பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. ஒளித்திருப்பம் யுடன் பொருத்துக. மின்சாரக் கைவிளக்கின் ஒளிக்கற்றையை புகைப் பெட்டியினுள் பிடித்து மழு மழுப்பான மேற்பரப்பு ஒழுங்கான ஒளித் திருப்பம் : கண் கூசும் ஒளி விளக்கினின்று முடிவுகளை உற்றுநோக்குக. இதனை முற்கூறிய சோதனையின் ஒழுங்கான ஒளித் திருப்பத் துடன் ஒப்பிடுக. ஓர் ஒழுங்கற்ற மேற்பரப்பி னின்றும் ஒளி, ஒளித் திருப்பத்தால் சிதறச் செய்யப்பெற்ருல் அது பரவி விரவும் (Diffuse) ஒளித் திருப்பம் என்று வழங்கப்பெறுகின்றது. ஓர் ஆடியினின்றும் ஒளித் திருப்பம் பெறும் ஒளிக் கற்றையுடன் நேரான கோட்டில் பொருந்துமாறு உங்கள் கண்ணை வைத்துக் கொள்க. மங்கலாக்கப்பெற்ற செல்லோஃபேன் பரவி விரவும் ஒளித் திருப்பம்; கண் கூச்சம் இல்லே ஒழுங்கற்ற மேற்பரப்பு ஒளித் திருப்பியைப் (Reflector) பயன்படுத்தி இச் சோதனையைத் திரும்பவும் செய்திடுக. உற்று நோக்கி வேற்றுமைகளை விவரித்திடுக. 3. இரப்பர்ப் பந்தினுல் ஒளித் திருப்பம் : ஓர் இரப்பர்ப் பந்தினை ஒளித் திருப்பம் செய் யும் பேற்பரப்பிற்கு நேராகவும் கோணங்களி லும் துள்ளிக் குதிக்குமாறு செய்து ஒரு தரை அல்லது சுவரிலிருந்து ஏற்படும் ஒளித் திருப் பத்தை ஆராய்க. அந்தப் பந்து மேற் பரப்பி னைத் தாங்கும் கோணத்தை உற்றுநோக்கி அஃது ஒளித் திருப்பம் அடையும் கோணத்தை யும் உற்றுநோக்கி இரண்டினையும் ஒப்பிட முயலுக. 4. ஆடியிஞல் ஒளித் திருப்பம் : * கதிரவனின் ஓர் ஒளிக்கற்றை தாக்கி ஒளித் திருப்பம் அடையும் தரையின் ஓரிடத்தின்மீது ஒரு சமதள ஆடியினை வைத்திடுக. ஒளிக் கற்றை ஆடியைத் தாக்கும் இடத்தின்மீது ஒரு பருக உதவும் வைக்கோல் புற்குழலை நேர் குத்தாக நிறுத்துக. படு ஒளிக்கற்றையாலும் (Incident beam) LisbGj960m gp1th Qālijulj பெறும் கோணத்தை ஒளித் திருப்பம் அடைந்த கற்றையாலும் புற்குழலாலும் செய்யப்பெறும் கோணத்துடன் ஒப்பிடுக. - 5. ஒளியின் ஒளித் திருப்பம் அடைந்த கற்றைகளை உண்டாக்கல் : ஒரு வெள்ளே அட்டைத் துண்டின்மீது விழும் கதிரவனின் ஒளிக்கற்றையில் ஒரு சீப் பினைப் பிடித்துக் கொள்க. இந்த ஒளிக் கற்றைகள் பல சென்டி மீட்டர்கள் நீளமாக சீப்பின் வழி யாகப் பிரகா ; சிக்கும் கதிரவ வனின் ஒளிக் கற்றைகள்

f:2

ஒளித் திருப்பம் கெற்ற ஒளிக் கற்றை இருப்பதற்கேற்ப அட்டையை ஒரு புறமாகச் சாய்த்திடுக. வழியில் மூலை விட்டமாக ஓர் ஆடியை வைத்திடுக. ஆடியைத் தாக்கும் ஒளிக் கற்றைகள் அதே கோணத்தில் ஒளித்திருப்பம் அடைவதை உற்றுநோக்குக. ஆடியைத் திருப்பி ஒளித் திருப்பும் அடையும் ஒளிக்கற்றை கள் எங்ங்னம் திரும்புகின்றன என்பதை உற்று நோக்குக. 6. ஒளித் திருப்பம் அடையும் ஒளி படிப்பிற் காக எங்ங்னம் பார்வை மணேயை (Sighting tool) இயற்றுவது? : இப்பொழுது குண்டுசி ஒளியியல் காலவண் னத்திற்கு (Fashion) ஒவ்வாது போயினும், 268