பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A நில மின்சாரம் 4. நில மின்சாரத்தில்ை நடனமாடும் உருவங் கள் : சுமார் 2.5 செ.மீ. ஆழமுள்ள ஓர் அலுமினி யச் சாறுனும் தட்டையும் அதனை மூடுவதற் கேற்ற ஒரு கண்ணுடித் தகட்டையும் கைவசப் படுத்துக. ஒவியத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு இழைநார்க் காகிதத்தினின்றும் சில சிறிய பொம்மை உருவங்களை வெட்டுக. குத்துச் கம் இளம் அல்லது கண்ணுடித் மென்தோல் - தகடு காகிதப் கொம்மைகள் சாறுனும் அலுமினிய தட்டு சண்டை செய்கின்றவர்களைப்போல் வேறு சில உருவங்களையும் நீங்கள் வெட்டலாம். உருவங் கள் தட்டின் ஆழத்தை விடச் சற்று சிறிதாக இருத்தல் வேண்டும். தட்டின் அடி மட்டத் தில் உருவங்களை வைத்துத் தட்டினைக் கண் குடித் தகட்டில்ை மூடுக. கண்ணுடியின் மேற் பரப்பின் உச்சியை ஒரு கம்பளம் அல்லது மென் தோலைக் கொண்டு தேய்த்து உருவங்களின் நடனத்தைக் கண்டு களித்திடுக. 5. தாளினக் குதிக்கச் செய்வ தெங்கனம்: : இரண்டு புத்தகங்களின்மீது தங்கியுள்ள ஒரு கண்ணுடித் தகட்டின் அடியில் சில காகிதத் துண்டுகளே வைத்திடுக. கண்ணுடியை ஒரு பட்டு அல்லது மென் கம்பளத்தைக்கொண்டு தேய்த்திடுக. காகிதத் துண்டுகள் மனமகிழச் தாண்டிக் செய்யும் முறையில் தொடங்குகின்றன. மின்னூட்டம் பெற்ற கண்ணுடித் தகட்டினல் அவற்றின்மீது தூண்டப்பெறும் மின்னூட் டமே அவை கவரப்பெறுவதற்கு காரண மாகின்றது. அவை தம்முடைய மின் னுாட்டத்தை விட்டு விட்டதும் அவை திரும் பவும் கீழே விழுந்து விடுகின்றன. தாள் தவளை வடிவத்திலும் வெட்டப்பெறலாம். குதிக்கத் 6. ஒரு மின்சார நிலையில் வான ஊர்தி: இலேசான மெல்லிய அலுமினியத் தகட் டினை ஒரு சிறிய வானவூர்தி வடிவத்தில் வெட் டுக. ஒரு மின்னூட்டம் பெற்ற கெட்டியாக்கிய இரப்பர் (Ebonite) அல்லது பிளாஸ்டிக்கால்ான கோலொன்றினை அதனருகில் கொண்டுவருக. அது கோலினை நோக்கித் தாண்டிக் குதித்துக் கோல் பெற்றுள்ள அதே வகை மின்னூட்டத் தையே பெறுகின்றது; அதன் பிறகு மீண்டும் அதனை விட்டு அப்பால் தாண்டிக் குதிக்கின்றது. நாம் விரும்பும் வரையில் அதனைக் காற்றிலேயே இருக்குமாறு வைத்திருக்கலாம்; அதன் பறக் கும் திசை வெறுத்தொதுக்கலால் (Repulsion) வழிகாட்டப்பெறுதல் கூடும். 7. தேய்த்தலினின்றும் தீப்பொறிகள்: நான்கு நீர் பருக உதவும் கண்ணுடிப் பாத்தி ரங்களைப் பெற்று அவற்றை அணித்தாகச் சேர்ந்திருக்குமாறு கவிழ்ந்த நிலையில் தரையின் மீது அமைத்திடுக. அவை ஒரு நீர்க்குழல் போன்ற ஏதாவது ஓர் உலோகத்தாலாகிய பொருளின் அருகில் இருக்கவேண்டும். கண் ணுடிப் பாத்திரங்களின்மீது யாரையாவது ஒரு வரை நிற்கவைத்திடுக. அவருடைய ஆடையை ஒருமென்மயிருடன்கூடிய மெல்லிய தோலினைக் கொண்டோ அல்லது மிதி வண்டிச் சக்கர உட் குழல் அல்லது ஒரு வெந்நீர்ப் புட்டி போன்ற மடித்த நிலையிலுள்ள ஓர் இரப்பரைக் கொண்டோ ஒரு நிமிட நேரம் துடைத்திடுக. 224