பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாந்தித் தன்ம்ை சரிவு ஊசியின் தாங்கிகளாகப் பயன்படுகின் றன. ஓர் அட்டையினின்றும் ஒரு மாதிரி சரிவு ஊசியினை வெட்டி சட்டங்களில் வெட்டப்பெற் றுள்ள பள்ளங்களில் அதனைத் தாங்கச் செய் திடுக. சரிவு வட்டத்தின் பல்வேறு தவறுகளைக் கலந்தாயும்போது இத்தகைய ஒரு மாதிரி அமைப்பு பயன்படுகின்றது. 18. திசை காட்டியைக் கொண்டு துருவி ஆராய் தல் : இரும்பினுலும் எஃகினுலும் செய்யப்பெற்ற பல பொருள்கள் பூமியின் காந்தத் தன்மை யினல் காந்தமாக்கப்பெறுகின்றன. ஒரு திசைகாட்டியினைக்கொண்டு இரும்பு வேலித் தூண்கள், இருப்புப் பாலங்கள் முதலியவற்றை துருவியாராய்தல் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளது. அவை காந்தத் துருவங்களைக்க கொண்டுள்ளனவா என்பதைக் காண அவற் றின் இரு முனைகளையும் சோதித்திடுக. ஓர் இரும்புக் கோலினைப் பூமியில் அறைந்து அது காந்தமாக்கப்பெறுகின்றதா எ ன் ப தை க் காண்க. அதன் உச்சியிலும் பூமியின் அருகி லும் அதனைச் சோதித்திடுக. ஒரு திசைகாட்டி யினைக்கொண்டு பள்ளியைச் சுற்றியுள்ள பொருள்களையும் வீட்டிலுள்ளவற்றையும் சோதித்திடுக. - 19. எப்பொருள்கள் காந்தத் தன்மையுடையவை: காகிதம், மெழுகு (அரக்கு), பித்தளை, துத்த நாகம், இரும்பு, எஃகு, நிக்கல், கண்ணுடி, தக்கை, இரப்பர், அலுமினியம், தாமிரம், பொன், வெள்ளி, மரம், வெள்ளியம் முதலிய வற்ருலான பல்வேறு வகைப் பொருள்களைச் சேகரித்திடுக. அவற்றை ஒரு பெட்டியில் வைத்து அவற்றுள் எவை கவரப்பெறுகின்றன, எவை கவரப் பெறவில்லை என்பதை ஒரு காந் தத்தைக்கொண்டு சோதித்திடுக. 20. சம்மட்டியால் அடித்து ஒரு சட்டத்தைக் காந்தமாக்கல் : சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள ஓர் இரும்புக் கோலினைக் கைவசப்படுத்துக. ஓர் இரும்புத் திரைக் கோல் இதற்குப் போதுமானது. அது காந்தமாக்கப்பெற்றுள்ளதா எ ன் ப .ைத க் காண ஒரு திசைகாட்டியைக்கொண்டு ஒவ் வொரு முனையையும் சோதித்திடுக. அந்தச் சட்டத்தினை வடக்கு-தெற்குத் திசையில் வைத்து அதனை ஒரு புறமாகச் சாய்த்திடுக. இந்த நிலையில் அதனை வைத்துக்கொண்டே ஒரு சம்மட்டியினைக்கொண்டு அதனைப் பல தடவைகள் பலமாகஅடித்து அதன் பிறகு ஒரு திசைகாட்டியினைக் கொண்டு அதனை மீண்டும் சோதித்திடுக. ஒரு சட்டத்தைக் கிழக்குமேற்குத் திசையில் வைத்துக்கொண்டு ஒரு சம்மட்டியினைக்கொண்டு அதன் முனையைப் பல தடவைகள் அடித்துக் காந்தத்தன்மை அதனினின்றும் அகற்றப்பெறலாம். 21. ஓர் ஒட்டுவரையிலும் வெட்டப்பெற்ற இரண்டு பள்ளங்களையுடைய ஓர் ஒட்டுப் பலகைத் துண்டு காந்தங்களையும் காந்தப் பொருள்களையும் வைத்து அவற்றின் விசை களின் கோடுகளின் கோலங்களைச் சோதிப்ப தற்குப் பயன்படுகின்றது. விசையின் கோடுகள் : காந்தங்களின்மீது பயன்படுத்தப்பெறும் தாள் முதலில் சூடான மெழுகின் எண்ணெய்ப் பசையில் ஆழ்த்திக் குளிரச் செய்தால் அத் தகைய அரத்துள்ள் படங்களின் நிரந்தரப் பதிவேடுகள் ஆக்கப்பெறுதல் கூடும். சோதிக் கப்பெறும் காந்தங்களின்மீது அத்தாளை வைத்து, 30 செ. மீ. உயரத்தினின்றும் அதன் மீது அரத் தூள்களைத் தூவி, தாளினைத் தட்டுக, 216