பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி தக்கைக்கு மேலே இருக்குமாறு ஊசி களைச் சுமார் 13 மி. மீ. குறுக்கு விட்டமுள்ள சிறிய தட்டையான தக்கைகளினூடே செலுத் துக. ஒரு கூலத் தட்டு (Cereal dish) அல்லது சாறுணும் தட்டில் சாய்வுள்ள பக்கங்கள் வரை நீரினல் நிரப்புக. நீரில் கூறிய முனை கீழ் இருக்குமாறு காந்தங்களே மிதக்கவிடுக. இப் பொழுது ஒரு வலுவான காந்தத்தின் ஒரு முனையை மிதக்கும் ஊசிகட்குமேல் கொணர்க. АД 〈〉 ് ΔΚ) மற்ருெரு முனையையும் கொண்டு இங்ங்னம் முயலுக. இத்தகைய மிதக்கும் காந்தங்கள் தட்டில் வெவ்வேறு கோலங்களில் ஒழுங்கு படுத்தப்பெறுதல் கூடும். நீங்கள் முயலுவ தற்கு ஒரு சில கோலங்கள் ஈண்டுக் காட்டப் பெறுகின்றன. 30. காந்தத்தினுல் அதிர்வடையும் சாதனம் : U-வடிவமுள்ள ஒரு காந்தத்தை அதன் பக் கத்தில் நிற்குமாறு அமைத்து அதன் கீழ்த் துருவத்தின்மீது ஒர் ஊசி அல்லது சவரவாள் அலகினை வைத்திடுக. அது செங்குத்தாக நிற் கும். ஒரு பென்சிலால் அதன் தனி முனையை அடித்து அஃது எவ்வளவு நன்ருக அதிர்வடை கின்றது என்பதை உற்றுநோக்குக. - 31. காற்றில் ஊசியை மிதக்கச் செய்தல்: நூல் கோக்கப்பெற்ற ஓர் ஊசியைப் பயன் படுத்துக. ஊசியை மேசையின்மீது கிடக் கும் காந்தத்தின் ஒரு துருவத்தின்மீது இழுத் திடுக. ஊசி முற்றிலும் காந்தமாகும்வரை அஃது இந்தத் துருவத்தின்மீதே கிடக்கட்டும். இப்பொழுது கவனமாக ஊசியை இந்தத் துரு வத்தினின்றும் தளர்த்தி நூலைக்கொண்டு காத்தத் தன்மை அது மற்ருெரு துருவத்தின்மீது வரும் வரையி லும் அதனை உயர்த்துக. கவனமாகச் சூழ்ச்சித் திறனுடன் கையாளப்பெற்ருல் ஊசி மற்றெரு துருவத்தின்மேல் காற்றில் மிதக்கும். ஏன் இவ்வாறு நிகழ்கின்றது என்பதை நீங்கள் விளக்கக்கூடுமா? 32. எங்ஙனம் அ ட் ைப த் திசைகாட்டியினை அமைப்பது? : - அகன்ற வாயினையுடைய ஒரு கண்ணுடிச் சாடியினைக் கைவசப்படுத்துக. ஓர் அட்டை அல்லது விறைப்பான தாளை அஃது சாடியினுள் புகுவதற்கேற்பவும் உட்பக்கத்தில் திரும்பு வதற்கேற்பவும் இருக்குமாறு மடித்திடுக. அட்டையை விடச் சற்று நீளமாகவுள்ள எஃகா லான ஒரு மூட்டும் ஊசியைக் காந்தமாக்குக. (சோதனை-3 ஐப் பார்க்க.) காந்தமாக்கப் பெற்ற ஊசியை அட்டையினூடே செலுத்தி அட்டையும் ஊசியும் சமநிலையில் இருக்குமாறு அதனை ஒரு நூலில் தொங்கவிடுக. சரியான சமநிலையை அடைவதற்கு ஊசி உள்ளும் புறமு மாக நகர்த்தப்பெறலாம். சாடியின் வாயின் குறுக்கே வைக்கப்பெற்றுள்ள ஒரு தீக்குச்சி அல்லது நீண்ட மரத் துண்டில் நூலின் முனை யைக் கட்டிவிடுக. - 33. காந்த மீன் பிடிக்கும் விளையாட்டு: பல டெசி மீட்டர் நீளமுள்ள கயிற்றில் ஒரு வலுவான காந்தத்தைக் கட்டுக. அக்கயிற் றினை ஒரு சிறிய மீன் பிடிக்கும் கோல் அல்லது குச்சியுடன் இணைத்திடுக. இரும்பினுலான பல்வேறு வகைச் சிறிய பொருள்களை ஒரு திரைக்குப் பின்னர் மேசையின்மீது பரப்புக, ஆணிகள், திருகாணிகள், போல்ட்டுகள், மரை கள், பெருவிரல் ஆணிகள் முதலியவை பயன் படுத்தப்பெறலாம். இந்தப் பொருள்கள் ஒவ் 219