பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுவதற்கு மேல் தாங்கியாகத் துணைபுரிகின் றது. மெல்லிய தாமிரக் கம்பியினின்றும் காந் தத்தைத் தாங்கும் ஓர் உறுப்பினே ஆக்குக. கம்பியின் கீழ்முனையில் ஒரு காற்ருடி இற கினைப் பற்ருசு வைத்துப் பொருத்துக. ஓர் ஒளிக்கற்றையைத் திருப்பம் செய்வதற் காக ஒரு சிறு ஆடித் துண்டினை காந்தத்தைத் தாங்கும் உறுப்புடன் இணைத்திடுக. ஏறத் தாழ 3 செ.மீ. ஆழத்திற்கு சோதனைக் குழலில் எண்ணெயை ஊற்று க. தொங்கவிடப்பெற்ற காந்தத்தையும் தாங்கும் உறுப்பினையும் குழலி னுள் இறக்கி நனையும் காற்ருடி இறகு எண் ணெயினுள் சற்று முழுகுவதற்கேற்ப மேல் தாங்கியை ஒழுங்குபடுத்துக. 37. அதிர்வு காந்தமானி : வலுவாகக் காந்தமாக்கப்பெற்ற சிறிய கோபால்ட்டு அல்லது டைகோனல் (Ticonal) காந்தங்கள் இப்பொழுது கிடைக்கின்றன : அவை ஒரு மாதிரிக் குழலுள் பட்டில் தொங்க விடப்பெற்ருல் மிகச் சிறந்த அதிர்வு காந்த மானிகளாகின்றன. இங்கு நனதல்’ செயல் இல்லையாதலின், ஊசலாட்டத்தின் அதிர்வுக் காலம் காந்தம் வைக்கப்பெற்றுள்ள காந்தப் புலத்தின் உறைப்பினைக் காட்டும் ஓர் அளவா ஒரு மரமூடியைக் கொண்ட ஒரு பாதுகாக் கும் சாடியைப் பயன்படுத்தி ஒரு பெரிய மாதிரிக் கருவி எளிதாக அமைக்கப்பெறுகின்றது. ஒரு பித்தளை இணைப்புறுப்பு மேல் தாங்கியின் ஒரு பொருத்தமான இடுக்கியாகப் பயன்படுகின்றது. இக்கருவி பயனில் இல்லாதபொழுது காந்தம் காந்தத் தன்மை அடிமட்டத்தைத் தொடுமாறு இறக்கப் பெறு தல் கூடும். இந்த முன்னெச்சரிக்கை தொங் குதலின் ஆயுளை அதிகரிக்கச் செய்கின்றது. குறிப்பு : அதிர்வினை நனைதல்’ என்பதற்கு அதன் வீச்சினைக் (Amplitude) குறைப்பது என்பது பொருளாகும். 38. காந்தமாக்கும் சுருளே அமைத்தல் : நெருக்கமாகத் தாமிரக் கம்பியால் சுற்றப் பெற்ற ஒரு சாதாரணக் கண்ணுடிக் குழல் தையலூசிகளைக் காந்தமாக்கப் பயன்படுகின் றது. தேவையான மின்ளுேட்டத்தை ஒரு இதிைலுந்தி மின்சாரக் கைவிளக்கிலுள்ள மின்கலன்கள் தருகின்றன ; தேவைக்குமேல் அதிகமான கால அளவு அவற்றை இணைத்த நிலையில் வைத்திருத்தலாகாது. 39. மின்சாரத்தை அளிக்கும் தலைமை இணைப் புக்கட்குரிய காந்தமாக்கும் சுருளை இயற்றுதல் : இஃது ஒரு குறுகிய காலத்தில் ஒரு மிக வன்மையான மின்ைேட்டம் செலுத்தப்பெறும் ஒரு வரிச்சுற்று (Solenoid) ஆகும். பொறி நுட்பமுள்ள அளவுகள் தறுவாயான (Critical) தன்று; ஆனல் கம்பியின் தடை பயன்படுத்தப் பெறும் மின் அழுத்தத்திற்குப் பொருத்தமான தாக தேர்ந்தெடுக்கப்பெறுதல் வேண்டும். 230.வோல்ட்டுத் த லே ைம இணைப்புடன் (Mains) பயன்படுத்துவதைவிட 12-வோல்ட் டுச் சேம கலத்துடன் (Accumulator) பயன் படுத்தும்பொழுது அஃது இயல்பாகவே மிகக் குறைவானதாக இருக்கும். ஒரு 12-வோல்ட்டு கார் மின்சார அடுக்குடன் (Car battery) பயன் படுத்தும்பொழுது கிட்டத்தட்ட 30 செ.மீ. நீள மும் சுமார் 4 செ.மீ. குறுக்கு விட்டமும் உள்ள ஒர் அட்டைக் குழலின்மீது சுற்றப்பெற்ற 22 SWG காப்பிடப்பெற்ற தாமிரக் கம்பியின் 4 அடுக்குகள் பொருத்தமானவை. சுருள் 230. வோல்ட்டு தலைமை இணைப்புடன் பயன்படுத் தப்பெற்ருல் அதிகமான பல சுற்றுக்கள் 221