பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வெப்ப இடிமாற்றம் உங்களுடைய அறையில் வாயு இருப்பின் ஒரு முக்காலியின் அடிப்புறத்தில் ஓர் அடுப்பினே வைத்து அதனைக் கம்பித் திரையால் மூடுக. வாயுவினைத் திருப்பிவிட்டு அதனைத் திரைக்கு மேல் தீப்பற்றச் செய்க, வெப்பம் திரைக்கு அப்பால் க ட த் த ப் பெறு வ த லு ம் திரைக்குக்கீழ் உள்ள வாயுவினை அத னுடைய கொழுந்து விட்டெரியும் வெப்ப நிலையை அடைவதினின்றும் தடுப்பதாலும் வாயு திரைக்குமேல் மட்டிலும் எரிவதை நீங்கள் உற்றுநோக்குவீர்கள். இந்த உற்றுநோக்கல் தான் சர் ஹம்ஃப்ரேடேவிக்குச் சுரங்கத்தொழிலா ளர்களின் பாதுகாப்பு விளக்கினைக்(Safety lamp) கண்டறிவதற்குரிய கருத்தினை அளித்தது ; இந்த விளக்கு நிலக்கரிச் சுரங்கங்களில் நேரி டும் வாயுக்கள் வெடித்தலைத் தடுத்தது. 7. மாதிரி டேவி விளக்கு : கம்பி வலையின் கடத்தும் திறனைப்பற்றிய மரபு வழக்காக செய்யப்பெற்று வரும் சோதனை கள் அப்போதைய ஏற்பாடாகச் செய்யப்பெற்ற டேவி விளக்கிளுல் அறியப்பெறுதல் கூடும். ஒர் உருளை போன்றமைக்கப்பெற்றுள்ள கம்பி வலையினுள் அடங்கியிருக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மெழுகுவத்தி ஓர் இரப்பர்க் குழாயின் கூர் நுனிக் குழலின் வழியாக வரும் வாயுவினைத் தீப்பற்றச் செய்வதில்லை. ஒரு மரக்கட்டை அல்லது பிளாஸ்டிக் காரை அடித்தளமாகப் பயன்படுத்தப்பெறுகின்றது. 8. வைக்கோல் குடுவை : பெட்டி வெப்பங் காக்கும் ஒரு புட்டி தளர்ச்சியாக அமையக்கூடிய ஒரு துணிப் பையைத் தயாரித்து, அதனுள் இலவம் பஞ்சு, கழிவுப் பருத்தி இவற்றை நிரப்புக. இதனே ஓர் அட்டைப் பெட்டி அல்லது மூங் கிற்குழலில் அடக்கி வைத்திடுக; தூக்கிச் செல் வதற்கு ஏற்றவாறு ஒரு கயிற்று வளையமும் அமைத்திடலாம். வெற்றிடம், இதில் பயன் ޖަޙަޗަށްްIZ

படுத்தப்பெரு விடினும், பானங்கள் பல மணி நேரம் இதில் குளிர்ச்சியாகவோ சூடாகவோ வைக்கப்பெறுகின்றது. - 9. நீர் ஒரு குறை வெப்பக் கடத்தியாகும் : குளிர்ந்த நீருள்ள ஒரு சோதனைக் குழலின் அடிமட்ட முனையைப் பிடித்துக்கொள்க. நீர் கொதிக்கும்வரையில் மேல் மட்டத்தை ஒரு புன் சென் சுவாலையில் சூடாக்குக. இப்பொழுதும் நீங்கள் சோதனைக் குழலைப் பிடித்திருப்பதி லிருந்தே நீர் ஒரு குறை வெப்பக் கடத்தி என் பது காட்டப்பெறுகின்றதன்ருே ? 10. திரவங்களில் வெப்பம் நகர்முறைக் கடத்த லால் இடமாற்றம் செய்யப்பெறுகின்றது : சூடுபடுத்தப்பெறக்கூடிய ஒரு பெரிய கண் ணுடிச் சா டி ையக் கைப்பற்றுக. காஃபி தயாரித்திடும் ஒரு கண்ணுடிச் சாதனத் தின் அடிப்பகுதி இதற்குப் பயன்படுத்தப்பெறு தல் கூடும். சாடியை நீரினல் நிரப்புக. பொடி யாக்கப்பெற்ற மையொற்றுத் தாளின் துகள் கள் அல்லது மரத் துகள்களை நீரில் போட்டு அவ்ை அடி மட்டத்தில் நிலைப்படும்வரை காலம் கொடுத்திடுக. இப்பொழுது ஒரு சாராய விளக்கின்மீது வைத்து அதனைச் சூடாக்கத் தொடங்குக. காகிதத் துகள்கள் செல்லும் 196