பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C, வெப்ப இடமாற்றம் நோக்கி இருக்குமாறு கையைப் பிடித்துக் கொள்க. மின்சாரத்தைத் திருப்பி விடுக. குமிழைத் திருப்பி விட்டதும் கிட்டத்தட்ட உடனே நீங்கள் வெப்பத்தை உணர்கின்றீர் களா ? காற்று மிகக் குறைந்த வெப்பக் கடத்தி யாக இருப்பதால் வெப்பம் கடத்துதல்மூலம் உங்கள் கையை அடைந்திருக்க முடியாது. அது நகர்முறைக் கடத்தல்மூலமும் உங்கள் கையை அடைந்திருத்தல் இயலாது; ஏனெனில், இஃது உங்கள் கையினின்றும் வெப்பத்தை அப்பால் தாங்கிச் சென்றிருத்தல் வேண்டும். அஃது உண்மையில் மிகக் குறுகிய அலைகளால் சுமக்கப் பெற்று உங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. கதிர்வீசல் வெப்பத்தை அதன் மூலத்தினின் றும் எல்லாத் திசைகளிலும் சுமந்து செல்லு கின்றது. 26. ஒளி வீசும் வெப்ப அலகள் குவியச் செய்யப் பெறுதல் கூடும் : படிக்க உதவும் ஒரு கண்ணுடி வில்லையை வெயி லில் பிடித்துக் கதிர்களை ஓர் இழைநார்க் காகி தத்தின் கூளத்தின்மீது குவியச் செய்திடுக. குவியம் ஆன வெப்பக் கதிர்கள் இழை நார்க் காகிதத்தைத் தீ மூட்டுவதை நீங்கள் உற்று நோக்குவீர்கள், இந்தியா மையினுல் கறுப் பாக்கப்பெற்ற இழை நார்க் காகிதத்தினைப் பயன்படுத்தி அதன்மீது இதன் விளைவினை அறிய முயலுக. அஃது ஒளிர்வாக மிக விரை வில் தீப்பற்றுகின்றதா ? 21. ஒளி வீசும் வெப்ப அலைகள் ஒளித் திருப்பம் செய்யப்பெறுதல் கூடும் : மேற் குறிப்பிட்ட சோதனையில் படிக்க உத வும் கண்ணுடியினின்றும் இழை நார்க் காகிதத் திற்கு உள்ள தூரத்தைக் கவனித்திடுக. ஒரு புறமாகச் சாய்க்கப்பெற்றுள்ள ஆடியொன் றினே வில்லையினின்றும் இத் தூரத்தில் கிட்டத் தட்டப் பாதி அளவில் வைத்திடுக. நீங்கள் வெப்பக் கதிர்கள் குவியம் செய்யப்பெறும் புள்ளியைக் கண்டறியும்வரையில் ஆடிக்கு மேல் உங்கள் கையை வைத்து உணர முயல்க. இந்தப் புள்ளியில் கசக்கி உருண்டையாக்கப் பெற்ற இழைநார்க் காகிதத்தின் ஒரு சிறு பகுதி யைப் பிடித்து அது தீப்பற்றுகின்றதா என்று பார்த்திடுக. 22. வெவ்வேறு வகை மேற்பரப்புக்கள் கதிர் விகலைப் பாதிக்கின்றன : ஒரே அளவுள்ள மூன்று தகரக் குவளைகளைக் கைவசப்படுத்துக. ஒன்றினை, உட்புறமும் வெளிப்புறமும் வெண்மையாகவும், மற்ருென் றினக் கறுப்பாகவும் வண்ணந் தீட்டுக; மூன் ருவதை அப்படியே பளபளப்பாக விட்டிடுக. மூன்றினையும் ஒரே வெப்ப நிலையிலுள்ள வெது வெதுப்பான நீரினல் நிரப்புக, வெப்ப நிலை யைப் பதிந்துகொள்க. ஒவ்வொரு குவளையின் மீதும் அட்டை மூடிகளை வைத்து, ஒரு தட்டில் அக் குவளைகளே ஏற்றி, அதன் பின்னர் அவற்றை ஒரு குளிர்ந்த இடத்தில் வைத்திடுக. ஐந்து நிமிட இடைவெளிகளில் ஒவ்வொரு குவளையிலுமுள்ள நீரின் வெப்ப நிலையைப் பதிந்துகொள்க. குளிரும் வீதத்தில் யாதாவது வேற்றுமை இருந்ததா? எந்த மேற்பரப்பு மிகச் சிறந்த வெப்ப வீசியாக இருந்தது ? எது மிகக் குறைந்த வெப்ப வீசியாக இருந் தது ? - அடுத்து, அக் குவளைகளைத் தண்ணிரினல் நிரப்பி, வெப்ப நிலையைக் குறித்துக் கொண்டு, ஒவ்வொரு குவளையையும் மூடி, அவற்றை ஒரு வெது வெதுப்பான இடத்தில் அல்லது வெயி லில் வைத்திடுக. ஐந்து நிமிட இடைவெளி களில் வெப்ப நிலையைக் குறித்திடுக. எந்த மேற்பரப்பு மிகச் சிறந்த வெப்ப உறிஞ்சியாக இருந்தது? எப்பரப்பு மிகக் குறைந்த வெப்ப உறிஞ்சியாக இருந்தது? 23. மேற்பரப்புக்கள் எங்ங்ணம் கதிர்வீசலைப் பாதிக்கின்றன என்பதைக் காட்டும் மற்றெரு முறை: - ஓர் உருளை வடிவமான தகரக் குவளையில் ஒன் றற்கொன்று எதிராக இருக்குமாறு இரண்டு பிளவுகளை வெட்டுக; இதல்ை குவளையின் மேற்பரப்பு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பெறுகின்றது. ஒரு பாதியின் உட்புறத்திற்குக் கறுப்பு வண்ணம் தீட்டுக; மற்ருெரு பாதியினை பளபளப்பாக இருக்கும்படியே விட்டுவிடுக. தி ஏற்றிய மெழுகுவத்தியொன்றினை அடித்தளத் தின் சரியான மையத்தில் வைத்திடுக. விரல்களைக்கொண்டு இரண்டு வெளிப்புற வெப்ப நிலைகளின் வேறுபாடு கண்டறியப் பெறலாம். - 200