பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு மரக் கட்டையில் அடிக்கப்பெற்றுள்ள தையலூசியின்மீது சமனிலையாக நிறுத்துக. சுழலச்சினை முத்திரை அரக்கினைக் கொண்டோ அல்லது பசையினைக் கொண்டோ நிலையாகப் பொருத்துக. 15. பூமியின் காந்தத் தன்மையைக் காட்டும் மாதிரி அமைப்பு : இந்த மாதிரி அமைப்பில் பூமியை உணர்த் துவதற்கு ஒரு பந்து அல்லது உருண்டையான பழம் தேவைப்படுகின்றது. அதனை ஒரு கோணத்தில் சாய்ந்திருக்கும் மரத்தாலான ஓர் அகப்பைக் கோலில் தாங்குமாறு அமைத்திடுக. இது பூமியின் சுழற்சியின் அச்சிற்கு அறிகுறி யாக உள்ளது. பூமியின் காந்த அச்சு இந்த பூமியைக் காந்தமாக்கப்பெற்ற தையலூசியினுல் துளைத்திடுக ; இந்த ஊசி பூமியின் காந்த அச்சின் திசையில் அமைந் திருக்கும். கைக்கடிகாரச் சங்கிலியில் ஓர் அணி போல் அடிக்கடிப் பயன்படுத்தப்பெறுவது போன்ற ஒரு சிறிய திசை காட்டியைப் பயன் படுத்தி வெளிப்புறப் புலத்தினைச் சோதித் திடுக. - - - -- 16. எங்ங்ணம் சரிவு வட்டத்தை (Dip circle) ஆக்குவது? : - - ஒரு தக்கையின்வழியாக அதன் முனையின் ஒரு குறுக்கு விட்டத்திற்கு இணையாக ஒரு தையலூசியைச் செலுத்துக. குண்டு சிகளை ஒர் அச்சாகப் பயன்படுத்தித் தக்கையை ஒரு காந்தத் தன்மை U-வடிவமுள்ள பித்தளைக் கீற்றின்மீது கிடை மட்டமாகச் சமநிலையாக்குக. அதனைக் கத்தி முனைகளினின்றும் எடுத்துத் தக்கையின் அமைதி கலையாது அதனைக் காந்தமாக்குக. அது திரும்பவும் சுழலச்சுக்களின் மீது வைக்கப் பெற்றதும், பூமியின் காந்தப்புலனல் ஒரு முனை கீழ்நோக்கி இழுக்கப்பெறும். அந்த அமைப்பிலுள்ள பாகைமானி (Protractor) இந்தச் சரிவுக் கோணத்தை அளக்கத் துணை புரிகின்றது. காந்தத்தைத் தொங்கவிடுவதில் ஒரு மாற்று வழியும் உண்டு ; இதில் ஒரு மிதிவண்டி வால் வுக் குழல் அதன்வழியாகச் செலுத்தப்பெற்ற ஒரு குண்டுசியுடன் அச்சாகப் பயன்படுகின் றது. ஒவியத் தட்டு சிகளால் சரியான நிலை யில் நிலைபெறுமாறு செய்யப்பெற்றுள்ள தக்கை களால் இடைவெளிவிட்டு வைக்கப்பெற்றுள்ள அஞ்சல் அட்டைகளால் கத்தி முனைகள் அளிக் கப்பெறுதல் கூடும். அதன் பிறகு சரிவுக் கோணத்தின் நிலை ஒரு பென்சிலைக்கொண்டு அடையாளம் செய்யப்பெற்றுப் பின்னர் அளக்

  • கப்பெறுதல் கூடும்.

உலோக இணைப்புச் சாதனங்கள் கிடைக் கப்பெறின், அவற்றுடன் கிராமஃபோன் ஊசி களைப் பற்ருசினல் இணைத்து மிகவும் நிரந்தர மான பொறியமைப்பு இயற்றப்பெறுதல்கூடும். 17. செயல் விளக்கச் சரிவு வட்டம் : - 50 செ. மீ. வெளிக் குறுக்குவிட்டத்துடன் கூடிய ஒர் அட்டை வளையத்தை வெட்டுக. இரண்டு மரச் சட்டங்களை அதன் குறுக்கு விட் டத்தின்வழியாக இறுகப் பிணைத்திடுக; இவை 215