பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் மின்பகு பொருளுக்கு மின்ளுேட்டத்தைக் கொணர்ந்த மின்-வாய்களுடன் புரியும் செய லெதிர்ச் செயலால் (Interaction)இவ்விளைவுகள் மிகவும் சிக்கலானவையாகின்றன; அடியிற் காணும் சோதனைகளிளுல் ஒரு சில விதிகள் ஆராயப்பெறுதல் கூடும். 1. வெவ்வேறு வகைத் திரவங்களில் கடத்தல் விளைவுகள் : திரவங்கள் வெவ்வேறு வேதியியல் வகைகளா கப் பிரிக்கப்பெறுதல் கூடும். அடியிற் கண்டவை எளிதில் ஆராயப்பெறுதல் கூடும்; (அ) வடிவாலே நீர், எண்ணெய்கள், மெதி லேடட் ஸ்பிரிட்; (ஆ) அமிலங்களும் காரங் களும் எ-டு. நீர்த்த கந்தக அமிலம், நீர்த்த ஹைட்ரோ குளோரிக அமிலம், வெள்ளி நைட் ரேட்டு. - பழைய மின்சாரக் கைவிளக்குப் பாட்டரிகளி னின்றும் இரண்டு சிறிய கார்பன் கோல்களைப் பெறுக ; அவற்றை 2.5 செ. மீ. அகலமும் 10 செ. மீ. நீளமும் உள்ள ஒரு துண்டுப் பலகையில் 2.5 செ. மீ. இடைவெளியிலுள்ள துளைகளில் செலுத்துக. கார்பன் கோல்களின் மீதுள்ள பித்தளை மூடிகளுடன் தாமிரக் கம்பி யினைப் பற்ருசு கொண்டு இணைத்து மின்ளுேட் டம் பெறுவதற்கு ஒரு 6 வோல்ட்டு பாட்டரி யையும் மின்ளுேட்ட உணர் கருவியாக ஒரு 2.5 வோல்ட்டு மின் குமிழையும் பயன்படுத்தித் தொடர்-அடுக்கு இணைப்பு மின் சுற்றினை அமைத்திடுக. — சோதிக்க வேண்டிய திரவத்தை ஒரு சிறிய சாடியில் வைத்து கோல்களை அமிழ்த்துக. சில திரவங்கள் மின்சாரத்தைக் கடத்தாமையை யும், மற்றவற்றில் வாயுக்கள் விடுவிக்கப் E. மின்சாரமும் வேதியியலும் பெறுதலையும், வேறு சிலவற்றில் கோல்களின் மேற்பரப்புக்களில் மாற்றங்கள் நிகழ்வதையும் நீங்கள் காண்பீர்கள். 2. மின் பகுப்பு சேகரித்தல் : மின் வாயுக்கள் វិញ្ចែង់ G៤:៤៨ ட கு ப் பி ஞ ல் விடுவிக்கப்பெற்ற சேகரிக்கப்பெற்ருல் அவை இன்னவை என்று உறுதி செய்யப்பெறுதல் கூடும். திரவத்தின் கொள்கலனுக ஒரு பனிப்பாலடைப் பெட்டியினையும், மின்வாய்களாகக் கார்பன் கோல்களையும், வாயுக்களைச் சேகரிப்ப தற்குச் சிறிய கண்ணுடி சோதனைக் குழல்கள் அல்லது குழல் வடிவாகவுள்ள புட்டிகளையும் பயன்படுத்தி இதனைச் செய்வதற்கு மின் முறிகலம் (Voltameter) என வழங்கப்பெறும் ஓர் எளிய ஆய்கருவி சமைக்கப்பெறுதல் கூடும். முன்போலவே தாமிரக் கம்பிகளைக் கார்பன் கோல்களுடன் பற்ருசு வைத்து இணைத்து அவற்றை ஒரு தக்கை-துளைப் பானைக்கொண்டு இரண்டு பனிப்-பால டைப் பெட்டிகளின் அடியில் செய்யப்பெற்ற துளை களில் இணைத்திடுக ; இரண்டாவது பெட்டி ஆய் கருவிக்கு ஒரு தாங்கியாகப் (Stand) பயன் படுத்தப்பெறுகின்றது. பெட்டிகளின் அடிப் பகுதிகளிரண்டையும் ஒன்ருகச் சேர்த்துப் பிடித்து, பால்சா மர சீமைக்காரை அல்லது வேறு சீமைக்காரையைப் பயன்படுத்திக் கார் பன் கோல்கள் சுமார் 2.5 செ.மீ. நீளம் மேல் கிண்ணத்தினுள் துருத்திக் கொண்டிருக்குமாறு அவற்றை அசையாமல் ஒட்டிவிடுக. கீழ்க் கிண்ணத்தின் பக்கத்திலுள்ள துளைகளின்வழி யாக இணைக்கும் கம்பிகளைச் செலுத்துக. 261