பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

в. ஒளித் திருப்பம் 9. ஒளிக்கற்றைகட்காக எங்ங்ணம் கதிர்ப் பெட்டியை இயற்றுவது?: மேலே B-Sஇல் விவரிக்கப்பெற்ற உருளை வடிவான வில்லை ஒரு கதிர்ப்பெட்டியில் பயன் படுத்தப்பெறுதல் கூடும். இந்த ஆய்கருவி 22 செ. மீ. நீளமும் 6 செ. மீ. அகலமும் உள்ள இரண்டு நீண்ட சதுரமான பக்கங்களைக் கொண்டது; இப் பக்கங்கள் இரண்டும் ஒரு 2 BA கோவில்ை ஒன்றுசேர்த்துப் பிடித்துக் கொள்ளப்பெற்றுள்ளது , பெட்டியின் ஒரு முனையில் வில்லை வைக்கப்பெற்றுள்ளது. இந்தப் பெட்டிக்கு அடிப்பக்கம் இல்லை ; பயன் படும்பொழுது அஃது ஓவியப் பலகையின்மீது குண்டுசிகளால் குத்திப் பொருத்தப்பெற் றுள்ள தாளின்மீது தங்குகின்றது. இதன் ஒளி மூலம் தானியங்கியின் 12 வோல்ட்டு-24 வாட் விளக்காகும். விளக்குக் கைப்பிடியில் ஒரு மர நழுவத்திலுள்ள துளையில் சரியாகப் பொருந்தக்கூடிய ஒரு பித்தளே சல்லடை அமைந்துள்ளது ; இந்த நழுவம்தான் பெட்டி யின் உச்சிப் பகுதியாகும். திரைகளையும் வடி கட்டிகளையும் வைப்பதற்கு வில்லையின் முன்புற மாக ஒரு பள்ளம் அமைக்கப்பெற்றுள்ளது. ஒரு சிறு பிளவுள்ள அட்டை குறுகிய கதிர்களை யும் வண்ணந் தீட்டுவோரின் மரம்போல் வண்ணந் திட்ட உதவும் சீப்பு கற்றைக் கதிர்களையும் தருகின்றன. நழுவும் உறுப்பின் நிலையை ஒழுங்குபடுத்தி ஒருங்கும் கற்றை இணையான கற்றை அல்லது விரியும் கற்றை அடையப்பெறுகின்றன. சமதளக் கண்ணுடித் துண்டுகள், கண்ணுடிக் கட்டைகள், பட்டகங் கள் இவற்றைப் பயன்படுத்திக் கதிர்களைக் கொண்டு வழக்கமாகவுள்ள எல்லாச் சோதனை களும் செய்யப்பெறுதல் கூடும். ஒரு வளைந்த தகரத்துண்டு காஸ்டிக்கு வளைவினைக் (Caustic curve) #Ti-Goth. வில்லைகளைக் கொண்டு செய்யப்பெறும் சோதனைகளிலும், ஒளி விலகல் (Retraction) சோதனைகளிலும் விளக்கு எவ்வளவுக்கு இய லுமோ அவ்வளவுக்குக் கீழ் தள்ளப்பெறுதல் வேண்டும் ; இதல்ை ஒளி தடையின் மேற் புறம் கடந்து செல்வதில்லை. ஒரு துளையினை யும் குறுக்குக் கம்பிகளையும் உடைய ஓர் அட்டை ஒளி பெஞ்சு சோதனைகளின் ஒரு மூலமாக வில்லேயின் முன்புறம் பயன்படுத்தப்பெறுதல் கூடும். 10. கதிர்ப் பெட்டியுடன் ஒளித்திருப்ப விதி கள் : ஓர் ஆடித் துண்டு பள்ளத்தோடு கூடிய ஒரு தக்கையில் செருகப்பெற்ருே, அல்லது தாள் கவ்வியில் வைக்கப்பெற்ருே நிற்குமாறு அமைக்கப்பெறுதல் கூடும். தாளின் நெடுக ஒளிரப்பெற்ற ஒளிக்கற்றைகள் சிலுவைக் குறிகளால் (Crosses) குறிக்கப்பெறுகின்றன. LIGGÉfessir (Incident įrays), 52 sf.; ÉGŰutò அடைந்த கதிர்கள், செங்குத்துக்கோடு இவை பென்சில் கோடுகளால் சிலுவைக் குறிகள் சேர்க்கப்பெற்று பதிவு செய்யப்படுகின்றன. 11. எளிய ஒளி வட்டத் தட்டு : சாதாரணமாக ஒரு கோணமானியின் குறுக்கு விட்டத்திற்குக் கிட்டத்தட்டச் சரியான குறுக்கு விட்டத்தைக் கொண்ட ஓர் ஆழங் குறைந்த குவளையைப் பெறுக. அதன் உச்சியின்மீது வைப்பதற்கு ஒரு துண்டு வெள்ளை அட்டையை வைத்திடுக; அதனைக் குவளையுடன் பசையில்ை ஒட்டி அதன்மீது பாகைகளே (Degrees) வரைந்திடுக. ஒரு சிறு மரக் கட்டையுடன் ஒர் ஆடித் துண்டினைப் பொருத்தி, அதனை அளவு 270°