பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 13 வெப்பப் படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A. வெப்பத்தினல் விரியும் விளைவு 1. சூடாக்குவதால் விரிவைக் கோணம் : ஓர் உறுதியான உலோகக் முக்கோணமாக காட்டும் முக் கம்பியை வளைத்திடுக. அதனை ஒரு கிடைமட்டச் சமதளத்தில் தாங்கும்படி அமைத்து, ஒரு மூலையாக அமைந்த கம்பியின் இரண்டு முனைகளும் பற்றிக்கொண்டிருக்கும் படி ஒரு நாணயத்தை வைக்க. எதிர்ப் பக்கத்தை வெப்பமாக்குக; நாணயம் கீழே விழுந்துவிடும். 2. சூடாக்கப்பெறும்பொழுது ஒரு திண்பொரு ளின் (Solid) விரிவைக் காட்டுவது : கிட்டத்தட்ட 2 மீட்டர் நீளமுள்ள ஒரு தடித்த தாமிரக் குழல் துண்டொன்றினை அடைக. அதனை ஒரு மேசையின்மீது கிடத்தி அதன் ஒரு முனையை ஓர் பற்றியால் (Clamp) நிலைப்படுத்துக. அதன் மறுபுற முனையின்கீழ் ஒரு வளைந்த தையலூ சி அல்லது மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் கம்பியை (Spoke) ஓர் உருளையாகச் செயற்படுமாறு அமைத்திடுக. முத்திரை அரக்கில்ை நிலப்படுத்தப்பெற்ற உருளையுடன் இணைக்கப்பெற்றுள்ள சுமார் 1 மீட்டர் நீளமுள்ள ஒரு மெல்லிய பால்சா மரத்துண்டு தன்மீது தங்கியுள்ள கோலின் ஏதாவது இயக்கத்தையும் காட்டும். நிலைப் படுத்தப்பெற்ற குழலின் முனையின்வழியாக ஒழுங்காக நிகழுமாறு ஊதுக; வெப்பமான மூச் சின் காரணமாக ஏற்பட்ட குழலின் விரிவு இந்த அமைப்பிளுல் கண்டறியப்பெறும். இப் பொழுது இதன் வழியாக நீராவியை அனுப் புக; உருளையின் குறுக்கு விட்டத்தினைப் பொறுத்துக் குறிமுள் ஒரு முற்றுப்பெற்ற சுற் றினையோ அல்லது அதற்கு மேலோ செய்யும், உருளையையும் குறிமுள்ளேயும்(Pointer) தளர்ச்சி யாகவுள்ள முனையின் அருகில் நகர்த்திய பிறகு, இதே சோதனையைத் திரும்பவும் செய்திடுக. முடிவுகளை ஒப்பிடுக. 3. வளையம்-ஆணியின் சோதனை : ஒரு பெரிய மரத் திருகாணியையும் ஒரு வளை யத்தையுடைய மரையாணியையும் (Screw eye) கைவசப்படுத்துக; மரையாணியின் கொண்டை வளையத்தினுள் சற்றுச் சரியாக நுழையுமாறு இருத்தல்வேண்டும். இரண்டையும் ஒரு குச்சி யின் முனையில் திருகி விடுக; குறைந்தது 2.5 செ. மீ. நீளமுள்ள உலோகப் பகுதி துருத்திக் கொண்டிருக்குமாறு அமையச் செய்யவேண் ή @ಠಿ டும். திருகாணியின் கொண்டையை ஒரு சிறிது நேரம் சூடாக்கி அதன்பிறகு அதனை மரை யாணி வளையத்தின் வழியாக வைக்க முய லுக. மரையாணியைச் சூடாக வைத்துக் கொண்டே அதே சமயத்தில் மரையாணி வளை யத்தையும் ஒரு சுவாலையில் வைத்துச் சூடாக் 188