பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த முறை மிகச் சரியான முடிவுகளைத் தர வல்லதாக உள்ளது. குண்டுசிகள் பொருளாக வும் ஒளிக் கதிர்களின் சுவடுகளை அறியவும் பயன்படுத்தப்பெறுவதால் முதல் நிலை மாளுக் கர்களிடையே அடிக்கடி குழப்பம் எழுகின்றது. முதல் சோதனைகளில் பார்வை மனைகள் பயன் படுத்தப்பெறுவதால் இக் குழப்பம் தவிர்க்கப் பெறுகின்றது. 12 செ. மீ. நீளமும் 1.5 செ. மீ. அகலமும் உள்ள ஒரு தகரத் துண்டு ஒரு மனை வடிவில் வளைக்கப்பெறுகின்றது; முனைகள் கால்களாக அமைகின்றன ; அவை ஒவ்வொன் றிலும் ஒரு வெட்டுவாள் அலகினைக்கொண்டு ஒரு பிளவு வெட்டப்பெறுகின்றது. ஒரு குண்டுசி ஒரு பொருளாகப் பயன்படுத்தப் பெற்று அதன் பிம்பம் பிளவுகளின் வழியாக நோக்கப்பெறுகின்றது. அதன் பிறகு ஒளியின் வழியினை அடிச் சுவடு பற்றிச் செல்வதற்குப் பென்சில்அடையாளங்கள் இடப்பெறுகின்றன. 7. ஒளித் திருப்ப விதிகள் : ஒரு வரைகோலைக்கொண்டு ஒரு தாளின் மீது ஒர் உடைபட்ட கோட்டினை வரைக. அடுத்து, அதிலிருந்து ஏதாவது ஒரு கோணத் தில் ஒரு நேர்க்கோட்டினை வரைந்திடுக. இரண்டு கோடுகளும் சந்திக்கும் இடத்தில் ஒரு சிறிய ஆடியினை நேர்க்குத்தாக அமைத்திடுக. ஒளித் திருப்பம் அடைந்த உடைபட்ட கோடு உண்மையான உடைபட்ட கோட்டுடன் ஒரே கோட்டில் அமையும் வரை ஆடியைத் திருப்புக. இப்பொழுது ஆடியில் நோக்கி உங்கள் வரை கோலின் ஒரு முனை நேர்க்கோட்டின் ஒளித் திருப்பத்துடன் ஒரே கோட்டிலிருக்குமாறு வரிசைப்படுத்துக. உங்க ள் பென்சிலேக் கொண்டு இக் கோட்டினை வரைந்து ஒரு B. ஒளித் திருப்பம் கோணமானியால் உடைபட்ட கோட்டின் இரு புறங்களிலுமுள்ள கோணங்களை அளந்திடுக. ஒவ்வொரு தடவையிலும் கோணத்தின் அளவை மாற்றிக்கொண்டு இச் சோதனையை பல தடவைகள் திரும்பத் திரும்பச் செய்திடுக. ஒளி எந்தக் கோணத்தில் ஆடியைத் தாக்கு கின்றதோ அதே கோணத்திலேயே எப்பொழு தும் ஒளித் திருப்பம் பெறுகின்றது என்பதைச் சான்று காட்ட வேண்டும். * வரைகோல் y 8. கதிர்ப் பெட்டிக்காக எங்ஙனம் உருளை வடி வான வில்லையை இயற்றுவது ?: 5 செ. மீ. நீளம், 3 செ. மீ. அகலம், 6 செ. மீ உயரமுள்ள ஒரு பிளாஸ்டிக்கு (Perspex) அல் லது லூசைட்டுத் (Lucite) துண்டின் ஓரங் களே அாத்தால் அராவுக. ஒரு குருந்தங்கல் தாளின் (Emery paper) அடுக்கு உட்புறமாக ஒட்டப்பெற்ற ஒரு தகரக் குவளையின் உட் புறத்தைப் பயன்படுத்தி அதனைத் தீட்டுக. உலோக மெருகிடு பசையையும் பஞ்சையும் கொண்டு இறுதி மெருகிடல் செய்யப்பெறு கின்றது. 269