பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்த் தடை மாற்றியுடனும் மின் குமிழ்க் கூட் டுடனும் இணைத்திடுக (ஆல்ை விழிப்புடன் இருந்திடுக :). தடை மாற்றியை மின் குமிழ்க் கூட்டினுள் செருகுவதற்கு முன்னர் அது திறந்த நிலையிலுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்க. அதன்பிறகு படிப்படியாகத் தடையைக் குறைத்துக் கம்பி செந்தழலாக ஒளி விடும்வரையில் அஃது எங்ங்ணம் படிப்படி யாகச் சூடேறிக்கொண்டே போகின்றது என்ப தைக் கவனித்திடுக. அதன் அருகில் உங்கள் இரும்பு அல்லது நிக்கல்-குரோம் கம்பி கையைப் பிடித்துக் கொள்க. ஒரு துண்டுத் தாள் அல்லது மரச் சிம்பினல் கம்பியைத் தொட்டு அதனைக் கொளுத்துக. இப்பொழுது கம்பி எரியும்வரையில் அல்லது உருகும்வரை யில் மின்னுேட்டத்தை அதிகரித்திடுக. ஒரு துண்டு நிக்கல்-குரோம் கம்பியைக் கைவசப்படுத்துக; இரும்புக் கம்பிக்குப் பதி லாக அதனைப் பயன்படுத்துக. நிக்கல்-குரோம் கம்பி வகைதான் மின்சார அடுப்புச் சுருள்களில் பயன்படுத்தப்பெறும் கம்பியாகும். இஃது எரிந்து போவதற்கு முன்னர் இதனை மற்ற வற்றைவிட மிக அதிகமாகச் சூடாக்க முடியுமா? இந்தச் சோதனை மின்சார அடுப்பினை இயற் D. மின்னற்றலினின்று வெப்பமும் ஒளியும் 5. மின்சாரப் பிறை வளைவு அடுப்பினை (Electric are heater) எங்ங்ணம் இயற்றுவது ?: நாம் அறிந்தவரையில் மின்சாரப் பிறை (Electric arc} மிக அதிகமான ஒளியுள்ள விளக் காக இருப்பதுடன் மனிதன் அறிந்த மிக உறைப்பான வெப்ப மூலமாகவும் திகழ்கின் றது. ஒரு கார்பன் முனையின் மிக ஒளியுள்ள புள்ளி 3760 சென்டிகிரேட் வரை வெப்பமடை கின்றது! கொதிக்கும் நீரின் வெப்ப நிலை 100°C. இரும்பு 1535°C வெப்ப நிலையில் உருகு, கின்றது. ஒரு மின்சாரப் பிறையடுப்பினே அமைத்திடு வதற்கு ஒரு சிறிய தாவர சாடி, தள்ளுபடி செய் யப்பெற்ற மின்சாரக் கைவிளக்கு பாட்டரியி லுள்ள இரண்டு கார்பன் கோல்கள், உட்குழி வான இரண்டு திரைக் கோல்கள் (குழல்கள்), சில மரத் துண்டுகள் ஆகிய இவைதான் தேவைப்படுகின்றன என்பதை அறிந்தால் நீங்கள் அத்தகைய ஓர் அடுப்பு அல்லது உலையை (Furnace) அமைக்கும் வாய்ப்பினைத் தவறவிட மாட்டீர்கள். சாதாரணமாக வழுவழுப்பாகச் செய்யப்படாத 8 செ. மீ. அளவுள்ள ஒரு தாவர சாடியினைக் கைவசப்படுத்துக. அதன் பக்கத்தில், அடி மட்டத்தினின்றும் சுமார் 25 செ.மீ. உயரத்தில் ஒன்றற்கொன்று எதிரெதிராக இருக்குமாறு இரண்டு துளைகளை இடுக. உங்களிடம் துளை யிடும் பொறி இராவிடில் ஒரு முக்கோண அரத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு அதன் முனேயில்ை, அல்லது கூருண் எந்த உலோகப் பொருளாலும் துளைகளை அமைத்து விடலாம். துளைகள் உண்டாக்கப்பெற்றதும் ஓர் அரம் அல்லது வேறு ஒரு பொருத்தமான பொருளைக்கொண்டு அத் துளைகளின் வழி யாகக் கார்பன் கோல்கள் நழுவிச் செல்லுவதற் கேற்ப அவற்றைப் பெரிதாகத் தேய்த்திடுக. இப்பொழுது சுமார் 12 செ. மீ. நீளமுள்ள உட்குழிவான திரைக்கோல் துண்டுகள் இரண் டினை வெட்டுக. உலோகத்தை வெட்டுவதற் குரிய நல்ல கருவி உங்களிடம் இராவிடில், ஒரு முக்கோண அரத்தைக்கொண்டு கோலினைச் சுற்றிலும் பள்ளம் வருமாறு அராவி, அதன் றும் வழியைப்பற்றிய ஒரு கருத்தேற்றத் பிறகு அதனை அந்தப் புள்ளத்தில் ஒடித்து தைத் தருகின்றதா? இந்த மெல்லிய உலோகம் வெட்டப்பெறுதல் XXXIII 257