பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவடுகளை உற்றுநோக்குக. காகிதத் துகள் கள் நீரில் ஏற்படும் நகர்முறைக் கடத்தல் ஒட் Lālāārū (Convection currents) losirupo செல்லுகின்றன. 11. நகர் முறைக் கடத்தல் ஒட்டங்கள உண்டாகச் செய்கின்றது எது? ஒரு பெரிய சாடியைக் குளிர்ந்த நீரினல் நிரப்பி அதைச் சரியாக ஒரு தராசில் வைத்து நிறுத்திடுக, அதே அளவு வெந்நீரால் சாடியை நிரப்பி மீண்டும் நிறுத்திடுக. சூடான நீரினைக் கொண்ட சாடி குறை வான நிறையுள்ளதாக இருப்பதை நீங்கள் உற்றுநோக்குவீர்கள். ஒரு கன அளவிற்குச் சரியான கன அளவு தண்ணிள் வெந் நீரைவிட அதிகப் பளுவானதாக இருக் கின்றது; ஆகவே நீர் சூடாக்கப்பெறுங்கால், தண்ணிரால் சூழப்பெற்றுள்ள வெந்நீர் மிதக் கும் தன்மையின் காரணமாக உயர்த்தப்பெறு கின்றதாதலால் நகர்முறைக் கடத்தல் ஓட்டங் கள் உண்டாக்கப்பெறுகின்றன. அதாவது, வெந்நீர் தண்ணிரைவிடக் குறைந்த திண்மை யுடையது : ஒரு திரவத்தில் நகர்முறைக் கடத் தல் ஒட்டங்கள் ஏற்படுவதற்கு இதுதான் காரணமாகும். 12. நீரின் அடர்த்தியில் (Density) வெப்ப நிலை ஒரு பொருள் தண்ணீரிலும் அதன்பிறகு வெந்நீரிலும் தொங்கவிடப்பெறுங்கால் மேல் நோக்கியே உந்து விசையில் ஏற்படும் மாற்றங் கட்கு செயல் விளக்கம் அளிப்பதற்கு இயல்-2, இனம் A 11இல் விவரிக்கப்பெற்றுள்ள கூரு ணர்வுத் தராசு பயன்படுத்தப்பெறுதல் கூடும். தராசுத் தட்டு ஒன்றன் இடத்தில் அதற்குப் பதி லாகத் தராசுக் கோலினின்றும் தொங்கவிடப் பெறும் ஒரு சாவி அல்லது வேறு பொருத்தமான ஓர் உலோகப் பொருளினை வைத்திடுக. இதனை ஒரு குவளை நீரில் வைத்துச் சரி-எடை கட்டுக. இப்பொழுது நீரின் வெப்பநிலையை உயர்த்து வதற்கு அதில் நீராவியை ஊதுக ; சாவி தன் மீது ஏற்படும். குறைந்த உந்து விசையின் காரணமாக அதிகப் பளுவாக ஆவதைக் கவ னித்திடுக. திரவங்களைவிட உலோகங்கள் மிகக் குறைவாக விரிவடைவதால் விளைவு எளி C வெப்ப இடமாற்றம் தாகப் பார்க்கப்பெறுகின்றது. மிகச் சரியான அளவீடுகள் தேவைப்பட்டால், உலோகத்தின் விரிவுபற்றிய திருத்தம் செய்யப்பெறலாம் ; அல்லது சாவிக்குப் பதிலாக இன்வார் (Invar) போன்ற விரியக்கூடாத ஒரு கலப்பு உலோகம் பயன்படுத்தப்பெறுதல் வேண்டும். 13. எந்த வெப்ப நிலையில் நீர் தன்னுடைய மிக உயர்ந்த அடர்த்தியை அடைகின்றது ? : நீருள்ள ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் ஒரு பனிக்கட்டித் துண்டினை வைத்திடுக. ஒரு வெப்பமானி மேற்பரப்பில் வெப்பநிலையை அளக்கக்கூடியதாகவும், மற்றென்று அடிமட் டத்தின் அருகில் வெப்ப நிலையை அளக்கக் கூடியதாகவும் இரண்டு வெப்பமானிகளே அமைத்திடுக. பனிக்கட்டியால் குளிர்வடைந்த நீர் அடிமட்டத்திற்குப் போவது கவனிக்கப் பெறலாம்; கண்ணுடிப் பாத்திரத்தின் அடிமட் டத்திலுள்ள நீர் கிட்டத்தட்ட 4°C வெப்ப நிலையை எய்தும்வரை இது தொடர்ந்து நடை பெறுகின்றது. இந்த வெப்ப நிலையில் அது நெடுநேரம் அப்படியே இருக்கும்; மிகக் குளிர்ந்த நீர் பணிக்கட்டியின் அருகில் தங்கிக் கொண்டிருக்கும். இதிலிருந்து 4°C வெப்ப நிலையிலுள்ள நீர் 0°C வெப்பநிலையிலுள்ள நீரைவிட அதிக அடர்வுடையது பது உய்த்துணரப்பெறலாம். むrgö丁 நீரின் இந்த விநோதமான நடத்தை இயற் கையில் மிகப் பெரிய நடைமுறை உட்குறிப் பினக்கொண்டுள்ளது; ஒரு குளத்தின் அடி மட்டத்திலுள்ள நீர் மிக அரிதாக 4°C வெப்ப நிலைக்கு இறங்கும்பொழுது அதன் மேற்பரப் பிலிருந்து நீர் ஏன் கீழ்நோக்கி உறைந்து செல்லுகின்றது என்பதை இது விளக்குகின் ற்து. 14. நீரில் நகர்முறைக் கடத்தல் ஒட்டங்களைக் காட்டுவதற்கு மற்ருெரு வழி: விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு மைப் புட்டி அல்லது பசைச் சாடியில் இரண்டு கண்ணுடிக் குழல்களைக் கொண்டுள்ள ஒரு தக்கையைப் பொருத்துக. ஒரு கண்ணுடிக் குழல் ஒரு மருந்து சொட்டும் கருவியின் முனை யைப்போல் ஒரு கூர் துணிக் குழலாக இருக்கப் 197