பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 15 மின்சாரப் படிப்புபற்றிய சோதனைகளும் பொருள்களும் A. கில மின்சாரம் காற்று உலர்ந்த நிலையிலிருக்கும்பொழுது இச் சோதனைகள் யாவும் மிகவும் நன்கு செயற்படுகின்றன. - 1. பொருள்களைச் சேர்த்துத் தேய்த்தலால் மின் சாரம் அடையப் பெறுதல் கூடும் : ஒரு தக்கையை ஓர் அரத்தால் அராவி மிக நுண்ணிய துகள்களாலான ஒரு குவியலே உண் டாக்குக. ஒரு மெல்லிய தாளினைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டுக. ஒரு பிளாஸ்டிக் சீப்பு, ஒரு பிளாஸ்டிக் பென்சில், ஒரு பிளாஸ்டிக் ஊற் றுப் பேணு, ஓர் அரக்குக் கோல், ஓர் இரப்பர்ப் பலூன், ஒரு கண்ணுடி அல்லது பீங்கான் (China) தட்டு, வேறு ஏதாவது நீங்கள் காணும் உலோகமல்லாத பொருள்கள் - இவற்றினைப் பெறுக. இந்த ஒவ்வொரு பொருளையும் உங் களுடைய மயிரால் அல்லது கம்பளத்தால் வேக மாகத் தேய்த்து அதன் பிறகு அதனை தக்கைத் துகள்களருகில் கொண்டு வருக. மீண்டும் அவற்றைத் தேய்த்து மெல்லிய தாள் குவியலரு கில் கொண்டு வருக. என்ன நேரிடுகின்றது என்பதை உற்றுநோக்குக. ஒவ்வொரு பொரு ளையும் முறையாகப் பட்டுத் துணியால் தேய்த்து இச்சோதனையை திரும்பத் திரும்பச் செய்திடுக. அங்ங்னமே, மென் கம்பளத்தைப் (Flamel) பயன்படுத்திச் சோதனையைத் திரும்பவும் செய்திடுக. 2. நிலை மின்சாரம் எங்கு உள்ளது ? ஊதி உப்பச் செய்யப்பெற்ற பலூன் ஒன் றினை உங்கள் தலை மயிரில் தேய்த்து அதன் பிறகு அதனை ஒரு மெல்லிய தாள் அல்லது தக்கைத் துகள்களருகில் கொண்டு வருக. ஒரு சீப்பினையும் ஒரு பிளாஸ்டிக் வரைகோலே யும் (Ruler) பயன்படுத்தி இதையே திரும்பவும் செய்திடுக. உங்கள் ஊற்றுப் பேணுவை உங் கள் மேல் அங்கியின் கையில் (Sleeve) தேய்த்து அது நிலை மின்னேட் L-350 BC (Static charge) Glush றுள்ளதா என்று சோதித்திடுக. சுமார் 5 செ.மீ. அகலமும் 30 செ.மீ. நீளமும் உள்ள இரண்டு செய்தித் தாள் துண்டுகளைச் சேர்த்துப் பிடித் துக் கொள்க. உங்களுடைய மற். ருெரு கையின் பெரு விரலாலும் மற் ருெரு விரலாலும் அவற்றை நீளப் போக்கில் வருடுகுக. என்ன நேரிடுகின்றது ? எங்கும் நிலைமின்சாரம் உள்ளது என்பதைக் காட்டும் வேறு சோதனைகளையும் புதிதாக ஏற் பாடு செய்ய முயலுக. 3. நில மின்சாரத்தினின்றும் ஒளி: ஒர் ஒளிரும் ஒளி விளக்குக் குழலைக் (Fluorescent light bulb) spassue=ú LI@ ¡g¡¡ës. § ř இருட்டான அறையில் அதனை ஒரு கம்பளம் அல்லது மென் கம்பளத்தைக் கொண்டு தேய்த்திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர் கள் ? 223.