பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெழுகினல் வெளிப்புறத்தில் இணைக்கப் பெற்ற தீக்குச்சிகளும் அளவு தெரிவிக்கும் சாதனங்களாகப் பயன்படுத்தப்பெறலாம் ; கறுப்புநிறப் பகுதியின் பின்புறத்திலுள்ள குச்சி முதலில் கீழே விழுந்துவிடும். ஒரு புன்சென் அடுப்புக் குழலின் உச்சியைச் சுற்றிலும் மூடப்பெற்ற நேர்த்தியர்ன கம்பி வலையாலான ஒரு சுருள் உருளையினை வெப்பம் தரும் கருவியாகவும், கறுப்பு வண்ணம் திட்டப் பெற்ற வெப்பமானிகளைக் கதிர்வீசலைக்கண்டறி யும் சாதனங்களாகவும் பயன்படுத்துவது ஒரு மாற்றுவழிச் சோதனையாகும். 24. எளிய வெப்பநிலை மாறுபாட்டளவை æTiltą (Thermoscope): குடுவைகள், அல்லது வெட்டப்பெற்ற விளக்குக் குமிழ்கள், இந்த ஆய்கருவியை இயற்றிடப் பயன்படுத்தப்பெறுதல் கூடும். மெழுகுவத்தியைக்கொண்டு விளக்கப்பெறும் சோதனையைத் தவிர வேறு சோதனைகளிலும் (எ-டு. லெஸ்லி கன சதுரம்) இது நன்கு செயற் படுகின்றது. இரண்டு குமிழ்களையும் தக்கைகளாலும் கிட்டத்தட்ட 15 செ.மீ. நீளமுள்ள குழல்களா லும் பொருத்துக. குழல்களின் கீழ்முனைகளைச் சுமார் 21 செ. மீ. இடைவெளி விட்டு துளை களிடப்பெற்ற ஒரு பொருத்தமான அடித்தளப் பலகையில் துளைகளுக்குமேல் பொருத்தப் பெற்றுள்ள தட்டையான தக்கைகளின் வழி யாகச் செலுத்துக ; குழல்களைச் செங்குத் தான நிலையில் பசையைக்கொண்டு ஒட்டிப் பொருத்துக திறந்துள்ள முனைகளை இரப் பர்க் குழலால் இணைத்திடுக. ஒரு குமிழை அகற்றி மற்ருென்றினை ஒரு மெழுகுவத்திச் சுவாலேயில் வைத்துக் கறுப்பு நிறமாக்குக. XXVI C. வெப்ப இடிமாற்றம் இங்ங்ணம் அமைந்த U-குழலில், அடித்தளப் பலகைக்கு மேல் சுமார் 7.5 செ.மீ. அளவு நீர் மட்டம் இருக்கும்வரையிலும் திரவத்தை ஊற்றுக. தெளிவாகவுள்ள குமிழைத் திரும்ப வும் அதன் இடத்தில் வைத்து திரவம் மட்ட மாக இருப்பதற்கேற்றவாறு குழலே உள்ளும் புறமுமாக நழுவச் செய்திடுக. இரண்டு குமிழ் கட்கும் சம தூரத்திலிருக்குமாறு ஒரு மெழுகு வத்தியினை வைத்து முடிவுகட்காகக் காத்துக் கொண்டிருக்க, 25. எங்ங்னம் வெப்ப இழப்புக்கள் குறைக்கப் பெறுதல் கூடும்? : ஒரே அளவுள்ள நான்கு பெரிய தகரக் குவளைகளையும் ஒரே அளவுள்ள நான்கு சிறிய தகரக் குவளைகளையும் கைவசப்படுத் துக. சிறிய குவளைகளில் மூன்றினைப் பெரிய குவளைகளில் மூன்றன் உட்புறத் தில் வைத்துச் சிறிய குவளைகளின் ஒவ் வொன்றின் கீழும் அதனைக் சுற்றிலும் காப் 136th Quirósirr si (Insulating material) நெருக்கி அடைத்திடுக. ஒன்றினைக் கிழிந்த செய்தித் தாள் துண்டுகளாலும், இரண்டா வதை மரத் தூளாலும், மூன்ருவதைப் பொடி யாக்கப்பெற்ற தக்கையிலுைம் நெருக்கி அடைத்திடுக. (வேறு வசதியான காப்பிடும் பொருள்கள் கிடைத்தால் அவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.) நான்காவது பெரிய குவளையில் இரண்டு தக்கைகளின்மீது தங்கு மாறு சிறிய குவளையை வைத்திடுக. ஒவ்வொரு குவளையிலும் ஒட்டுப் பலகை முடிகளைப் பொருத்துக. ஒவ்வொரு மூடியிலும் வெப்ப மானியை வைப்பதற்கு ஒரு துளை இருக்கட்டும். இப்பொழுது ஒவ்வொரு சிறிய குவளையையும் ஒரே அளவு ஆழத்திற்குக் கிட்டத்தட்டக் 201