பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1). உருகுதலும் கொதித்தலும் தில் ஓர் அடுக்கினை வைத்திடுக ; இதனைச் சோற்றுப்பினல் மூடி அதன் பிறகு பனிக்கட்டி, சோற்றுப்பு இவற்றின் ஏனைய அடுக்குகளைச் சேர்த்திடுக. சிறிதளவு நீரை ஒரு சிறிய தகரக் குவளையில் ஊற்றி இத் தகரக் குவளையைப் பெரிய தகரக்குவளையின் உட்புறத்தில் வைத் திடுக. அதன் பிறகு பெரிய குவளை நிறையும் வரையிலும் மேலும் பனிக்கட்டி, உப்பு இவற் றின் அடுக்குகளைச் சேர்த்திடுக. சிறிய குவளையி லுள்ள நீர் உறைவதற்குத் தேவையான நேரத்தைக் குறித்துக் கொள்க. பனிக்கட்டி மட்டிலும் பெரிய குவளையில் பயன்படுத்தப் பெற்று அதே அளவு நீரை உறையச் செய்வ தற்குத் தேவையான நேரத்துடன் இதனை ஒப்பிடுக. 10. நீர் உறையுங்கால் விரிவடைகின்றது : திருகு மூடியைக்கொண்ட ஒரு சிறிய உலோ கக் குவளையைக் கைவசப்படுத்துக. அதில் நீர் வழிகின்றவரை அதனை நீரினல் நிரப்பி அதன் பிறகு யாதொரு காற்றிடமும் இல்லாமல் பார்த்து மூடியை வைத்துத் திருகிவிடுக. நீரைக் கொண்ட இந்தக் குவளையைப் பனிக்கட்டியும் உப்பும் கலந்த கலவையில் புதைத்து, நீர் உறை யும்வரையில் சிறிது நேரம் அப்படியே விட்டு வைத்திடுக. நீங்கள் சில கவர்ச்சிகரமான முடிவுகளை அடைதல் வேண்டும். 11. திண் பொருள்கள் உருகும்பொழுது வெப்பம் உறிஞ்சப்பெறுகின்றது: வெட்டப்பெற்ற பனிக் கட்டியைக்கொண்ட ஒரு சிறிய கொள்கலனக் கைவசப்படுத்தி ஒரு வெப்பமானியைக் கொண்டு அதன் வெப்ப நிலையைக் கண்டறிக. அக் கொள்கலனை ஒரு சுவாலையின்மீது வைத்து பனிக்கட்டி முழு வதும் உறையும்வரையிலும் வெப்ப நிலையை உற்றுநோக்குக. எப்பொழுது வெப்ப நிலை ஏறத் தொடங்கியது? சிறிது நேரம் வரை ஏன் வெப்ப நிலை ஏறவில்லை? இந்த வெப்ப ஆற்றல் என்ன ஆயிற்று ? 12. அமுக்கத்தால் உருகச் செய்தலும் அதனைத் திரும்ப உறையச் செய்தலும் : நீங்கள் பனிக்கட்டிக்கு அமுக்கத்தைத் தரும் பொழுது அதன் உறை நிலையைத் தாழ்த்து யாகத்தானிருக்கும். கின்றீர்கள். இதன் காரணமாகத்தான் சறுக்குக் கட்டைகள் பனிக் கட்டியின்மீது நகர்கின் றன. ஒவ்வொரு கையிலும் ஒரு பனிக்கட்டிக் கன சதுரம் அல்லது பனிக்கட்டித் துண்டினைப் பிடித்துக் கொள்க. ஒரு தாளின்மீது அவை இரண்டினையும் சேர்த்து அழுத்துக அமுக்கத் தினுல் பணிக்கட்டியினின்றும் நீர் வருமாறு உங் களால் செய்தல் கூடுமா? இரண்டு பனிக்கட்டிக் கன சதுரங்களை வலுவாகச் சேர்த்து அமுக்கிப் பின்னர் அமுக்கத்தை விடுவித்திடுக. இரண்டு பனிக்கட்டிக் கன சதுரங்களையும் பிரித்திட முயலுக. நீங்கள் அமுக்கத்தை விடுவிக்கும் பொழுது நீர் திரும்பவும் உறைந்து பனிக் கட்டிக் கன சதுரங்கள் திண் பொருளாகப் பிடித்துக்கொள்ளுகின்றன. 13. ஒரு தகரக் குவளையைப் பயன்படுத்திக் கண் டறியப்பெறும் உள்ளுறை வெப்பம் : கால இடைவெளிகளில் வெப்ப நிலைகளை எடுத்தும், அவற்றைக் கால-வெப்ப நிலையைக் காட்டும் வரைப் படத்தில் இட்டும் ஒரு சுவாலை ஒரு தகரக் குவளையிலுள்ள 100 கிராம் நீருக்குத் தரும் வெப்ப வீதம் கண்டறியப்பெறலாம். நீர் கொதிக்கத் தொடங்கும்பொழுது மேலும் வெப்ப நிலையில் ஏற்றம் இல்லை ; ஆளுல், வெப்பம் அளிக்கப்பெறும் வீதம் ஒரே மாதிரி ஆவியாதலால் கொதி நிலைக்குக் கொண்டுவருவதில் இழக்கப்பெறும் நீரைத் தள்ளுபடி செய்தால், 100 கிராம் நீரை முற்றிலும் ஆவியாக்குவதற்குத் (அஃதாவது, குவளையின் அடிமட்டம் உலர்ந்த நிலையில் இருக்கும் வரையில்) தேவையான வெப்பம் இது நிகழ்வதற்குத் தேவையான நேரத்தி லிருந்து கண்டறியப்பெறுதல் கூடும். 14. ஓர் உட்குழிவான திண் பொருளைப் (Hollow Solid) பயன்படுத்திக் கண்டறியப்பெறும் உள் ளுறை வெப்பம் : நீராவியின் உள்ளுறை வெப்பத்தை அறுதி யிடக் கூடிய ஒரு மாற்று வழி ஒரு பளுவான உலோகத்தாலான உட்குழிவான திண் பொருளை ஒரு குளிர் கலமாகப் பயன்படுத்துவ தாகும். ஓர் உத்தேச மதிப்பிற்கு ஒரு தேநீர் பாத்திரம் பயன்படுத்தப்பெறுதல் கூடும். 204