பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வெப்ப இடமாற்றம் பெற்றிருத்தல் வேண்டும். இந்தக் குழல் தக்கையின் வழியாகச் சற்று மேற்புறத்தில் வைக்கப்பெற்றுத் தக்கைக்கு வெளியே கிட்டத் தட்ட இரண்டு அங்குலங்கள் அளவு நீண் டிருக்க வேண்டும். மற்ருெரு குழல் தக்கையின் மட்டத்துடன் பொருந்தும்படியாகவும், கிட்டத் தட்டப் புட்டியின் அடிமட்டம் வரையில் நீண் டும் இருத்தல் வேண்டும். புட்டியைத் திண்மை யாக நிறமூட்டப்பெற்ற மிகச் சூடான நீரினல் நிரப்புக. இப்பொழுது ஒரு மின்கலச் சாடி அல்லது சமையலறையிலுள்ள ஒரு சாடியைப் போன்ற ஒரு பெரிய சாடியை மிகக் குளிர்ந்த நீரால் நிரப்புக. மைப் புட்டியைக் கழுவி அதனை மிக விரைவாகப் பெரிய சாடியின் அடி மட்டத்தில் வைத்திடுக. என்ன நிகழ்கின்றது என்பதைச் சற்று உற்றுநோக்குக. இதனை நீங்கள் விளக்கக் கூடுமா ? 15. ஒரு மாதிரி வெந்நீர் சூடாக்கும் அமைப் பின உண்டாக்குவது எங்ங்ணம்? ஒரு மின்விளக்குக் குமிழினின்றும் ஒரு பெரிய குடுவையை இயற்றுக. ஒர் அகன்ற வாய்ப் புட்டியினையும் ஒரு புனலையும் கைவசப்படுத்துக. படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அமைக்கப் பெற்ற மூன்று கண்ணுடிக் குழல்களைக் கொண் டுள்ள ஒருதக்கையினைப் புட்டியில் பொருத்துக. இரண்டு கண்ணுடிக் குழல்களைக் கொண் டுள்ள ஒரு தக்கையினைக் குடுவையில் பொருத் துக: ஒரு குழல் சற்றுத் தக்கையின்மூலம் பொருந்தியும் மற்றென்று குடுவையின் அடிமட்டம் வரையில் நீண்டும் இருக்கட்டும். படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு புனலே இணைத்திடுக. இது விரிவுத் தொட்டியாகப் (Expansion tank) பயன்படுகின் றது. இந்த அமைப்பினை நீரால் நிரப்பிச் கிட்டத்தட்டக் சூடாக்குக. கனல் வீசியின் (Radiator) எப் பகுதி முதலில் சூடாகின்றது என்பதை உற்று நோக்குக. நகர் முறைக் கடத்தல் ஓட்டங் களால் எங்ங்னம் நீர் சுற்றிச் செல்லுகின்றது என்பதை நீங்கள் விளக்கக்கூடுமா? 16. காற்றில் நகர் முறைக் கடத்தல் ஒட்டங்கள் : புகையிலைக் கொள்கலன்களை மூடுவதற்குப் பயன்படுத்தப்பெறுவது போன்ற மெல்லிய தகரத்தாலான ஒரு வட்டத் தகட்டினைப் பெறுக. அதன் சுற்றுப் புறத்தில் பற்களை வெட்டி அதனை ஒரு வளைந்த தையலூசியில் சுழலுமாறு அமைத்திடுக. அதனை ஒரு மெழுகு வத்திச் சுவாலேயின் மீது பிடித்திடுக ; அது விரைவாகச் சுழலும், தையலூசியின்மீது தாங்கப்பெற்றுள்ள ஒரு காகிதச் சுருள் அமைப்பும் இம்மாதிரியே சுழலும். திண்மைப் .ெ பா. ரு ஸ் நிலையிலுள்ள மெதிலேடட் ஸ்பிரிட்டினை (மீடா எரிபொருள்Meta fuel) ஒரு வெண் தழல் இரும்பிளுல் தொடுக. அதன் ஆவி உடனே திரும்பவும் படிக நிலையை எய்தி அறை முழுவதையும் மிக உயர்ந்த பனிக்கட்டிப் புயலால் நிரப்புகின்றது. ஏற்கெனவே அறையிலுள்ள காற்ருேட்டங் நகர்முறைக் கடத்தல் ஓட்டங் களாலும் படிகங்கள் இயக்க நிலையில் வைக்கப் பெறுகின்றன. r <' களாலும் 198