பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. மின் "τσαρώ ைேதியியலும் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மேல் கிண்ணத்தில் ஊற்றி, கண்ணுடிக் குழல் களையும் அதனுல் நிரப்பி அவற்றை ஒவ்வொரு கார்பன் கோல்களின்மீதும் கவிழ்த்திடுக. முன் போலவே கம்பிகளை ஒரு 6-வோல்ட்டு உலர்ந்த பாட்டரியுடன் இணைத்து முடிவுகளுக் காகக் காத்திருக்க. குளோரின் கரையும் தன்மையுடையதாதலின், கரைசல் நிறை நிலை யாதல் வரையில் காத்திருத்தல் இன்றியமை யாதது; ஆளுல் இறுதியில் சம கனபரிமாண முள்ள ஹைட்ரஜனும் குளோரினும் சேகரிக்கப் பெறும். 3. மின் பகுப்பினுல் நிறம் நீக்கும் கரைசலை ஆக்குதல் : ஓர் அரைக் கிண்ண அளவு நீரில் எவ்வளவு கரையுமோ அவ்வளவு சோற்றுப்பினைக் கரைத்து ஒரு தீவிரக் கரைசலைத் தயாரித்திடுக. மேற் சோதனையில் பயன்படுத்திய மின் முறி கலத்தின் கார்பன் கோல்களுக்கிடையில் ஓர் அட்டை ஆப்பினை அமைத்து அதனை இரண்டு சம அளவுள்ள பிரிவு அறைகளாக்குக. உப்புக் கரைசலை அதில் ஊற்றி ஒவ்வொரு பிரிவறை யிலும் ஒரு செந்நிற லிட்மஸ் தாளை வைத்திடுக. 7.5 வோல்ட்டுக்களைப் பயன்படுத்தி கார்பன் கோல்களை வலைக் கம்பிச் (Grid) சார்புடைய ஒரு பாட்டரியுடன் இணைத்திடுக. உடனே ஹைட்ரஜன் குமிழிகள் எதிர் மின்-வாயில் விடு விக்கப்பெறும் ; ஆளுல் குளோரின் கரையுந் தன்மையுடையதாதலின் அது நேர் மின்வாயில் உடனே காணப்பெறுவதில்லை. எனி னும், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு நேர் மின்வாய்ப் பிரிவறையிலுள்ள லிட்மஸ் தாளின் நிறம் நீக்கப்பெறும் ; எதிர் மின்-வாய்ப் பிரி வறையிலுள்ள தாள், சோடியம் ஹைட்ராக் ஸைடு உண்டாக்கப்பெறுவதால், அது நீல நிறமாக மாறும். குளோரின் குமிழிகள் தோன்றத் தொடங் கியதும் மின்ளுேட்டத்தை நிறுத்தி, ஆப்பினே அகற்றி, திரவத்தைக் கிளறிவிடுக. அப்பொழுது சோடியம் ஹைப்போ குளோரைட்டு உண் டாக்கப்பெறும். இது வணிக நிற நீக்கிப் பாய் மங்களில் (Fluids) உள்ள கூட்டுப் பொருளா கும்; ஒரு துளி மையில்ை நிறமூட்டப்பெற்ற ஒரு சோதனைக் குழல் நீரில் அதன் விளைவினைச் சோதித்திடுக. 4. பிரத்தியேகமான கரைசல்களின் மின் பகுப் பினேச் சோதித்தல்: (அ) துத்தநாக சல்ஃபேட்டு, (ஆ) காரீய அசிடேட்டு: (அ) ஒரு மின் முறிகலத்தில் தீவிரமற்ற துத்தநாக சல்ஃபேட்டுக் கரைசலை ஊற்றி, வலைக் கம்பிச் சார்புள்ள ஒரு 2-வோல்ட்டு பாட்டரியைப் பயன்படுத்தி அதனை மின் பகுப்புச் செய்திடுக. கிட்டத்தட்ட உடனே கடற்பஞ்சு போன்ற துத்தநாக மொத்தை (Spongy mass) எதிர் மின்-வாயில் தோன்று கின்றது. . (ஆ) ஒர் அரைக் கிண்ண நீரில் ஒரு சில கிராம் காரிய அசிடேட்டினைச் சேர்த்திடுக. அசிடிக் அமிலத்தில் தோய்க்கப்பெற்ற ஒரு கண்ணுடிக் கோலினுல் கரைசலே நன்ருகக் கிளறி முகிற்படலம் போன்ற தன்மையை அகற்றுக. இந்தத் திரவத்தை மின் முறி கலத்தினுள் ஊற்றி முன்போலவே அதனை ஒரு பாட்டரியுடன் இணைத்திடுக. விரைவில் காரீயம் எதிர் மின், வாயில் ஒரு மரம்' போல் படிகின்றது ; இது வளரும்போது கவனித்தற் குக் கண்ணைக் கவரும் தன்மையுடையது. 5. எளிய காரீய மின் சேமக் கலம் (Accumulator) செயற்படுவதை ஆராய்தல் : சுமார் 1.5 மி. மீ. கனமுள்ள ஒரு காரீயத் தகட்டினின்றும் 15 செ. மீ. நீளமும் 15 மி. மீ. அகலமும் உள்ள துண்டுகளை மின் கலத்தில் தகடுகளாகப் பயன்படுவதற்கு வெட்டுக. ஒவ் வொரு தகட்டின் முனையிலும் துளைகளையிட்டு அவற்றின் வழியாக இணைக்கும் தாமிரக் கம்பி களைச் செலுத்துக. தகடுகளை நீரில் கழுவி அதன் பிறகு அவற்றை எஃகுக் கம்பளம் அல்லது குருத்தங்கல் துணியைக் (Emery cloth) கொண்டு தேய்த்திடுக. அவற்றைச் சிறி தளவு நீர்த்த கந்தக அமிலத்தைக் கொண்ட ஒரு கொதி குழலில் வைத்து ஒரு மரச் சிம்பிளுல் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்திடுக; மேலும், அத் தகடுகள் ஒன்றையொன்று தொடாதிருப்பதற்கேற்ப அவற்றின் உச்சி முனைகளை வளைத்திடுக. முதலில் இந்தத் தகடுகளைக் கடற் பஞ்சு போன்ற காரீயமாகவும் 262