பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் படுத்தி ஒரு வீட்டின் முன் வாயில், பின் வாயில் போன்ற இரண்டு இடங்களினின்றும் ஒரு கதவு மணி இயக்கப்பெறுதல் கூடும். விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு மின் சுற்றினை மேசையின்மீது அமைத்திடுக. தரப் படுத்தப்பெற்ற குறியீடுகளைப் பயன்படுத்தி மின் சுற்றினைக் காட்டும் விளக்கப் படம் ஒன் றினை வரைக. 23. இரண்டு மின் பொத்தான்களினின்றும் எங்ங்ணம் ஒரு விளக்கு கட்டுப்படுத்தப்பெறு கின்றது? : இரண்டு இரட்டை எறி-கத்தி மின் பொத் தான்கள், இரண்டு மின் கலங்கள், ஒரு விளக்கு இவற்றைக்கொண்டு மண்டபத்தின் ஒரு விளக்கு, மேல் மாடி அல்லது கீழ்மாடியிலுள்ள மின் பொத்தான்களின் உதவியினுல் எங்ங்னம் இயக்கப்பெறுகின்றது என்பதைக் காட்டுக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளதைப் போல் மேசையின்மீது ஒரு மின் சுற்றினை அமைத்திடுக. தரப்படுத்தப்பெற்ற குறியீடு களைக்கொண்டு மின் சுற்றின் விளக்கப் படத் தினை வரைக. . 24. ஒரு சிறு அளவிலான தெரு விளக்கு அமைப்பு: கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளமுள்ள காப்பிடப்பெற்ற மணிக் கம்பித் துண்டுகள் இரண்டினை வெட்டுக. ஒவ்வொரு கம்பியிலும் ஆறு இடங்களில் காப்பீட்டுப் பொருளை அகற்றி அவற்றினுாடே சிறிய விளக்குக் கூடு களை இணையான அடுக்கு அமைப்பு முறை யில் இணைத்திடுக. விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு இரண்டு நாற்காலிகளிடை யில் கம்பிகளே இணைத்து ஒரு கோடியிலுள்ள கம்பிகளைத் தனித்தனியே விட்டுவிடுக. அடுத்த கோடியிலுள்ள கம்பிகளே இரண்டு உலர்ந்த மின் கலங்களுடன் இணைத்திடுக. விளக்குக் உலர்ந்த விளக்குக் மின் கலங்கள் கூடுகள் | يتميز नृ= கைவிளக்கு மின் குமிழ்கள் கூடுகளின் மின்சாரக் கைவிளக்கு மின் குமிழ் களைத் திருகிவிடுக. 25. மின்சாரத்தினின்றும் நாம் வெப்பத்தையும் ஒளியினையும் எங்ங்னம் பெறுகின்ருேம் : ஒரு சிறிய புட்டியில் பொருந்தும் ஒரு தட்டையான தக்கையின் வழியாக இரண்டு மணிக் கம்பிகளின் முனைகளைச் செலுத்துக. ஒரு நீண்ட தக்கையின் முனையை வெட்டி எறிந்து ஒரு பொருத்தமான தக்கையினை ஆக்கிக் கொள்ளலாம்; அல்லது அதற்குப் பதிலாக ஒர் இரு-துளை இரப்பர் அடைப்பானைப் பயன்படுத் திக்கொள்ளவும் செய்யலாம். இப்பொழுது ஒரு சாதாரண பட இரும்புக் கயிற்றின் முறுக் கினைப் பிரித்து ஒரு புரியின் சிறு துண்டொன் றினை வெட்டுக. இந்தச் சிறு படக் கம்பியினை நீட்டிக் கொண்டிருக்கும் தாமிரக் கம்பியின் முனைகளைச் சுற்றிச் சுற்றித் தக்கையினை ஒரு' புட்டியினுள் செருகுக. இந்த அமைப்பு ஒரு மின் விளக்கின் பண்படாத மாதிரி அமைப் பாகத் துணைபுரியும். இந்தமாதிரி அமைப்பு மின்விளக்கினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலர்ந்த மின் கலங்களும் மின் பொத்தானும் கொண்ட ஒரு மின் சுற்றுடன் இணைத்திடுக. மெல்லிய கம்பி (கம்பி இழை) ஒளிவிடத் தொடங்கும்வரையி லும் மின் பொத்தானைப் போட்டு மின் சுற்றினை மூடுக; அதன் பிறகு மீண்டும் பொத்தானத் திறந்திடுக. கம்பி இழை எரிந்துபோவதற்கு 238