பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கெண்டியிலிருந்து நீராவி ஒரு தேநீர்ப் பாத்திரத்திற்குள் அனுப்பப்பெறும்பொழுது குளிரும் நீரின் பொருண்மை தேநீர்ப் பாத் திரத்தின் வெப்பு-ஏற்புத்திறனைப் (Heat capacity) பொறுத்தது. ஒரு பித்தளை அச்சுமூடி பயன்படுத்தப் பெறுங்கால், அது நுழைவாயில் வெளியேறு குழல்களையுடைய பீப்பாத் துளையடைக்கும் கட்டையுடன் பொருத்தப்பெறுதல் வேண்டும். நீராவி ஆய்கருவியினுள் செலுத்தப்பெறும் பொழுது, அது வெளியேறு குழலினின்றும் வெளிவருவதற்கு முன்னர் அது குளிர்ந்த உலோகத்தினுல் குளிரச் செய்யப்பெறுவதால் சிறிது நேரம் கழிகின்றது. சில நிமிடங்கள் நீராவி வெளிவந்த பிறகு, உலோகம் 100°C. வெப்ப நிலையிலிருப்பதால், நீராவி தரப்பெறு வது நிறுத்தப்பெறுதல் வேண்டும். ஒர் அளவு ச்ாடியைக்கொண்டு குளிர்ந்த நீராவியின் பரி மாணத்தை அளந்து அதன் பொருண்மை (Mass) கண்டறியப்பெறுகின்றது. வெப்ப - எண் (Specific heat), உலோகத்தின் பொருண்மை, அதன் தொடக்கத்திலுள்ள வெப்ப நிலை இவை கொடுக்கப்பெற்ருல், நீராவியைக் குளிர்விப்பதில் அதனுல் உறிஞ்சப் பெறும் வெப்பம் கணக்கிடப்பெறுகின்றது. 15. பனிக் கட்டியின் உள்ளுறை வெப்பம் : சூடாக்கப்பெற்ற ஒரு திண் பொருள் பனிக் கட்டித் துண்டுகளில் புதைக்கப்பெறுங்கால் எவ்வளவு பனிக்கட்டி உருகுகின்றது என்பதை அளத்தலால் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பத்தின் (Latent heat) உத்தேச மதிப்பு கண்டறியப்பெறுதல் கூடும். வெப்ப-எண் தெரிந்த ஒரு திண் பொருளை நிறுத்து, அதனை ஒரு நூலால் நீரில் தொங்க விட்டு, அதன் வெப்ப நிலையினை 100°C.க்கு உயர்த்துக. விரைவாக அதனை பொடியாக்கப் பெற்ற பனிக்கட்டியினையுடைய ஒரு புனலுக்கு இடம் மாற்றுக ; அதஞல் உண்டாகும் நீரினை ஒரு சோதனைக் குழல் அல்லது அளவிடும் உருளையில் சேகரித்திடுக. 0°C.க்குக் குளிர்வதால் உலோகத்தினுல் வெளிவிடப்பெறும் வெப்பத்தைக் கணக்கிடுக. ம். உருகுதலும் கொதித்தலும் வெவ்வேறு பொருள்களின் வெப்ப-எண்ணில் உள்ள வேற்றுமைக்குச் செயல்விளக்கம் தருவ தற்கும் இந்த ஆய்கருவி பயன்படுத்தப்பெறு தல் கூடும். ஒவ்வொரு சோதனையிலும் கிடைக்கும் நீரின் பரிமாணம் வெப்ப-எண் களின் ஒப்பீட்டினைத் தருகின்றது. 16. ஒரு தேநீர்ப் பாத்திரத்தைப் பயன்படுத்தி வெப்ப-எண் : r அறையின் வெப்ப நிலையில் எடை காணப் பெற்ற ஒரு தேநீர்ப் பாத்திரத்தில் கொதிக்கும் நீரினை ஊற்றுக. கிட்டத்தட்ட 96°C இல் வெப்ப நிலை நிலையானதாக இருக்கும். அது சிறிதளவு குளிர்ந்ததும் ஓர் அளவை சாடி யினைப் பயன்படுத்தி, பயன்படுத்தப்பெற்ற சூடான நீரின் பொருண்மையினை அளந்திடுக. சுற்றுப்புறங்கட்கு யாதொரு வெப்ப இழப்பும் இல்லை என்று கொண்டு, பொருளின் வெப்பஎண் கணக்கிடப்பெறுதல் கூடும். இந்தச் சோதனை வெப்ப-எண்பற்றிய அறி பொருளின் ஒரு முன்னுரையாக அமைகின்றது; அல்லது இது தேநீர்ப் பாத்திரங்களில் பயன் படுத்தப்பெறும் வெவ்வேறு பொருள்களின் பண்புகளை ப்பற்றிய ஆராய்ச்சியின் ஒரு பகுதி யாகப் பயன்படுத்தப்பெறலாம். 17. வெப்ப - எண் ஒப்பீடு: வெவ்வேறு உலோகங்களின் வெப்ப-எண் களே ஒப்பிடுவதற்கு, ஒரே பொருண்மையைக் கொண்ட அவ்வுலோகங்களாலாகிய உருளை களைத் தயாரித்திடுக. அவற்றை நீரின் கொதி 205