பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தத் தன்மை தேவைப்படுகின்றன. பதினைந்து அடுக்குகள் ஓர் உறைப்பான மின் புலத்தைத் தரும்; இறுதி நான்கு சுற்றுக்கள் இளுமல் செய்யப்பெற்ற யுராக்கா’ (Euraka) தடைக் கம்பியா லாகியிருந்தால் இந்த எண் இன்னும் குறைக்கப் பெறுதல் கூடும். மின்னேட்டம் மிகக் குறுகிய காலத்திற்கே தேவைப்படுவதால், மின்சுற்றில் ஓர் அமுக்கு மின்சாரப் பொத்தானைச் சேர்ப் பது ஒரு நல்ல திட்டமாகும்; ஒரு காரைத் தொடக்கும் மின்சாரப் பொத்தான் மிகவும் பொருத்தமானது. ஈண்டுக் குறிப்பிட்ட அளவுகளுள்ள ஒரு அட்டைக் குழலினைப் பெறுக. ஒரு துளையுடன் கூடிய இரண்டு கோடித் தாங்கிகளை அமைத் திடுக; இத்துளையுடன் குழல் இணைக்கப்பெறு கின்றது. ஒரு கடைசல் பிடிக்கும் பொறி (Lathe) அல்லது கையில்ை துளையிடும் பொறியினைப் பயன்படுத்திக் கம்பியைச் சுற்றுதல் விரும்பத் தக்கது. மர அடித்தளத்தினூடேயும் கோடித் தாங்கிகளினுள்ளேயும் கம்பி செல்லும் திரு காணிகளுடன் கூடிய ஒரு வரிச்சுற்றினைக் (Solenoid) கைவசப் படுத்துக. கம்பியின் முனைகளை இரண்டு காப்பிடப்பெற்ற மின் கோடிகளுடன் ஒரு மின்சாரப் பொத்தானுடன் (Switch) தொடர் அடுக்கு இணைப்பில் (In series) இணைத்திடுக. மின்ைேட்ட மூலத் துடன் இணைத்து, காந்தமாக்கப்பெறவேண் டிய பொருளைச் சுருளினுடன் இருக்குமாறு பிடித்துக்கொள்க; நேர் மின்னேட்டம் பயன் படுத்தப்பெற்ருல் கணநேரமே நிலைத்து நிற்குமாறு மின்சாரப் பொத்தானை அழுத்துக. உண்டாக்கப்பெறும் துருவத்துவம் சுருளின் துருவத்துவத்தைப் போன்றே அமையும். மாறு மின்னுேட்டத்தைக் கொண்டு பின்னர் துருவத்துவம் கண்டறியப்பெறுதல் வேண்டும்; காந்தம் ஆக்கலின் உறைப்பு மின்ளுேட்டம் திருப்பிவிடப்பெற்ற சரியான கண நேரத்தைப் பொறுத்துள்ளது. ஆதலின் ஒன்றுக்கு மேற் பட்ட முயற்சியினை மேற்கொள்வது இன்றி யமையாததாகலாம். மாறு மின்னேட்டத்தைக் கொண்டு காந்த வலிவகற்றுவதற்கு இச்சுருள் பயன்படுத்தப் பெறுதல் கூடும். இதற்குச் செய்முறை (Procedure) பின்வருமாறு : சுருளின் உட்புறத்தில் காந்தத்தை வைத்து மின்னேட்டத்தைத் திருப்பி விடுக; மின்ளுேட்டம் பாய்ந்து கொண் டிருக்கும்பொழுது, அது பாய்வதை நிறுத்து வதற்கு முன்னர் அச்சின் நெடுக சுமார் 2 கெஜ தூரத்திற்கு காந்தத்தைப் பின்னிழுத்திடுக; கைக் கடிகாரம் இயற்றுவோர் இன்னும் மிகச் சிறிய சுருளைப் பயன்படுத்தியபோதிலும், ஒரு கைக் கடிகாரத்தை மின்வலியகற்றுவதற்கு இத் தகைய சுற்றினைப் பயன்படுத்துவது முற்றிலும் பாதுகாப்பானதாகும். 222