேற்பச் சிறிது சிறிதாக வெட்டியெறிக. ஒவ்வொரு கையிலும் ஒரு குழலேப் பிடித்துக் கொண்டு ஐந்து கலைஞர்களில் ஒவ்வொருவரும் இரண்டு சுரங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். முதன் முதலாக உங்கள் ஜனகன மன'வை இசைக்க முயலுக. ஒரு முனேயைத் அதிர்வடையும் ஊதுகுழலின் காரணமாகக் குழலினுள்ளிருக்கும் காற்றுப் பிழம்பும் அதிர் வடைகின்றது என்பதுவே இதன் தத்துவ மாகும். 6. புட்டி, கண்ணுடிக் குழல் எக்காளம் (Trom bone): கிட்டத்தட்ட 1 செ. மீ. குறுக்கு விட்டமும் 20 செ. மீ. நீளமும் உள்ள ஒரு கண்ணுடி அல்லது உலோகக் குழலேயும் கிட்டத்தட்ட நீர் நிறைந் துள்ள ஒரு புட்டியையும் கைவசப்படுத்துக. ஒரு கையில் புட்டியையும், மற்ருெரு கையில் குழலின் ஒரு நுனி நீரில் அமுங்கியிருக்குமாறு குழலினையும் பிடித்துக்கொள்க. இப்பொழுது குழலின் மற்ருெரு நுனியில் ஒரு சுரத்தில் ஊதுக. அடுத்து, ஊதும்பொழுது, புட்டியை மேலும் கீழுமாக இயக்குக. குழலில் அதிர் வடையும் காற்றுப் பிழம்பின் (Column) நீளத்தை மாற்ற மாற்ற நீங்கள் பல்வேறு சுரங்களைக் கேட்பீர்கள். 7. இசைப் புட்டிகள் : ஒரு வரிசை இசைப் புட்டிகளைத் தயாரித் திடுக; ஒவ்வொன்றிலுமுள்ள காற்றுப் பிழம்பு சுரவரிசையிலுள்ள ஒவ்வொரு சுரத் திற்கும் இசைப் பொருத்தமாக இருக்குமாறு அமைத்திடுக. ஒரே மாதிரியான எட்டுப் புட்டி களைத் தேர்ந்தெடுத்திடுக. முதல் புட்டி வெறு மையாக இருக்கட்டும். மற்றவற்றில் பொருத்த மான உயரங்கட்கு நீர் சேர்க்கப்பெற்று ஓர் அளவுகோல் அல்லது குச்சியினுல் அவை திட்டப்பெறும்பொழுது அவை ஒரு முற்றுப் பெற்ற இசைச் சுர வரிசையில் ஒலிக்கும். நீர் பருக உதவும் உயரமான கண்ணுடிப் பாத்திரங் களைக்கொண்டு இச்சோதனையை நீங்கள் செய் திடக்கூடும். புட்டிகளில் அல்லது கண்ணுடிப் பாத்திரங்களின் உட்புறத்திலுள்ள காற்றுப் பிழம்புகள் வெளிப் புறங்களினின்றும் அதிர்வு களே எடுத்துக்கொள்ளுகின்றன. உங்களிடம் பீங்கான் குவளைகள் அல்லது பல்வேறு அளவுகளில் மணிகள் இருப்பின் அவையும் ஒரு வேடிக்கையாகும். சுரவரிசையின் சுரங்களுக்கு இசைப் பொருத்தமாகவுள்ள வற்றை மட்டிலும் பொறுக்குக. அவற்றை ஒரு வரிசையாக அமைத்திடுக. ஒரு குச்சி அல்லது கவர்முள்ளினை ஒவ்வொரு கையிலும் பிடித்துக் கொண்டு கவனமாக அவற்றில் ஓர் இசைப் பொருத்தத்தை விளைவித்திடுக. 8. தலையுணவின் மணியொலிகள் : சுமார் 3 செ. மீ. குறுக்கு விட்டமும் கிட்டத் தட்ட 3.5 மீட்டர் நீளமும் உள்ள ஒரு நேரான எஃகுக் குழலேக் கைவசப்படுத்துக. அதனை 100 செ. மீ., 90 செ.மீ., 80 செ. மீ., 70 செ. மீ., நீளங்களுள்ள நான்கு பகுதிகளாக வெட்டுக. அவற்றின் ஒரு முனையில் இருபுறங்களிலும் துளைகளை இட்டு அக்குழல்களைத் தொங்க விடுக. ஓர் இரப்பர்ச் சுத்தியைக் கொண்டு ஒவ்வொரு குழலேயும் முறையாக அடித்து உங்கள் வகுப்பு மாளுக்கர்கட்குக் காட்டலாம். 9. சுருட்டுப் பெட்டி நரம்பு இசைக் கருவி : ஒரு சுருட்டுப் பெட்டி அல்லது அதைப் போன்ற வேறு ஏதாவது ஒரு பெட்டி, இசைக் கருவிகளின் கடையிலிருந்து ஒழுங்கான தந்தி கள், மரத்துண்டுகள், ஒரு பிசின் துண்டு, ஒரு வகை ஆப்பு ஊசிகள் (Cotter pins) இவற்றை வாங்கிச் சேர்த்திடுக. நீங்களே இந்தப் பகுதிகளை ஒன்று சேர்த்ததும் படத்தில் 180