பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ஒளி விலகலும் அதன் சயன்களும் படுத்தி ஒளித் திருப்பம் அடைந்த கதிர்களை உற்றுநோக்குக. ஒரு சமதள ஆடியின் ஒளித் திருப்பத்துடனும், ஒரு குழிவான-ஆடியின் ஒளித் திருப்பத்துடனும் இதனை ஒப்பிடுக. C. ஒளி விலகலும் (Retraction) அதன் பயன்களும் 1. கோல் வளைந்துள்ளது போல் காணப்பெறல்: ஓர் உயரமான சாடியிலுள்ள நீரில் ஒரு கோலினை வைத்திடுக; கோலின் ஒரு பகுதி நீர் மட்டத்திற்கு மேலிருக்கட்டும். கோல் எந்த இடத்தில் நீரில் நுழைகின்றது என்பதையும், அது வளைந்திருப்பதுபோல் காணப்பெறு கின்றதா என்பதையும் உற்றுநோக்குக. இது ஒளிக் கதிர்கள் நீரினின்றும் காற்றிற்கு நுழை யும்பொழுது வளைவதால் அல்லது விலகுவதால் (Refracting) உண்டாகச் செய்கின்றது. நீரில் செல்லுவதைவிடக் காற்றில் ஒளி அதிக விரை வாகச் செல்லுகின்றது; ஆகவே, அஃது ஓர் இடைநிலைப் பொருளினின்றும் (Medium) பிறி தோர் இடை நிலைப் பொருளிற்குக் கடந்து செல்லும்பொழுது அது சிறிதளவு வளைக்கப் பெறுகின்றது. 2. ஒளிக் கற்றையில் పోు ను: ஒரு கண்ணுடிப் பாத்திரத்திலுள்ள நீரை புகைப் படலம் போலாக்குவதற்கு அதில் ஒரு சில பால் துளிகளை ஊற்றுக. ஒரு கறுப்பு நிற மான தாள் அல்லது அட்டையில் ஒரு சிறு துளையிடுக. கண்ணுடியை நேர் கதிரவன் ஒளி யில் வைத்திடுக. கண்ணுடியின் முன்புறமாக அட்டையைப் பிடித்துக் கொள்க. ஓர் ஒளிக் கற்றை துளையின்வழியாக ஒளிரும். அந்தத் இடையில் துளையுள்ள கறுப்புக் காகிதத்துண்டு நீர்மட்டித்திற்கு மேல் துளை பால் துளிகளைக்கொண்ட கண்மூடிப் பாத்திரங்கள் துளை நீர் மட்டத்திற்குச் சற்றுக் கீழிருக்குமாறு அட்டையைப் பிடித்துக்கொண்டு நீரில் அந்தக் கற்றையின் திசையை *-ற்றுநோக்குக. இப் பொழுது அக்கற்றை மேற்பரப்பைத் தாக்கும் வரையிலும் அட்டையை உயர்த்துக. ஒளிக் கற்றையின் திசையை உற்றுநோக்குக. ஒளிக் கற்றை எந்தக் கோணத்தில் நீரைத் தாக்கு கின்றதோ அந்தக் கோணம் நீரில் அக்கற்றை யின் திசையை எங்ஙனம் பாதிக்கின்றது என்பு தைக் கண்டறிவதற்குச் சோதனை செய்திடுக. 3. ஒளிவிலகல் புட்டியை எங்ங்ணம் இயற்றுவது?: ஒரு மருந்துப் புட்டியின் வெளிப்புறத்தில் கறுப்பு வண்ணப் பூச்சினைத் தீட்டுக. ஒரு புக் கத்தில் ஒரு வட்டத்தைச் சுரண்டுக; இந்த வட்டத்தின் மையம்வரையில் நீரின் மட்டம் இருக்குமாறு புட்டியை நீரினல் நிரப்புக. புட்டி யின் உச்சிவழியாக ஓர் ஒளிக் ஒளிரும்படி செய்க (ஒரு சிறு பரப்பினின்றும் கறறையை பூச்சு அகற்றப்பெறுதல் வே ண் டு ம்). நீரில் ஒரு துளி பால் விடப்பெற்ருல் அஃது ஒளிக் கற்றையை மிக நன்ருகக் காட்டும். ஒரு பாகைமாணியைக் கொண்டு (Protractor) படுகோணமும் ஒளி விலகு கோணமும் இப் பொழுது அளக்கப்பெறுகின்றன. 4. புகைப் பெட்டியைக்கொண்டு ஒளி விலகல் காட்டப்பெறுதல்: ஒரு புகைப் பெட்டியின் (மேலே சோதனை A5ஐக் காண்க) சாளரத்தின்மீது 8 மி.மீ. சது சத்தில் ஒர் ஒற்றைத் துளையைக்கொண்டு ஒரு 274