பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யும், குழலின் உச்சிப் பகுதியை 90°க்கு வளைத்து மீண்டும் ஒரு செங்கோணமாக வளைக்கப் பெற்ற ஒரு கூர் நுனிக் குழலாக இழுத்திடுக. குமிழினைச் சூடாக்கியும் அதன் பிறகு திறந்த முனையினை ஒரு கண்ணுடிக் குவளையிலுள்ள நீரின் மேற்பரப்பின்கீழ் ஆழ்த்தியும் குமிழில் பாதியளவு நீரினல் நிரப்புக. ஒவியத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு தாங்கியாகச் செயற்பட ஒரு கம்பிச் சட்டத்தை அமைத்திடுக. 6. ஒரு பழைய உலோக மெருகேற்றும் பொரு ளுள்ள தகரக் குவளையினின்றும் வெப்பப் பொறி : குவளை இரண்டு தாமிரக் குழல்களின்மேல் கிடைமட்டமாகத் தாங்கப்பெறுகின்றது; இத் NJT s தாமிரக் குழல்கள் வெளியேறு குழலாகத் துணை. புரிகின்றன. அவை குவளையின் அடி மட்டம், உச்சி இவற்றின் மையத்தினூடே பற்ருசு வைத்துப் பொருத்தப்பெறுகின்றன. குவளை அரைகுறையாக நீரால் நிரப்பப்பெற்று ஒரு மரத்தாலாகிய அடித்தளத்தில் பொருத்தப் பெற்றுள்ள இரண்டு இரும்புத் தாங்கிகளின் மீது தங்குகின்றது. 呜 7. வெடிக்கும் வாயுவின் விசையினைக் காட்டுதல் : ஒன்று அல்லது இரண்டு லிட்டர் கொள்ளக் கூடிய உராய்வு மூடியைக்கொண்ட ஓர் உலோகக் குவளையைக் கைவசப்படுத்துக. உராய்வுள்ள உச்சியின் மையத்தில் சுமார் அரை சென்டி மீட்டர் குறுக்கு விட்டமுள்ள ஒரு துளை இடுக. குவளையின் அடிமட்டத்தின் அருகில் 2 செ. மீ. குறுக்களவுள்ள மற்ருெரு துளையினை இடுக. உராய்வு முடியினை இறுக்க மாக வைத்து அழுத்துக, ஒரு வாயுக் கூர் நுனிக் குழலிலிருந்து நெளியக்கூடிய ஒரு XXVII E. லெப்ாப் அொறிகள் நீண்ட குழலைக் (Hose) குவளையின் அடித் துளையில் வைத்து வாயுவினைத் திருப்பிவிடுக. குவளை வாயுவால் நிரம்பி அதன் மேற்புறத் துளையின் வழியாக வெளிவரும் வாயுவின் மனத்தை நீங்கள் உணரும்வரையிலும் வாயு வினை விடுக. நெளியும் குழலை அகற்றி மேற் புறத் துளையில் வாயுவினைத் தீப்பற்றச் செய்க. சற்றுப் பின்புறமாக ஒதுங்கி நின்றுகொண்டு முடிவுகளைக் கவனித்திடுக. சுவாலை அணைந்து விட்டதாகக் காணப்பெறினும் குவளையின் அருகில் போகற்க வாயு உச்சியில் எரியும் பொழுது அடி மட்டத்தின் உள்ளே என்ன வரு கின்றது ? எப்பொழுது கலவை (Mixture) வெடிக்கும் பொருளாக அமைந்தது? (காற்றின் அளவுடன் ஒப்பிட்டால் வாயுவின் அளவு என்ன?) * - 8. ஒரு பொறியில் எங்ங்ணம் பெட்ரோலின் ஆவி வெடிக்கப்பெறுகின்றது ?: இந்தச் சோதனைக்கு உராய்வு முடியினைக் கொண்ட ஓர் உலோகக் குவளை உங்கட்குத் தேவைப்படும். ஒரு சாதாரண தானியங்கியின் பொறிமுளை (Spark plug) பொருத்தப்பெறுவ தற்கேற்ப குவளையின் அடி மட்டத்தருகில் ஒரு துளையிடுக. அடி மட்டத்தருகில் எதிர்ப்புறத் தில் ஒரு சிறு ஆணித் துளையிடுக. தேவை ursor o-ui lòsłr 9HQ93;5th (High voltage) தருவதற்கு உங்கட்கு முதல் நிலை மின் சுற்றில் ஒரு குறுக்கீடு சாதனத்துடன் (Interruptor) கூடிய ஒரு மின் தூண்டு சுருள் (Induction coil) உங்கட்குத் தேவைப்படும். மின் தூண்டு சுருளின் முதல்நிலைக் கடத்திகளை (Primary leads) மூன்று அல்லது நான்கு உலர்ந்த மின் கலன்களுடன் இணைத்திடுக. ஓர் இரண்டாம் food; 3, 1–3 fissou (Secondary lead) Qu'rs) முளையின் உச்சியுடனும் மற்ருெரு கடத்தியை குவளையின் விளிம்புடனும் இணைத்திடுக. குவளையை வெதுவெதுப்பாக்குக. கிட்டத் 209