பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 16 ஒளி படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A. ஒளி நேர்க்கோட்டில் செல்கின்றது 1. அடிச்சுவடுகளை உண்டாக்கல் : ஒரு தூசி நிறைந்த சாலை அல்லது மணல் நிறைந்த கடற்கரையைத் தேர்ந்தெடுத்திடுக. தொலைவிலுள்ள ஒரு பொருளில் உங்கள் கண்களைப் பதித்துப் பார்வைக் கோட்டினை மாற்ருமல் அதனை நோக்கி நடந்து செல்க. இப்பொழுது நீங்கள் செய்துள்ள அடிச் சுவடு களை உற்றுநோக்குக ! நீங்கள் ஒரு நேர்க் கோட்டினைப் பின்பற்றியிருப்பதைக் காண் பீர்கள். - 2. ஒரு கயிற்றினுல் : குறைந்தது 25 மீட்டர் நீளமுள்ள ஒரு கயிற் றினைப் பெறுக. கயிற்றின் ஒரு முனையை ஒரு கம்பம் அல்லது மரத்தில் கட்டுக. கயிற்றின் முறுக்கினை இழுத்து மற்ருெரு முனையை உங் கள் கண்ணுடன் பிடித்துக் கொள்க. கயிற்றின் நெடுக நோக்கினல், நீங்கள் கயிறு கட்டப் பெற்ற பொருளினைக் காண்பீர்கள். இப் பொழுது கயிறு நெடுக அல்லாத வேறு திசை யில் நோக்கிளுல், நீங்கள் பொருளினைக் காண மாட்டிர்கள். பொருள்களிலிருந்து ஒளி கண் ணுக்கு நேர்க்கோட்டில் வருகின்றது என்பதை இது காட்டுகின்றது. . 3. அட்டைகளைக் கொண்டு சோதனை : கிட்டத்தட்ட 10 செ. மீ. சதுரமுள்ள நான்கு அட்டைத் துண்டுகளை வெட்டுக. அவற்றைச் சிறிய மரத் துண்டுகளுடன் இணைத்து செங் குத்தாக நிற்குமாறு செய்க. இந்த நான்கு அட்டைகள் ஒவ் வொ ன் றி லும் ஒரே இடத்தில் துளைகளை இடுக ; அஃதாவது இந்த நான்கு அட்டைகளையும் ஒரு நேர்க்கோட்டில் அமைத்தால் நீங்கள் இந்த நான்கு துளை களின்வழியாகவும் நேராகப் பார்க்கும்படியாகத் துளைகள் அட்டைகளில் அமைதல் வேண்டும். இந்த நான்கு அட்டைகளையும் ஒன்றற் கொன்று 30 செ. மீ. இடைவெளியிருக்குமாறு வைத்து இந்த நான்கு துளைகளின் வழியாகப் பார்த்தால் ஒரு மெழுகுவத்தியின் சுவாலே தெரியுமாறு வத்தியைத் தக்கவாறு வைத்திடுக. Q ് இப்பொழுது ஏதாவது ஒர் அட்டையை ஏனையவை இருக்கும் கோட்டிற்கு வெளியே இழுத்திடுக : இப்பொழுது அட்டைத் துளை களின் வழியாகச் சுவாலையைக் காண முயலுக. நீங்கள் அதனைப் பார்க்க முடிகின்றதா? ஏன் பார்க்க முடியவில்லை? இஃது எதனேக் காட்டு கின்றது ? 4. ஊசித்துளை காமிரா : ஒரு தகரக் குவளையின் அடி மட்டத்தில் ஒரு நுண்ணிய துளையை யிட்டும், அதன் உச்சிப் பக்கத்தில் இழுத்துக் கட்டப்பெற்ற ஓர் இழையத் தாளில் பிம்பத்தை ஏற்றும் ஓர் ஊசித்துளை-காமிரா இயற்றப்பெறுதல்கூடும். குவளையைச் சுற்றிலும் ஒரு மாநிறத் தாளினைச் சுற்றுக ; இதல்ை ஒரு காகிதக் குழல் வெளியே துருத்திக் கொண்டு இழையத் தாளுக்குப் பாது காப்பாக அமைகின்றது. இது பகல் ஒளி இழையத்தாளில் விழாதவாறு செய்து துளை யின்வழியாகத் திரையின்மீது விழும் ஒரு சாளரம் அல்லது மெழுகுவத்திச் சுவாலையின் பிம்பம் உற்றுநோக்கப்பெறுவதற்குத் துணை புரிகின்றது. பிம்பத்தைப்பற்றி நீங்கள் கவ னிப்பது என்ன ? ஒளி நேர்க்கோட்டில் செல்லு கின்றது என்பதை இஃது எங்ங்ணம் காட்டு கின்றது? - 5. ஒளிக் கதிர்களை ஆராய்வதற்கு புகைப் பேட்டியை (Smoke box) இயற்றுதல் : கிட்டத்தட்ட 30 செ. மீ. அகலமும் கிட்டத் தட்ட 60 செ. மீ. நீளமும் உள்ள ஒரு மரப் 66