பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெரு குவளையில் மாட்டுக. இப்பொழுது நெட்டிப் பந்தினை உற்றுநோக்குக. உங்கள் சோதனை வெற்றியடைந்தால் மின்சாரம் ஒரு குவளையினின்றும் மற்ருெரு குவளைக்குப் பாயும்; இது நெட்டிப் பந்தினுல் காட்டப்பெறும். 3. மின்சாரம் எங்ங்னம் பாய்கின்றது என்பதைக் காட்ட மற்றெரு வழி: மேலே சோதனை2-இலிருந்து கம்பி இணைப் புடன் கூடிய குவளையைப் பயன்படுத்துக. இந் தத் தடவையில் கம்பியின் மற்ருெரு முனையை இந்த இயலின் முற்பகுதியில் சோதனை 14-இல் இயற்றிய இதழ் நிலை மின்காட்டியுடன் இணைத் திடுக. உங்களுடைய தீப் பொறி தரும் பொறியமைப்பினைக் கொண்டோ, மென்மயிரு டன் கூடிய தோலிளுல் தேய்க்கப்பெற்ற பிளாஸ்டிக் சீப்பினைக் கொண்டோ குவளையின் மீது ஒரு மின்னூட்டத்தை வைத்திடுக. நிலை மின்காட்டியின் இதழை உற்றுநோக்குக. 4. மின்னேட்டங்களைக் காட்டும் எளிய கருவிகளை எங்ங்னம் இயற்றுவது? : சிறிதளவு பஞ்சினல் போர்த்தப்பெற்றுள்ள மணிக் கம்பியினைப் (Bell wire) பெற்றுச் சுமார் 8 செ.மீ. குறுக்குவிட்டமுள்ள ஒரு சாடி யைச் சுற்றிலும் 50 லிருந்து 60 சுற்றுக்கள் வரையிலும் ஒரு கம்பிச் சுருள் அமையுமாறு போர்த்துக. சாடியினின்றும் கம்பியை நழுவச் செய்து அதனைச் சிறு கம்பிகள் அல்லது நாட்ா B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் வினேக்கொண்டு இறுகக் கட்டுக. இந்தக் கம்பிச் சுற்றினை ஒரு மர அடித்தள த்தின்மீது ஏற்றுக. ஒரு தக்கையில் கம்பிச் சுற்று செல்லு வதற்கேற்ப ஒரு துளையை வெட்டுவதாலும் அதன் பிறகு தக்கையையும் கம்பிச் சுருளையும் அடித்தளத்துடன் உருகிய முத்திரை அரக்கி ளுல் நன்கு பிணைப்பதாலும் திசைகாட்டியைப் பிடித்துக்கொள்வதற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பெறுதல் கூடும். தக்கையின்மீது திசைகாட்டியை வைத்திடுக; இப்படி வைப்பத குல் அது சுருளின் திசையுடன் இணையாகக் காட்டுமாறு அமைத்திடல் கூடும். ஓர் உலர்ந்த மின்கலத்தைக் கம்பிச் சுருளுடன் இனத்துத் திசைகாட்டியின் குறிமுள்ளினை உற்றுநோக்குக. அடியில் மணல் மணிக் கம்பிச் சுற்றுக்கள் ஒரு சுருட்டுப் பெட்டியின் மரத்தினின்றும் திசைகாட்டியை உள்ளடக்கி வைப்பதற்கேற்ப சிறிது பெரியதாக இருக்குமாறு ஒரு சிறிய சட் டத்தை அமைத்து, மிகக் கூருணர்வுள்ள கருவி யொன்று இயற்றப்பெறுதல் கூடும். திசை காட்டியைச் சட்டத்தினுள் வைத்து அதன் பிறகு சட்டத்தின்மீது விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு மணிக் கம்பி யினைக்கொண்டு 20 சுற்றுக்கள் அமைத்திடுக. இயல்-14, சோதனை-11இல் விவரிக்கப் பெற்ற அமுக்கு-பொத்தான் திசை காட்டிக் குறிமுள் மேற் குறிப்பிடப்பெற்ற இரண்டு மின்னுேட்டங் காட்டிகளிலும் (Galvanoscope) பயன்படுத்தப்பெறுதல் கூடும். ஒரு தீப் பெட்டியில் இந்தத் திசைகாட்டிக் குறிமுள்ளைப் பயன்படுத்தி ஒரு பயனுள்ள மாதிரிக் கருவி அமைக்கப்பெறுதல் கூடும். பெட்டியினின்றும் இழு அறையை (Drawer) அகற்றி விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அப் பெட்டியைப் பிளந்து திறந்திடுக. இழு அறை யைச் சுற்றிலும் 26 S.W..ே இரட்டை முறை 231