பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாராயச் சுவாலே ஒவ்வொரு சட்டத்தின் உட் புற முனையையும் சமமாகத் தொடுமாறு அதனை முக்காலியின் அடிப்புறத்தில் வைத்திடுக. சட்டங்களின் வெளிப்புற முனையினின்றும் ஆணிகள் விழும் ஒழுங்கினை உற்றுநோக்குக. இத்தலைப்பிலுள்ள பெரும்பாலான எளிய சோதனைகள் வெப்ப-எண்ணையும் (Specific heat) கடத்தலையும் உள்ளடக்கியிருத் தலால் அவை குழப்பத்தைத் தருகின்றன. யாவும் 3. வெவ்வேறு பொருள்களின்மூலம் கடத்தப் பெறும் வெப்பத்தை அளத்தல் : இயல்-2, இனம் C5 இல் விவரிக்கப் பெற்ற நீராவிக் குவளை தலைகீழாக ஒரு முக்காலி யின்மீது வைக்கப்பெற்ருல் அது கடத்தலேப் பற்றிய சோதனைகளில் ஒரு சூடான தட்டாகப் பயன்படும். நீளமான குழல் வழியாக நீராவி நுழைக்கப்பெற்றுக் குளிர்ந்த நீரில் திரவ மாய்ச் சுருக்கப்பெறுகின்றது. சூடான தட் டின்மீது ஒர் அட்டைத் தகட்டினே வைத்து அதன்மீது 100 க. செ.மீ. நீரையும் ஒரு C, வெப்ப இsமாற்றம் வெப்பமாணியைக் கொண்ட ஒரு சி றி ய குவளையையும் வைத்திடுக. 5 நிமிடங்கள் கழிந் ததும் வெப்பநிலை ஏற்றத்தை அளந்து அனுப் பப்பெற்ற வெப்பத்தின் அளவைக் கணக்கிடுக. சம அளவு கனமுள்ள உலோகத் தகடுகள் துணி, தக்கை முதலியவற்றைப் பயன்படுத்தி இச்சோதனையைத் திரும்பத் திரும்பச் செய்க. 4. உலோகங்கள் நல்ல வெப்பக் கடத்திகள் : ஒரு மெழுகுவத்திச் சுவாலேயின் மேற்பக்க மாக ஒரு துண்டுக் காகிதத்தை வைத்திடுக ; அஃது அண்மையில் கொணரப்பெற்ருல் கருகி விடும். அத்தாளின்மீது ஒரு நாணயத்தை வைத்துச் சோதனை யைத் திரும்பவும் செய் திடுக ; உலோகம் வெப்பத்தினை அப்பால் கடத்தி அத்தாளின்மீது ஒரு கோலத்தையும் விட்டுச் செல்லும். 5. உலோகம், மரம் இவற்றின் கடத்தும் திறன் : ஒரு மரக் கோல் பொருத்தப்பெற்றுள்ள ஓர் உலோகக் குழல் இதே விளைவினையே காட்டு கின்றது; மரக்கோல் ஒரு சுவாலேயின்மீது பிடிக்கப்பெற்ருல், அஃது எரியாது. ஒரு முனை யில் ஓர் உலோகப் பட்டையுடன்கூடிய ஒரு பேணுவின் மூடி இந்தச் சோதனைக்குப் பயன் படுத்தப்பெறுதல்கூடும். ஒரு சிறு-சுருட்டு, ஓர் உலோக நாணயம், ஒரு கைக்குட்டை இவற்றைக்கொண்டு செய்யப்பெறும் ஓர் எளிய சோதனையிலும் இதே தத்துவம்தான் அடங்கியுள்ளது. விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் துணியை இறுக்கமாக இழுத்துப் பிடித்த நிலையில் நாணயத்தின்மீது கைக்குட் டைய்ை மூடுக. சிறு-சுருட்டின் சிவந்த சூடான தணலைக் கைக்குட்டையின் இப்பகுதி யில் வைத்து அழுத்துக ; அஃது எரிகின்ற தில்லை. - 6. உலோகத்தாலான மெல்லிய கம்பிவலே மூலம் கடத்தல் : ஒரு சாராயச் சுவாலையில் அல்லது ஒரு புன் சென் சுவாலையில் ஓர் உலோகத்தாலான மெல்லிய கம்பி வலையைப் பிடித்துக் கொள்க. வெப்பம் சுவாலையினின்றும் அப்பால் கம்பி களால் கடத்தப் பெறுவதால் திரையின் வழி யாகச் சுவாலை வராததை உற்றுநோக்குக. 195