பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்பு கொள்ளும் இடத்திற்கு, சுமார் 2.5 செ.மீ நீளமும் 6 மி. மீ, குறுக்களவுமுள்ள ஒரு சிறிய பித்தளை போல்ட்டு ஆணியையும் அதற்குப் பொருத்தமான இரண்டு சுரைகளை யும், 5 செ. மீ. கோண இரும்புச் சட்டத்தினை யும் கைவசப்படுத்துக. பித்தளை போல்ட்டினைக் கோண இரும்புச் சட்டத்திலுள்ள துளைகளில் ஒன்றில் பொருத்துக. இந்தக் கோண இரும் புச் சட்டத்தினை மரையாணிகளைக்கொண்டு 5 x 7.5 செ. மீ. அளவுள்ள மரக் கட்டையின் மீது ஏற்றுக; இங்ங்ணம் அமைத்துக் கட்டையை அதன் நிலையில் பொருத்தும்பொழுது கோண இரும்புச் சட்டத்தின் படுக்கை வசத்திலுள்ள புயம் அதிரும் உறுப்பிற்கு மேல் சுமார் 1.5 செ. மீ. உயரத்தில் அமைந்திருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். பற்றிணைப்பு மரையாணி கடிகார வில் வளையம் சிறிய பித்தளை போல்ட்டு ஆணி இப்பொழுது உங்களுடைய ஒலிக் கருவி யினை (Buzzer) இரண்டு உலர்ந்த மின் கலங்க ளுடனும் நீங்களே அமைத்த சாவியுடனும் C. காந்தத் தன்மையும் மின்னற்றலும் இணைத்திடுக. எல்லா இணைப்புக்களும் இறுக்க மாக உள்ளனவா என்பதையும், இணைப்புக்கள் உள்ள இடங்களில் கம்பிமுழுதும் காப் பின்றி இருக்கின்றதா என்பதையும் உறுதி செய்து கொள்க. சாவியை அமுக்குக; பற்றிணைப்பு மரையாணியைத் திருகி அஃது ஒலிக்குங் கருவியைத் தொடுமாறு செய்யும் பொழுது சாவியை அமுக்கிய நிலையிலேயே வைத்துக் கொள்க. அஃது அதிராவிடில் உப்புத்தாள் அல்லது எஃகு மயிரிழையைக் கொண்டு தொடும் புள்ளியின் மேற்பரப்பில் நன்ருகத் தேய்த்துத் துருவின்றிப் பளபளப் பாக்குக. அஃது அதிரத் தொடங்கியதும், பற்றிணைப்பு மரையாணியை நுட்பமாகச் சரிப்படுத்தியும், அதிரும் உறுப்பிற்கும் காந் தத்திற்கும் இடையில் உள்ள இடம் கிட்டத் தட்டத் தலையூண் கத்தி (Dinner knife)யின் கனத்தின் அளவு இருக்குமாறு அதிரும் உறுப்பினை வளைத்தும் நீங்கள் , அதிரும் ஒலியினை மேம்பாடடையச் செய்யலாம். இப்பொழுது நீங்கள் குறியீட்டினைப் பயில லாம். பல ஒலிக் கருவிகள் செய்யப்பெற் ருல், நீங்கள் அவற்றை ஓர் அறையிலுள்ள மின் சுற்றில் இணைக்கலாம்; அல்லது இரண்டு வீடுகட்கும் இடையில் குறியீட்டுச் செய்தியை அனுப்பலாம். 14. இரு-வழி தந்தி அமைப்பினை எங்ங்னம் இணைப்பது? : மேலே சோதனை-12இல் செய்யப்பெற்றுள் ளவை போன்ற இரண்டு தந்தி ஒலிப்பான்களை யும் சாவிகளையும் நீங்கள் கைவசப்படுத்த முடிந்தால், அடியிற் குறிப்பிடப்பெற்றுள்ள விளக்கப் படங்களைப் பின்பற்றி நீங்கள் இரு-வழி தந்தி அமைப்பினை இயற்றலாம். 247