பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. வெப்பப் பொறிகள் 3. புகழ்பெற்ற நீராவி விளயாட்டுக் கருவியின எங்கனம் இயற்றுவது : எகிப்து நாட்டைச் சேர்ந்த பண்டைய அலெக்ஸாண்டிரியா நகரிலிருந்த ஹிரோ (Hero) என்பவர் ஒரு நீராவிப் பொறியை இயற் றினர்; அதை அவர் காற்றுக்களின் பந்து' என்று பெயரிட்டு வழங்கினர். அந்த மாதிரி விளையாட்டுக் கருவியை அமைக்கும் முறை இது தான். சுமார் ஒரு பிண்ட் அல்லது அரை லிட் டர் நீர் கொள்ளக்கூடிய ஓர் உராய்வு மூடி யினைக்கொண்ட ஒரு தகரக் குவளையைக் கைவசப்படுத்துக. அந்தக் குவளையின் எதிர்ப் பக்கங்களில் சிறிய ஒரு-துளை அடைப்பான்களைப் பொருத் தக்கூடிய அளவுக்குப் பெரி தாக இருக்குமாறு இரண்டு துளைகளை இடுக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு இரண்டு கண்ணுடிக் குழ ல் க ளை வளைத்திடுக. குழல்கள் முனையில் கூர்நுனி களாக இழுக்கப் பெற்றிருத் தல் வேண்டும். கூர் நுனி கள் எதிர்த் திசைகளைப் பார்த்துக் கொண்டிருக்கு மாறு அடைப்பான்களில் குழ ல் க ளே ப் பொருத்துக. அடைப்பான்கட்குக் கயிற்றினைக் கட்டிக் குவளையைச் சுழல்-மூட்டு அல்லது சங்கிலியால் தொங்கவிடுக. சுமார் 3 செ. மீ. ஆழத்திற்குக் குவளையில் நீர் ஊற்றி, மூடியை இறுகப் போட்டு அதனை ஒரு சுவாலையின்மீது வைத்திடுக. 4. மாதிரி நீராவிச் சுழலியை எங்ங்ணம் இயற்றுவது? : காற்ருடிச் சக்கரம் ஒன்று பொருத்தப் பெற்றுள்ள ஒரு தகரக் குவளையினின்றும் ஒரு மாதிரிச் சுழலி (Turbine) அமைக்கப்பெறலாம். ஒரு வட்டமான தகரத் துண்டினின்றும் ஆரக் கீற்றுக்களை வெட்டியெறிந்து எஞ்சியுள்ள வால் அலகினைத் திருகிக் காற்ருடி இறகுகள் அமைக்கப்பெறுகின்றன. இந்தச் சுழலியின் அச்சு ஒரு தையலூசியா கும் , அச்சுத் தாங்கி U-வடிவமாக வளைக் கப்பெற்ற ஒரு தகரத் துண்டினின்றும் இயற்றப் பெற்றுக் குவளையின் உச்சியின்மீது பற்ருசு வைத்து இணைக்கப்பெறுகின்றது. நீராவிப் பீற்ருங்குழலுக்குரிய ஒரு துளை காற்ருடி இறகுகட்கு எதிர்ப்புறமாகச் செய்யப் பெறுதல் வேண்டும். 5. கண்ணுடியினின்றும் எங்ங்னம் ஒரு மாதிரிச் சுழலியை இயற்றுவது ? : இந்த மாதிரி உருவத்தை அமைத்திடுவதற்கு மிகச் சிறிதளவு கண்ணுடி ஊதும் அனுபவம் தேவைப் படுகின்றது. ஒரு சாதாரணக் கண்ணு டிக் குழலே ஒரு சுவாலையில் வைத்து, அதன் ஒரு முனையை அடைத்து, அதில் சுமார் 1.5 செ.மீ. குறுக்குவிட்டமுள்ள ஒரு குமிழினை ஊதுக. குமிழின் அடிமட்டத்தை மென்மையாக்கச் அழுத்துக. சுழலியின் அடிப்புறச் சுழலச்சாகத் துணைபுரிவதற்கு இஃது ஒரு பள்ளத்தைச் செய் 208