பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர்ந்த, வெப்பக் காற்றுக்களின் ஒளி sísogsstefiğ, šálsir (Refractive index) Geu òp மையைப் பயன்படுத்தி இந்தக் காற்ருேட்டங் களைக் காட்டுவது மற்ருெரு வழியாகும். ஒளித் திருப்பியற்ற (Reflector) ஒரு 12 வோல்டு காரின் குமிழ் ஒரு மின்சார அடுப்பினின்றும் அல்லது சாதாரண மின் விளக்குக் குமிழி னின்றும் நகர்முறைக் கடத்தல் ஓட்டங்களின் 'நிழலுருவங்களே (Shadows) விழும்படி செய் யும். மேலும், இயல் 8-8 சோதனை 6ஐயும் காண்க. 17. எங்ங்னம் நகர்முறைக் கடத்தல் ஒட்டங்கள் காற்றுக்களை (Winds) உண்டாக்குகின்றன?: இயல்-8, சோதனை - B 6 இனக் காண்க. 18. நகர்முறைக் கடத்தல் ஒட்டங்களும் காற் ருேட்டமும் : இயல்-8, சோதனை-B 5இல் காற்றுக்கள் பற் றிய படிப்பில் நீங்கள் பயன்படுத்திய பெட்டியினையே ஈண்டும் பயன்படுத்துக. ஒவ் வொரு கோடியிலும் மேலே இரண்டும் கீழே இரண்டுமாக நான்கு துளைகளை இடுக. வேறு சோதனைக்கு விளக்குக் கண்ணுடிகள் வைக்கப் பெறும் உச்சியிலுள்ள இரண்டு துளைகளும் உட்பட எல்லாத் திறப்புக்களையும் திண்மை யான தக்கைகளால் மூடுக. எதிர்க் கோடி களிலுள்ள துளைகள் சாளரங்களை உணர்த்து C. வெப்ப இடி மாற்றம் கின்றன; இந்தத் துளைகள் உச்சியிலும் அடி மட்டத்திலும் திறக்கப்பெறலாம், அல்லது மூடப்பெறலாம். நான்கு மெழுகுவத்திகளைப் பெட்டியில் வைத்து அவற்றில் தீ ஏற்றுக. இப்பொழுது நீங்கள் காற்ருேட்டத்திற்குரிய மிகச் சிறந்த நிலைமைகளே ஆராய்வதற்கு ஆயத்தமாக உள்ளிர்கள். எல்லாச் சாளரங் களையும் மூடி விட்டுச் சிறிது நேரம் மெழுகு வத்திகளை உற்றுநோக்குக. இ. ப் பொழு து வெவ்வேறு சேர்க்கைகளுடன் திறப்புக்களைப் பயன்படுத்துக. ஒரு சாளரம் தனியாக உச்சி யிலும் அடி மட்டத்திலும் திறந்திருக்கட்டும். ஒரு சாளரம் உச்சியிலும், மற்ருென்று அடி மட் டத்திலும் திறந்திருக்கட்டும். இரண்டு சாள ரங்கள் உச்சியில் திறந்திருக்கட்டும். ஒன்று மட்டிலும் அடி மட்டத்தில் திறந்திருக்கட்டும். இரண்டு சாளரங்கள் அடி மட்டத்தில் திறந் திருக்கட்டும். உச்சியில் ஒன்று மட்டிலும் திறந் திருக்கட்டும். எந்தச் சாளரத் திறப்புக்கள் மிக நல்ல காற்ருேட்டத்தை அளிக்கின்றன ? 19. கதிர் வீசலால் வெப்பம் இடமாற்றம் பெறு கின்றது : இதற்கு முன்னர்க் கூறப்பெற்ற சோதனையில் திண்மைப் பொருள்கள், திரவப் பொருள்கள், வாயுப் பொருள்கள் போன்ற பொருள்களால் வெப்பம் இடமாற்றம் பெறுதல் கூடும் என் பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். வெப்பம் வெற்றிடத்தின் குறுக்கேயும் அலை இயக்கத் தால் இடமாற்றம் செய்யப்பெறுதல் கூடும். இது கதிர்வீசல் என்று வழங்கப்பெறுகின் றது. வெப்பம் கிட்டத்தட்டக் கணமே நிகழும் செயல்போல் கதிர் வீசலால் கடந்து செல்லு கின்றது. இந்தச் சோதனை கதிர்வீசலைப்பற் றிய சில கவர்ச்சிகரமான செய்திகளைச் செயல் விளக்கம் செய்கின்றது. பொருத்தப்பெருத மின் விளக்குக் குமிழின்கீழ் உள்ளங்கை மேல் 199