பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(. காந்தத் தன்மையும் மின்னற்றலும் துளைகள் இடப்பெறலாம். கட்டையின் ஒரு முனையில் ஒரு திருகாணியை அமைத்து அதன் மறு முனையில் இந்த உலோகத்தினை இணைத் திடுக; இந்த ஏற்பாட்டினுல் உலோகம் திருகாணியின் கொண்டையின்மீது அமுக்கப் பெறுங்கால், அஃது இடைவெளியைப் பாலம் போல் ஒன்றுசேர்க்கின்றது. படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு, உங்க ளது தந்தி ஒலிப்பான், இரண்டு மின் கலங் கள், சாவி இவற்றைத் தொடர் அடுக்கு இணைப்பு முறையில் இணைத்திடுக. இப் பொழுது நீங்கள் செய்தி அனுப்பு ஆயத்தமாக இருக்கின்றீர்கள். சாவியை அதிரச் செய்து நீங்கள் தொடர்ச்சியான கிலிக் ஒலியை அடையாவிடில், ஒன்று உங்கள் இணைப்புக்கள் தளர்ச்சியானவையாக இருத்தல் வேண்டும்; அல்லது இரப்பர்ப் பட்டை சரியாக ஒழுங்கு படுத்தப்பெறுதல் வேண்டும். 13. ஒலிக் கருவியை (Buzzer) இயற்றுவதில் மற்ருெரு வழி : ஒலிக் கருவி தந்திக் கரு வி யி னே ப் போன்றதே. இரண்டிற்கும் ஒரே ஒரு வேற் றுமை உண்டு. நீங்கள் மின் சுற்றினை மூடும் பொழுது ஒலிக் கருவி கிலிக் என்ற ஒலி யினைத் தருவதற்குப் பதிலாக அஃது இரைச்ச லிடும் ஒலியினை உண்டாக்குகின்றது. நீங்கள் சாவியை அமுக்கும்பொழுது அது தானுகவே விளுடிக்குப் பல தடவை மின் சுற்றினை இணைத்துக்கொண்டும் துண்டித்துக்கொண்டும் இயங்குமாறு அஃது அமைக்கப்பெற்றுள்ளது. இரைச்சல் ஒலியினை உண்டாக்குவதற் கேற்ப சுழல் சுருள் அதிர்வடைகின்றது; நீங்கள் சாவியை அமுக்கிக்கொண்டிருக்கும் வரையில் இந்த ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயுள்ளது. குறியீட்டினை . (Code) அனுப்புவதற்கு ஒலிக் கருவி மிக நன்ருக அமைகின்றது; ஒரு குறுகிய ஒலி புள்ளி'யை யும் (Dot), ஒரு நீண்ட ஒலி கீற்றினையும்' (Dash) உணர்த்துகின்றன. அது வாளுெலிக் குறியீட்டினைப்போல் ஒலிக்கின்றது; ஆகவே அது வாளுெவிமூலம் அனுப்புவதற்கும் பெறு வதற்கும் கற்றுக் கொள்வதற்குத் தந்திக் கருவியை விடச் சிறந்ததாகின்றது. அடித்தளத்திற்கும் ஏற்றி அமைப்பதற்கும் முறையே 13x15.5 செ.மீ., 5 x 5 செ. மீ., 57X 5 செ.மீ. அளவுகளுள்ள மூன்று பலகைத் துண்டுகளை வெட்டுக. காந்தத்தைப் பிடித் துக் கொள்வதற்காக அடித்தளப் பலகையின் ஒரத்திலிருந்து சுமார் 6:5 செ.மீ தூரத்தில் போல்ட்டு ஆணியை விடச் சற்று சிறிதாக இருக்குமாறு ஒரு துளையிடுக. காந்தச் சுருளுக் காக ஓர் இரும்புக் கடையினின்றும் 8 செ. மீ.x 4 மி.மீ. அளவுள்ள ஒரு போல்ட்டு ஆணியைக் கைவசப்படுத்துக. கம்பியையும் ஒரு சுரையை யும் பிடித்துக்கொள்வதற்காக இரண்டு வளை யங்களைக் (Washers) கழுத்துப் பட்டைகளாக (Collars) அதன்மீது வைத்திடுக; இவ்வாறு அமைத்திடுங்கால் ஆணியின் மரையிட்ட முனை யில் 15 செ.மீ.க்கு மேல் நீளமுள்ள பகுதியை விட்டுவிடுக. ஒரு மணிக் கம்பியின் முனை களில் 45 செ.மீ. நீளங்களை விட்டு அதனை மிக அழகாக 100 சுற்றுக்களைச் சுற்றுக. இறுதிச் சுற்றில் கம்பி பிரிந்து கொள்ளாதிருக்கும் பொருட்டு அதனைக் கட்டுக; அல்லது அதன் மீது ஒரு நாடாவினைச் சுற்றுக. இப்பொழுது தயாரிக்கப்பெற்ற துளையில் கம்பிச் சுருளைத் திருகி உறுதியான முறையில் ஏற்றி அமைத் திடுக. அதிரும் உறுப்பிற்கு 10.5 செ.மீ. நீளமும் 2 செ. மீ. அகலமும் உள்ள ஒரு மெல்லிய இரும்புத் தகட்டினை அதன் ஒரு புயம்7.5 செ.மீ. இ ரு க் கு மாறு செங்கோணத்தில் வளைத் திடுக. கடிகாரத்தின் மென்மையாக்கப்பெற்ற வில் துண்டு இதற்கு மிகவும் சிறந்தது. இவ் வாறு மென்மையாக்குவதற்கு அதனைச் செந் தழல் நிலைக்குச் சூடாக்கி மெதுவாகக் குளிர விடுக. இத் துண்டினை ஒரு மரக் கட்டையின் மீது வைத்து அதன் குட்டையான புயத்தில் ஒரு பெரிய ஆணியையும் ஒரு சுத்தியையும் கொண்டு இரண்டு துளைகளை இடுக. இத் துண்டினை மரையாணிகளைக்கொண்டு சிறிய மரக் கட்டையில் இணைத்து, மரக்கட்டையை அடித்தளத்துடன் ஆணியடித்துப் பிணைத் திடுக. காந்தத்திற்கு மேல் அதிரும் உறுப்பு 3 மி. மீ.க்கு அதிகமாகாமல் இருக்குமாறு கவ னித்துக் கொள்ள வேண்டும். அங்ங்னம் அது மிகச் சரியாக இராவிட்டால் அதிரும் உறுப் பினை வளைத்துச் சரிபடுத்திக் கொள்ளலாம். 246